ராகவா லாரன்ஸின் சந்திரமுகி 2 பட புது ட்ரீட்… அட்டகாசமான தோரி போரி பாடல் லிரிக் வீடியோ இதோ

ராகவா லாரன்ஸின் சந்திரமுகி 2 பட தோரி போரி பாடல் வெளியீடு,raghava lawrence in chandramukhi 2 movie thori bori song out now | Galatta

தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருக்கும் சந்திரமுகி 2 திரைப்படத்திலிருந்து அடுத்த ட்ரீட்டாக "தோரி போரி" என்ற பாடல் தற்போது வெளிவந்துள்ளது. இந்திய சினிமா கொண்டாடும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் திரைப்பயணத்தில் பாபா திரைப்படத்திற்கு பிறகு ஒரு இடைவெளிக்கு பின் ஒரு மிகப்பெரிய வெற்றி தேவைப்பட்ட நிலையில் அப்படி ஒரு பிளாக்பஸ்டர் படமாக அமைந்த படம் தான் சந்திரமுகி. தமிழ் சினிமாவின் மிக முக்கிய இயக்குனர்களில் ஒருவராக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு பணக்காரன் உழைப்பாளி மன்னன் என சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர் பி.வாசு அவர்கள் தான் சந்திரமுகி படத்தையும் இயக்கினார். சந்திரமுகி படத்திற்கு முன்பாக அதன் கன்னட வெர்ஷன் ஆப்தமித்ரா படத்தை பி.வாசு இயக்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  

முன்னதாக மலையாளத்தில் நடிகர் மோகன்லால் நடிப்பில் வெளிவந்த சூப்பர் ஹிட்டான மணிசித்திரதாழ் திரைப்படத்தின் ரீமேக்காக, இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கதாநாயகனாக நடித்து 2005ல் வெளிவந்த சந்திரமுகி திரைப்படம் தமிழ் சினிமாவில் கடந்த 25 ஆண்டுகளில் அதிக நாட்கள் திரையரங்குகளில் ஓடிய திரைப்படங்களின் பட்டியலில் அசைக்க முடியாத சாதனை படைத்து உச்சத்தில் இருக்கிறது. மக்களின் மனம் கவர்ந்த பக்கா ஃபேமிலி என்டர்டெயின்மென்ட் படமாக இமாலய வெற்றி பெற்ற சந்திரமுகி திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து சந்திரமுகி 2 திரைப்படம் தற்போது தயாராகி இருக்கிறது.

சந்திரமுகி 2 திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ஹீரோ கதாபாத்திரத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் நடித்துள்ளார். கதையின் நாயகியாக பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் சந்திரமுகி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் வைகைப்புயல் வடிவேலு, ராதிகா சரத்குமார், ரவிமரியா, மஹிமா நம்பியார், லட்சுமி மேனன், ஷ்ருஷ்டி தாங்கே, சுரேஷ் மேனன், விக்னேஷ் மற்றும் சுபிக்ஷா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் சந்திரமுகி 2 திரைப்படத்தில் நடித்துள்ளனர். தோட்டா தரணி அவர்களின் கலை இயக்கத்தில் R.D.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்யும் சந்திரமுகி 2 திரைப்படத்திற்கு ஆஸ்கார் விருது வென்ற பாகுபலி மற்றும் RRR திரைப்படங்களின் இசையமைப்பாளர் MM.கீரவாணி இசையமைத்துள்ளார். 

வருகிற செப்டம்பர் மாதம் 15ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி வெளியீடாக தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி & கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் பேன் இந்தியா படமாக சந்திரமுகி 2 திரைப்படம் உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில், இறுதி கட்டப் பணிகள் இன்னும் நிறையவடையாத காரணத்தினால் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டு இருப்பதாக அறிவிக்கப்பட்டது.ரிலீசுக்கு இன்னும் கொஞ்ச நாட்களில் இருக்கும் நிலையில் இறுதிக்கட்ட VFX மற்றும் இதர பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. எனவே வருகிற செப்டம்பர் 28ஆம் தேதி சந்திரமுகி 2 திரைப்படம் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் சந்திரமுகி 2 திரைப்படத்திலிருந்து அடுத்த ட்ரீட்டாக "தோரி போரி" என்ற பாடல் தற்போது வெளிவந்துள்ளது. அட்டகாசமான அந்த பாடல் லிரிக் வீடியோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்.