இசைப்புயல் ARரஹ்மானின் பொன்னியின் செல்வன் 2 பட இசை விருந்து… ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த அட்டகாசமான ஒரிஜினல் ஸ்கோர் இதோ!

ARரஹ்மானின் பொன்னியின் செல்வன் 2 பட ஒரிஜினல் ஸ்கோர் வெளியீடு,Ponniyin selvan 2 movie original score out now | Galatta

ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்த பொன்னியின் செல்வன் 2 திரைப்படத்தின் ஒரிஜினல் ஸ்கோர் வெளியானது. அமரர் கல்கி அவர்களின் அற்புத படைப்பான பொன்னியின் செல்வன் நாவலை  2 பாகங்கள் கொண்ட படமாக திரை வடிவமாக இயக்குனர் மணிரத்னம் மாற்றி இருக்கிறார். இரண்டு பாகங்களாக பொன்னியின் செல்வனை உருவாக்க, திரைக்கதையில் ஏகப்பட்ட சவால்கள் இருக்கும் அவை அனைத்தையும் மிகச் சரியாக கையாள இயக்குனர் மணிரத்னம் உடன் கைகோர்த்து எழுத்தாளர் ஜெயமோகன் மற்றும் இளங்கோ குமரவேல் இருவரும் திரைக்கதை வசனங்களில் பணியாற்றினர். லைகா ப்ரொடக்ஷன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்க இரண்டு பாகங்களாக உருவான பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு தோட்டா தரணியின் கலை இயக்கத்தில், ரவிவர்மன் ஒளிப்பதிவில், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்ய, இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்தார்.

பொன்னியின் செல்வன் நாவலின் மிக முக்கிய கதாபாத்திரங்களான ஆதித்த கரிகாலன், பொன்னியின் செல்வன் என்கிற அருள் மொழி வர்மன், வல்லவரையன் வந்தியத்தேவன், நந்தினி & ஊமைராணி, குந்தவை, ஆழ்வார்கடியான் நம்பி, பூங்குழலி, பெரிய பழுவேட்டறையர், சிறிய பழுவேட்டறையர், சுந்தர சோழர், பார்த்திபேந்திர பல்லவன், பெரிய வேளாளர் பூதி விக்ரம கேஸரி, வானதி, மதுராந்தகன், சேந்தன் அமுதன், ரவிதாசன், திருக்கோவிலூர் மலையமான், செம்பியன் மாதேவி, அனிருத்த பிரம்மராயர், வீரபாண்டியன் உள்ளிட்ட மிக முக்கிய கதாபாத்திரங்களில் சீயான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, இரட்டை வேடத்தில் ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஜெயராம், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், விக்ரம் பிரபு, இளைய திலகம் பிரபு, ஷோபிதா, ரஹ்மான், அஸ்வின் கக்கமன்னு, கிஷோர், லால், ஜெயசித்ரா, மோகன் ராமன், நாசர் ஆகியோர் நடித்துள்ளனர்.

பொன்னியின் செல்வன் 2 திரைப்படத்தின் கிளைமாக்ஸ் பல வாசகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்தாலும் ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என்று தான் சொல்ல வேண்டும். பொன்னியின் செல்வன் பாகம் 1 திரைப்படம் கடந்த ஆண்டில் வெளிவந்து 500 கோடி ரூபாய் வரை வசூலித்த நிலையில், பொன்னியின் செல்வன் பாகம் 2 திரைப்படம் அதற்கு மேல் வசூலிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் பொன்னியின் செல்வன் 1 அளவிற்கு பொன்னியின் செல்வன் 2 பெரிய வசூல் செய்யவில்லை. பொன்னியின் செல்வன் 2 திரைப்படத்தில் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசை ரசிகர்களால் மிகவும் கொண்டாடப்பட்டது. இதனை அடுத்து பொன்னியின் செல்வன் 2 திரைப்படத்தின் பின்னணி இசை ஒரிஜினல் ஸ்கோர் ட்ராகுகளுக்காக ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு காத்திருந்த நிலையில் காத்திருந்த ரசிகர்களுக்கு விருந்தாக தற்போது பொன்னியின் செல்வன் 2 படத்தின் ஒரிஜினல் ஸ்கோரை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர். இசைப்புயலின் அட்டகாசமான பொன்னியின் செல்வன் 2 ஒனிஜினல் ஸ்கோர் இதோ…