அமெரிக்காவிலிருந்து திரும்பியதும் நேராக மருத்துவமனையில் சிகிச்சை பெறும் தந்தை SAC & தாயை சந்தித்த தளபதி விஜய்! வைரல் புகைப்படம் இதோ

அமெரிக்காவிலிருந்து திரும்பியதும் தந்தை தாயை சந்தித்த தளபதி விஜய்,thalapathy vijay met his father sa chandrasekhar and mother at hospital | Galatta

அமெரிக்காவிலிருந்து திரும்பிய தளபதி விஜய் நேராக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தனது தந்தையும் இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் மற்றும் தாயார் ஷோபனாவை சந்தித்துள்ளார். தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திர நாயகராகவும் இந்திய சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராகவும் விளங்கும் தளபதி விஜய் நடிப்பில் அடுத்து வெளிவர இருக்கும் திரைப்படம் லியோ. இந்திய சினிமாவின் மோஸ்ட் வான்டெட் இயக்குனர்களில் ஒருவராக உயர்ந்திருக்கும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் தளபதி விஜய் இரண்டாவது முறை இணைந்திருக்கும் இந்த லியோ திரைப்படம் எக்கச்சக்கமான எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருக்கிறது. தளபதி விஜய் உடன் நீண்ட இடைவெளிக்கு பிறகு லியோ திரைப்படத்தில் இணைந்திருக்கும் திரிஷா கதாநாயகியாக நடிக்க, பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், ஆக்ஷன் கிங் அர்ஜுன், பிரியா ஆனந்த், இயக்குனர் மிஷ்கின், இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன், இயக்குனர் அனுராக் கஷ்யப், மன்சூர் அலிகான், சாண்டி மாஸ்டர், மலையாள நடிகர் மேத்யூ தாமஸ், மறைந்த நடிகர் மனோபாலா, ஜார்ஜ் மர்யன், அபிராமி வெங்கடாசலம், சாந்தி மாயாதேவி மற்றும் பிரபல தமிழ் கிரிக்கெட் வர்ணனையாளர் பிரதீப் முத்து ஆகியோர் லியோ திரைப்படத்தில் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர். 

மனோஜ் பரமஹம்சாவின் ஒளிப்பதிவில், ஃபிலாமின் ராஜ் படத்தொகுப்பு செய்யும் லியோ திரைப்படத்திற்கு ஸ்டண்ட் இயக்குனர்களாக அன்பறிவு மாஸ்டர்கள் பணியாற்ற, அனிருத் இசையமைத்துள்ளார்.  ரிலீசுக்கு இன்னும் ஐந்து வாரங்களே இருக்கும் நிலையில் லியோனி திரைப்படத்திற்கான இறுதிக்கட்ட VFX பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. அடுத்ததாக முதல் முறை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தனது திரைப் பயணத்தில் 68 வது படமாக உருவாகும் தளபதி 68 திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார்.  லியோ திரைப்படத்தின் ரிலீஸ்க்கு பிறகு தளபதி 68 திரைப்படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்பது குறித்தும் நடிகர் நடிகைகள் யார் என்பது குறித்து இதர அறிவிப்புகள் அனைத்தும் ஒவ்வொன்றாக வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு திரைப்படத்தின் முதற்கட்ட பணிகள் அனைத்தும் அமெரிக்காவில் தொடங்கப்பட்டன. 

இதற்காக தளபதி விஜய், இயக்குனர் வெங்கட் பிரபு உள்ளிட்ட பட குழுவினர் அமெரிக்கா சென்று ஹாலிவுட்டின் முன்னணி VFX நிறுவனத்துடன் இணைந்து தளபதி 68 திரைப்படத்திற்கான முதல் கட்டப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே தளபதி விஜய் தற்போது இந்தியா திரும்பி இருக்கிறார். அமெரிக்காவிலிருந்து இந்தியா திரும்பிய தளபதி விஜய் நேராக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தனது தந்தை மற்றும் தாயாரை நேரில் சந்தித்திருக்கிறார். தளபதி விஜயின் தந்தையும் இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் அவர்களுக்கு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒரு மைனர் சர்ஜரி மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தெரிகிறது. இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தனது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் மற்றும் தாயார் ஷோபனாவை தளபதி விஜய் நேரில் சந்தித்த புகைப்படம் தற்போது சமூக வைரலாக பரவி வருகிறது. அந்த புகைப்படம் இதோ…
 

#GALATTAEXCLUSIVE; The moment he returned from the US, Thalapathy @actorvijay headed straight to the hospital to meet his loving dad director #SAChandrasekhar who was recovering after a surgery.#ThalapathyVijay #Leo #Galatta pic.twitter.com/ufEixgPSH3

— Galatta Media (@galattadotcom) September 13, 2023