பண்டிகை தினத்தில் ரிலீஸாகும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் லால் சலாம்... அதிரடி அறிவிப்புடன் வந்த சர்ப்ரைஸ் போஸ்டர் இதோ!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் லால் சலாம் பட ரிலீஸ் தேதி அறிவிப்பு,superstar rajinikanth in lal salaam movie release announcement | Galatta

கிரிக்கெட்டை மையப்படுத்தி ஸ்போர்ட்ஸ் படமாக தனது மகளும் இயக்குனருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்திருக்கும் லால் சலாம் திரைப்படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு தற்போது வெளிவந்துள்ளது. இந்திய சினிமாவின் உச்ச நட்சத்திர நாயகராக பல கோடி ரசிகர்களின் மனதை வென்ற சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் நடிப்பில் அடுத்தடுத்து தயாராகும் ஒவ்வொரு திரைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருக்கின்றன. முன்னதாக முதல் முறை இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து சமீபத்தில் வெளிவந்த ஜெயிலர் திரைப்படம் 50 நாட்களைக் கடந்து ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பால் இண்டஸ்ட்ரி ஹிட்டாக மாறி பாக்ஸ் ஆபீஸில் 600 கோடிக்கும் மேல் வசூலித்தது. 

அடுத்ததாக சூர்யாவின் ஜெய்பீம் திரைப்படத்தை இயக்கிய TJ.ஞானவேல் முதல் முறையாக சூப்பர் ஸ்டார் நடிக்கும் தலைவர்170 திரைப்படத்தை இயக்க இருக்கிறார்.ஜெயிலர் வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் சூப்பர் ஸ்டாரின் தலைவர் 170 திரைப்படத்திற்கும் ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கிறார். அடுத்த ஓரிரு தினங்களில் தலைவர் 170 படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் பட குழுவினரை தயாரிப்பு நிறுவனம் தற்போது அறிவித்து வருகிறது. இதற்கிடையில் ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்த இந்திய சினிமாவில் மோஸ்ட் வான்டட் இயக்குனராக உருவாகி இருக்கும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் தலைவர் 171 திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளிவந்தது. 

இதனிடையே தனது மகளும் இயக்குனருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் லால் சலாம் திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் மிக மொய்தின் பாய் எனும் முக்கிய கௌரவ வேடத்தில் நடித்துள்ளார். கிரிக்கெட் மற்றும் அதன் அரசியலை மையமாக வைத்த திரைப்படமாக தயாராகும் லால் சலாம் திரைப்படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் கிரிக்கெட் சார்ந்த திரைப்படம் என்பதால் திரைப்படத்தில் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான்களில் ஒருவரான கபில் தேவ் அவர்கள் முதல்முறையாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் இணைந்து இப்படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவில், பிரவீன் பாஸ்கர் படத்தொகுப்பு செய்யும் லால் சலாம் திரைப்படத்திற்கு ஆஸ்கர் நாயகன் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். சமீபத்தில் லால் சலாம் திரைப்படத்தின் படப்பிடிப்பு முற்றிலுமாக நிறைவடைந்த நிலையில் தற்போது இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. 

அந்த வகையில் லால் சலாம் திரைப்படத்தின் முழு டப்பிங்கையும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நிறைவு செய்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று அக்டோபர் 1-ம் தேதி ரசிகர்களுக்கு சர்ப்ரைஸாக லால் சலாம் திரைப்படத்தின் ரிலீஸ் குறித்த அதிரடி அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அடுத்த 2024 ஆம் ஆண்டு பொங்கல் வெளியீடாக லால் சலாம் திரைப்படம் திரைக்கு வருவதாக அதிகாரப்பூர்வமாய் அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக அதே பொங்கல் வெளியீடாக சிவகார்த்திகேயனின் சயின்ஸ் பிக்சன் படமான அயலான் மற்றும் இயக்குனர் சுந்தர்.சி-யின் ஹாரர் காமெடி படமான அரண்மனை 4 உள்ளிட்ட திரைப்படங்களும் பொங்கல் வெளியிடாக ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் லால்சலாம் படமும் பொங்கல் கொண்டாட்டமாக வெளிவர இருப்பதால் இந்த 2024 ஆம் ஆண்டு உங்களுக்கு தரமான விருந்து காத்திருப்பதாக ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். லால்சலாம் ரிலீஸ் குறித்த அறிவிப்பு உடன் வந்த புதிய போஸ்டர் இதோ...
 

LAL SALAAM to hit 🏏 screens on PONGAL 2024 🌾☀️✨

🌟 @rajinikanth
🎬 @ash_rajinikanth
🎶 @arrahman
💫 @TheVishnuVishal & @vikranth_offl
🎥 @DOP_VishnuR
⚒️ @RamuThangraj
✂️🎞️ @BPravinBaaskar
👕 @NjSatz
🎙️ @RIAZtheboss @V4umedia_
🎨🖼️ @kabilanchelliah
🤝 @gkmtamilkumaranpic.twitter.com/4XOg3sozSs

— Lyca Productions (@LycaProductions) October 1, 2023