சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிளாக்பஸ்டர் ஜெயிலர் பட எமோஷனலான GLIMPSE... ரசிகர்களை கவர்ந்த FEEL OF ஜெயிலர் OST வீடியோ இதோ!

ரஜினிகாந்தின் ஜெயிலர் பட FEEL OF ஜெயிலர் OST வெளியீடு,superstar rajinikanth in jailer movie feel of jailer ost out now | Galatta

முதல் முறையாக இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வெளிவந்து உலக அளவில் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ள ஜெயிலர் திரைப்படத்திலிருந்து சர்ப்ரைஸாக FEEL OF ஜெயிலர் எனும் எமோஷனலான புது வீடியோவை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர். ஒட்டுமொத்த இந்திய சினிமா ரசிகர்களுக்கும் சூப்பர் ஸ்டாராக கிட்டத்தட்ட கடந்த 47 ஆண்டுகளுக்கும் மேலாக தனது ஸ்டைலான நடிப்பால் தொடர்ச்சியாக தனது படங்களின் வழியாக மக்களை மகிழ்வித்து வரும் ரஜினிகாந்த் அவர்களின் நடிப்பில் அடுத்தடுத்து வரவிருக்கும் படங்கள் ரசிகர்களிடையே பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளன. அந்த வகையில் ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்த தலைவர் 171 படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இன்றைய சினிமாவின் மோஸ்ட் வான்டட் இயக்குனராக திகழும் இயக்குனர்கள் லோகேஷ் கனகராஜ் உடன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இணையும் தலைவர் 171 படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் - தளபதி விஜய் கூட்டணியில் வெளிவரவருக்கும் லியோ திரைப்படத்தின் ரிலீஸுக்கு பிறகு தலைவர் 171 படத்தின் இதர அறிவிப்புகள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக தனது மகளும் இயக்குனருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் லால் சலாம் திரைப்படத்தில் மொய்தின் பாய் எனும் முக்கிய கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் நடித்திருக்கிறார். அடுத்ததாக லைகா ப்ரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகும் தலைவர் 170 படத்தில் சூப்பர் ஸ்டார் நடிக்க இருக்கிறார் இத்திரைப்படத்தை சூர்யாவின் ஜெய் பீம் படத்தை இயக்கிய இயக்குனர் TJ.ஞானவேல் இயக்க இருக்கிறார். இந்த தலைவர் 170 திரைப்படத்தின் அறிவிப்புகள் அடுத்த சில வாரங்களில் ஒவ்வொன்றாக வெளிவரும் என ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர். இதற்கிடையில் இயக்குனர் நெல்சன் - சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூட்டணியில் வெளிவந்த ஜெயிலர் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்று தமிழ் சினிமா பாக்ஸ் ஆபீஸில் வரலாற்று சாதனை படைத்திருக்கிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் இணைந்து மலையாள நடிகர் மோகன் லால், கன்னட நடிகர் சிவ ராஜ்குமார், தெலுங்கு நடிகர் சுனில், ஹிந்தி நடிகர் ஜாக்கி ஷெராஃப் ரம்யா கிருஷ்ணன், தமன்னா, வசந்த் ரவி, யோகி பாபு, மலையாள விநாயகன், மிர்னா மேனன் உட்பட பலர் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்துள்ளனர். 

விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவில், நிர்மல் படத்தொகுப்பு செய்ய, ஜெயிலர் திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். ரசிகர்கள் எதிர்பார்த்த அத்தனை சூப்பர் ஸ்டார் அம்சங்களும் நிறைந்த ஜெயிலர் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் கிட்டத்தட்ட 600 கோடிக்கு மேல் வசூலித்திருப்பதாக தெரிகிறது. இந்த நிலையில் ஜெயிலர் திரைப்படத்திலிருந்து சர்ப்ரைஸாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் FEEL OF ஜெயிலர் எனும் எமோஷனலான வீடியோவை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது. ஜெயிலர் படத்தின் முதல் பாதியில் இடம் பெற்ற எமோஷனலான காட்சிகள் மற்றும் கிளைமாக்ஸ் காட்சியை ஒரு தொகுப்பாக வைத்து இசையமைப்பாளர் அனிருத்தின் மனதை உருக்கும் எமோஷனலான FEEL OF ஜெயிலர் OST வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. எமோஷனலான அந்த OST வீடியோ இதோ…