கார்த்தியின் ஜப்பான் பட அட்டகாசமான புது GLIMPSE... தீபாவளி ரிலீஸுக்காக வேகமெடுக்கும் டப்பிங் பணிகள்! கலக்கல் வீடியோ இதோ

கார்த்தியின் ஜப்பான் பட டப்பிங் தொடங்கப்பட்டதாக வந்த வீடியோ,actor karthi started his dubbing for japan movie | Galatta

இயக்குனர் ராஜு முருகன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் தீபாவளி ரிலீஸாக வெளிவர இருக்கும் ஜப்பான் திரைப்படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கப்பட்டிருப்பதாக புதிய அட்டகாசமான வீடியோ ஒன்றை பட குழு வெளியிட்டுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழும் கார்த்தி நடிப்பில் வரும் ஒவ்வொரு படங்களும் மக்களின் மனதை கவரும் வகையில் வெவ்வேறு கதைகளங்களில் பக்கா ட்ரீட்டாக இருக்கும். அந்த வகையில் தனது 26 ஆவது திரைப்படமாக தமிழ் சினிமாவின் மிக முக்கிய படங்களில் ஒன்றாக அனைத்து ரசிகர்களாலும் கொண்டாடப்பட்ட சூது கவ்வும் மற்றும் காதலும் கடந்து போகும் ஆகிய படங்களின் இயக்குனர் நலன் குமாரசாமி அவர்களின் இயக்கத்தில் உருவாகும் #கார்த்தி26 திரைப்படத்தில் தற்போது கார்த்தி நடித்து வருகிறார். 

இதனைத் தொடர்ந்து கார்த்தி நடிக்கும் அவரது 27 வது படம் குறித்த முக்கிய அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. கடைக்குட்டி சிங்கம் மற்றும் விருமன் ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து கார்த்தியின் இந்த #கார்த்தி27 திரைப்படத்தை சூர்யா மற்றும் ஜோதிகாவின் 2D என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. 96 திரைப்படத்தின் இயக்குனர் பிரேம்குமார் தனது அடுத்த படைப்பாக இயக்கும் இந்த #கார்த்தி27 படத்தில் கார்த்தி உடன் இணைந்து அரவிந்த் சுவாமி முன்னணி கதாப்பாத்திரத்தில் நடிக்க உள்ளார். பி.சி ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்ய 96 படத்தின் இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா இசை அமைக்கிறார். அதன் பின்னர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கைது திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் கார்த்தி.

இதனிடையே தமிழ் சினிமாவின் குறிப்பிடப்படும் இயக்குனர்களில் ஒருவராக குக்கூ, ஜோக்கர் & ஜிப்ஸி என சிறந்த படைப்புகளை வழங்கி வரும் இயக்குனர் ராஜூமுருகன் இயக்கத்தில் தனது திரைப்பயணத்தில் 25வது திரைப்படமாக கார்த்தி நடித்திருக்கும் திரைப்படம் தான் ஜப்பான். கார்த்தியுடன் இணைந்து அனு இமானுவேல் கதாநாயகியாக நடிக்கும் ஜப்பான் திரைப்படத்தில் ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான விஜய் மில்டன் மற்றும் பிரபல தெலுங்கு நடிகர் சுனில் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ரவிவர்மன் ஒளிப்பதிவில் ஃபிலோமின்ராஜ் படத்தொகுப்பு செய்யும் ஜப்பான் படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். கார்த்தியின் திரைப்பயணத்திலேயே வித்தியாசமான திரைப்படமாக தயாராகி இருக்கும் ஜப்பான் திரைப்படம் இந்த 2023 ஆம் ஆண்டு தீபாவளி வெளியீடாக ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதே தீபாவளி வெளியீடாக இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் & SJ.சூர்யா இணைந்து நடித்திருக்கும் ஜிகர்தண்டா படமும் ரிலீஸாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது ஜப்பான் திரைப்படத்தின் டப்பிங் பணிகளை நடிகர் கார்த்தி தொடங்கி இருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளனர். இந்த வீடியோவில் "கர்மானா என்னன்னு தெரியுமா?" என்ற வசனத்தை கார்த்தி பல முயற்சிகள் செய்ய, இயக்குனர் ராஜூமுருகன் வேண்டுமென்றால் டப்பிங் தீபாவளிக்கு பிறகு வைத்துக் கொள்ளலாமா? என கேட்க, நடிகர் கார்த்தி ஜப்பான் கதாபாத்திரத்தில் பேசுவதற்காக ஜப்பான் கதாபாத்திரத்திலேயே உடை மேக்கப் எல்லாம் மாற்றி வந்து டப்பிங் பேசும் கலக்கலான வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. அந்த வீடியோ இதோ…