"பிரம்மாண்ட பொழுதுபோக்கு படமாக.."- ராகவா லாரன்ஸின் சந்திரமுகி 2 பட வெற்றிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து! விவரம் இதோ

ராகவா லாரன்ஸின் சந்திரமுகி 2 பட வெற்றிக்கு ரஜினிகாந்த் வாழ்த்து,rajinikanth wishes to raghava lawrence in chandramukhi 2 movie success | Galatta

ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கும் இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடித்து வெளிவந்த சந்திரமுகி 2 திரைப்படத்தின் வெற்றிக்காக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தனது நல்வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். முன்னதாக மலையாளத்தில் நடிகர் மோகன்லால் நடிப்பில் வெளிவந்த சூப்பர் ஹிட்டான மணிசித்திரதாழ் திரைப்படத்தின் ரீமேக்காக, இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கதாநாயகனாக நடித்து 2005ல் வெளிவந்த திரைப்படம் சந்திரமுகி. தமிழ் சினிமாவில் கடந்த 25 ஆண்டுகளில் அதிக நாட்கள் திரையரங்குகளில் ஓடிய திரைப்படங்களின் பட்டியலில் அசைக்க முடியாத சாதனை படைத்து உச்சத்தில் இருக்கிறது. பக்கா ஃபேமிலி என்டர்டெயின்மென்ட் படமாக இமாலய வெற்றி பெற்ற சந்திரமுகி திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து சந்திரமுகி 2 திரைப்படம் தற்போது தயாராகி இருக்கிறது. 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ஹீரோ கதாபாத்திரத்தில் சந்திரமுகி 2 திரைப்படத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் நடித்துள்ளார். கதையின் நாயகியாக சந்திரமுகி கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நடித்துள்ளார். மேலும் வைகைப்புயல் வடிவேலு, ராதிகா சரத்குமார், ரவிமரியா, மஹிமா நம்பியார், லட்சுமி மேனன், ஷ்ருஷ்டி தாங்கே, சுரேஷ் மேனன், விக்னேஷ் மற்றும் சுபிக்ஷா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் சந்திரமுகி 2 திரைப்படத்தில் நடித்துள்ளனர். தோட்டா தரணி அவர்களின் கலை இயக்கத்தில் R.D.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்யும் சந்திரமுகி 2 திரைப்படத்திற்கு ஆஸ்கார் விருது வென்ற பாகுபலி மற்றும் RRR திரைப்படங்களின் இசையமைப்பாளர் MM.கீரவாணி இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி & கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் PAN இந்தியா படமாக சந்திரமுகி 2 நேற்று செப்டம்பர் 28ஆம் தேதி ரிலீஸாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

முன்னதாக சந்திரமுகி 2 திரைப்படத்தின் படப்பிடிப்புக்கு முன்பாக தனது மானசீக குருவான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை நேரில் சந்தித்து ஆசி பெற்று படப்பிடிப்பை தொடங்கிய ராகுவால் லாரன்ஸ் அவர்கள் ரிலீசுக்கு முன்பும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களையும் நேரில் சந்தித்து ஆசை பெற்றார். ஹாரர் காமெடி திரைப்படங்களில் ஸ்பெஷல் விளங்கும் ராகவா லாரன்ஸ் அவர்களின் காஞ்சனா சீரிஸ் படங்களின் வரிசையில் தற்போது இயக்குனர் பி.வாசு அவர்கள் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடித்திருக்கும் இந்த சந்திரமுகி 2 திரைப்படமும் இடம் பெற்றுள்ளது என சொல்லும் அளவிற்கு இந்த திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு ரசிகர்களிடையே மிகப்பெரிய கவனத்தை ஈர்த்திருக்கிறது. இந்த நிலையில் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் சந்திரமுகி 2 திரைப்படத்தின் வெற்றிக்காக தன்னுடைய வாழ்த்துககளை அறிக்கையாக தயாரிப்பு நிறுவனத்திற்கு வழங்கியிருக்கிறார்.

அந்த அறிக்கையில், "மிகப்பெரிய வெற்றிப்படமான என்னுடைய சந்திரமுகியை புதிதாக வேறு ஒரு கோணத்தில் ஒரு பிரம்மாண்ட பொழுதுபோக்கு படமாக ரசிகர்களுக்கு நண்பர் திரு.வாசு அவர்களுக்கும் அருமையாக நடித்திருக்கும் தம்பி ராகவா லாரன்ஸ் அவர்களுக்கும் மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் என்னுடைய நல்வாழ்த்துக்கள்."  என தெரிவித்துள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் அந்த வாழ்த்து இதோ… 
 

A surprise love note 🕴🏻 from Thalaivar @rajinikanth ✍🏻❤️ We are honored by your praise for #Chandramukhi2 🙏🏻🥳 Thank you Thalaivar! 🤝#PVasu @offl_Lawrence @KanganaTeam @mmkeeravaani @RDRajasekar #ThottaTharani @editoranthony #NVPrasad @SriLakshmiMovie @GokulamMovies @film_dn_pic.twitter.com/KS8NuW5zBK

— Lyca Productions (@LycaProductions) September 29, 2023