'பாகுபலி இவ்வளவு பெருசாகும்னு ஐடியாவே இல்ல.. முதல்ல வேணாம்னு சொல்லிட்டேன்..'- வைரலாகும் ரம்யா கிருஷ்ணனின் ஸ்பெஷல் பேட்டி!

பாகுபலி படம் பற்றி கலாட்டா பிளஸ் பேட்டியில் பேசிய ரம்யா கிருஷ்ணன்,ramya krishnan had no idea on ss rajamouli in baahubali huge hit | Galatta

தனக்கென தனி ஸ்டைலில் தொடர்ந்து வித்தியாசமான கதாபாத்திரங்களையும் தரமான கதை களங்களையும் தேர்ந்தெடுத்து நடித்து இன்றைய சினிமாவில் தனி சிறப்பு மிக்க நடிகையாக திகழும் நடிகை ரம்யா கிருஷ்ணன் நடிக்கும் ஒவ்வொரு திரைப்படமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற வருகின்றன. அந்த வகையில் படையப்பா திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் நடிகை ரம்யா கிருஷ்ணன் இணைந்த ஜெயிலர் திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 10ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. படையப்பாவில் மிரட்டலான நெகட்டிவா கதாபாத்திரமாக நீலாம்பரி கதாபாத்திரத்தில் நடித்த ரம்யா கிருஷ்ணன் தற்போது ஜெயிலர் திரைப்படத்தில் ரஜினிகாந்த் அவர்களின் ஜோடியாக நடித்திருக்கிறார்.

படையப்பா திரைப்படத்தின் நீலாம்பரி கதாபாத்திரத்திற்கு பிறகு தனது திரைப்பயணத்தில் மிகப்பெரிய உச்சத்தைத் தொட்ட நடிகை ரம்யா கிருஷ்ணன் அடுத்தடுத்து அட்டகாசமான கதாபாத்திரங்களில் நடித்தார். அந்த வகையில் ரம்யா கிருஷ்ணனின் மற்றொரு குறிப்பிடப்படும் கதாபாத்திரம் தான் பாகுபலி படத்தின் சிவகாமி தேவி கதாபாத்திரம். தற்போது மிகவும் ட்ரெண்டாக இருக்கும் பேன் இந்தியா என்ற வார்த்தையை பலரும் பயன்படுத்த காரணமான திரைப்படம் பாகுபலி தான். பிரம்மாண்ட இயக்குனர் SS.ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ் கதாநாயகனாக நடித்த பாகுபலி திரைப்படம் அந்த சமயத்தில் இந்திய சினிமாவின் மிகப்பெரிய வெற்றி படங்களில் ஒன்றாக வசூல் வேட்டை நடத்தியது காலம் கடந்தாலும் பாகுபலி திரைப்படம் இந்திய சினிமாவில் ஒரு பெஞ்ச் மார்க் திரைப்படமாக இருக்ககூடிய  முக்கிய இடத்தை பிடித்திருக்கிறது.

இந்த நிலையில் நமது கலாட்டா பிளஸ் சேனலில் திரு.பரத்வாஜ் ரங்கன் அவர்களுடனான சிறப்பு நேர்காணலில் கலந்து கொண்ட நடிகை ரம்யா கிருஷ்ணன் அவர்கள் நம்மோடு தனது திரைப்பயணத்தின் பல சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்து கொண்டார். அந்த வகையில், தனது திரை பயணத்தின் வளர்ச்சிக்கு காரணமாக அமைந்த திரைப்படங்கள் பற்றி பேசிய போது பாகுபலி திரைப்படம் குறித்தும் ரம்யா கிருஷ்ணன் பகிர்ந்து கொண்டார் அப்படி பேசுவையில், "பாகுபலி திரைப்படமும் இன்னொரு கருவி, என்னுடைய இந்த வேகத்தை அதிகப்படுத்தியது. அப்போது தான் பேன் இந்தியா என்றால் என்ன? என்பது அதன் பிறகு தான் தெரிய வந்தது. அந்தப் படம் அவ்வளவு பெரிதாகும் என்று எனக்கு ஐடியாவே இல்லை. ராஜமௌலி 100% நம்பி இருக்கலாம் மற்ற அனைவரும் நம்பி இருக்கலாம் என்னைத் தவிர, எனக்கு தெரியவில்லை நான் பாட்டுக்கு சென்றேன் என் மகன் பிறந்து ஆறு வயதாக இருக்கும் போது படப்பிடிப்புக்கு சென்றேன். முதலில் வேண்டாம் என சொல்லிவிட்டு, பின்னர் இந்த நேரத்தில்தான் வேலை பார்ப்பேன் 10 நாட்களுக்கு மேல் அவுட்டோர் ஷூட்டுக்கு வர முடியாது. அதன் பிறகு பார்த்தால் நான் இதையெல்லாம் இப்படி ஒரு படத்திற்காக சொன்னேன் என இருந்தது. இவை எல்லாமே எனக்கு ஒரு சர்ப்ரைஸ் தான்."  படையப்பா மற்றும் பாகுபலி திரைப்படங்கள் மட்டுமல்லது ஜெயிலர் திரைப்படம் குறித்தும் பல சுவாரசிய தகவல்களை பகிர்ந்து கொண்ட நடிகை ரம்யா கிருஷ்ணனின் அந்த முழு பேட்டியை கீழே உள்ள லிங்கில் காணலாம்.