லியோ ரிலீஸுக்கு முன் வெளியாகும் திரிஷாவின் ஆக்சன் படமான தி ரோட்... சிட் ஸ்ரீராம் குரலில் வந்த எமோஷனலான புது பாடல்!

திரிஷாவின் தி ரோட் பட ஓ விதி பாடல் வெளியீடு,trisha in the road movie oh vidhi song lyric video out now | Galatta

திரிஷாவின் அதிரடி ஆக்சன் படமாக வரவிருக்கும் தி ரோட் படத்தில் இருந்து எமோஷனலான புதிய பாடல் வெளிவந்துள்ளது.இந்திய சினிமாவில் முன்னணி நட்சத்திர நாயகிகளில் ஒருவராகவும் கடந்த 22 ஆண்டுகளுக்கும் மேலாக ரசிகர்களின் ஃபேவரட் ஹீரோயினாகவும் வலம் வரும் நடிகை திரிஷா, கடந்து சில மாதங்களுக்கு முன்பு இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்து பிளாக்பஸ்டர் ஹிட்டான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் குண்டமை கதாபாத்திரத்தில் மக்களின் மனதை கவர்ந்தார். தொடர்ந்து த்ரிஷா நடிப்பில் அசத்தலான படங்கள் அடுத்தடுத்து வரிசையாக தயாராக உள்ளன. அந்த வகையில் இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித்குமார் கதாநாயகனாக நடிக்கும் விடாமுயற்சி படத்தில் திரிஷா கதாநாயகியாக நடிக்க இருப்பதாக தெரிகிறது இது குறித்த அறிவிப்பு வெகு விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்ந்து “நாயகன்” படத்திற்கு பிறகு மீண்டும் இணையும் இயக்குனர் மணிரத்னம் உலகநாயகன் கமல்ஹாசன் கூட்டணியில் உருவாகும் KH234 திரைப்படத்திலும் நடிகை திரிஷா முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன அது குறித்து அறிவிப்பும் விரைவில் வெளியாகும் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர். முன்னதாக நடிகர் அரவிந்த் சுவாமியுடன் இணைந்து நடிகை திரிஷா நடித்திருக்கும் சதுரங்க வேட்டை - 2 திரைப்படம் நிறைவடைந்து நீண்ட காலமாக ரிலீஸுக்காக  காத்திருக்கிறது. அதேபோல் முதல் முறையாக த்ரிஷா நடித்திருக்கும் பிருந்தா வெப் சீரீஸ் விரைவில் சோனி லைவ் தளத்தில் ரிலீஸாக இருக்கிறது. இந்த பிருந்தா வெப்சீரிஸில் த்ரிஷா காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து மலையாளத்தில் திரிஷ்யம் திரைப்படத்தின் இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் உருவாகும் ராம் பார்ட் 1 திரைப்படத்தில் திரிஷா தற்போது நடித்து வருகிறார். 

மேலும் தற்போதைய இந்திய சினிமாவில் நட்சத்திர இயக்குனராக விளங்கும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் கதாநாயகனாக நடித்திருக்கும் பக்கா அதிரடி ஆக்சன் பிளாக் திரைப்படமான லியோ படத்தில் த்ரிஷா கதாநாயகியாக நடித்திருக்கிறார். வருகிற அக்டோபர் 19ஆம் தேதி ஆயுத பூஜை வெளியீடாக உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. இதனிடையே லியோ திரைப்படத்தின் ரிலீசுக்கு முன்பாக நடிகை திரிஷா கதாநாயகியாக நடித்திருக்கும் மற்றொரு அதிரடி ஆக்சன் திரைப்படம் ரிலீஸாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அறிமுக இயக்குனர் அருண் வசீகரன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த தி ரோட் திரைப்படத்தில் திரிஷாவுடன் இணைந்து சார்பட்டா பரம்பரை திரைப்படத்தில் டான்சிங் ரோஸ் கதாபாத்திரத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நடிகர் ஷபீர், முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டவரும் பிரபல நடிகருமான சந்தோஷ் பிரதாப், மியா ஜார்ஜ், எம்.எஸ்.பாஸ்கர், வேல ராமமூர்த்தி, நேகா ஷஹின் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். தி ரோட் திரைப்படத்தில் கே.ஜி.வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்ய சாம்.சி.எஸ் இசையமைத்துள்ளார். வருகிற அக்டோபர் 6ம் தேதி தி ரோட் திரைப்படம் உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது. இந்த நிலையில் தி ரோட் படத்திலிருந்து எமோஷனலான “ஓ விதி” எனும் பாடல் தற்போது வெளிவந்துள்ளது. இந்த பாடலை பிரபல பாடகர் சிட் ஸ்ரீராம் பாடியிருக்கிறார். எமோஷனலான அந்த பாடல் இதோ…