‘அயோத்தி’ படத்தை புகழ்ந்து தள்ளிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.. வைரலாகும் சசிகுமாரின் பதில்.. – விவரம் இதோ..

சசிகுமாரை பாராட்டிய ரஜினிகாந்த் - Rajinikanth appreciate ayothi movie | Galatta

தமிழ் சினிமாவில் மிக முக்கியமான கலைஞர்களில் ஒருவர் சசிகுமார். இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் நடிகருமாகவும் முதல் படமான ‘சுப்பிரமணியபுரம்’ படத்தில் மிக பெரிய ஹிட் கொடுத்து கவனம் பெற்றவர் சசிகுமார். கதாநாயகனாக தமிழ் ரசிகர்கள் வரவேற்பு அளிக்க பின் தொடர்ந்து குட்டி புலி, சுந்தரபாண்டி, நாடோடிகள்,வெற்றிவேல், கிடாரி போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இதில் பெருமபாலான படங்கள் தென் தமிழகத்தில் பெரும் வரவேற்பை பெற்ற படங்களாகும். தற்போது சசிகுமார் பகைவனுக்கு அருள்வாய், நானா, நந்தன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். அதே நேரத்தில் நீண்ட வருடங்களுக்கு பின் சசிகுமார் மீண்டும் இயக்குனராகவும் களம் இறங்கவுள்ளார். பீரியட் திரைப்படமாக உருவாகவுள்ள அப்படத்தில் பிரபல நடிகர் விஜயகாந்த் மகன் சண்முகபாண்டியன் மற்றும் பிரபல பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யாப் ஆகியோர் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடியே சசிகுமார் நடிப்பில் அறிமுக இயக்குனர் மந்திர மூர்த்தி இயக்கி கடந்த மார்ச் 3 ம் தேதி வெளியான திரைப்படம் ‘அயோத்தி’. சுவாரஸ்யமான கதைகளத்தை கையிலெடுத்து அரசியல் கருத்துகளை நேரடியாக பேசிய அயோத்தி திரைப்படம் தமிழகமெங்கும் பெரும் வரவேற்பை பெற்றது. இன்னும் தமிழகமெங்கும் பல திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கின்றன. மேலும் படம் வெளியாகி ஒரு மாதம் முடிந்த இந்நிலையில் கடந்த ஏப்ரல்   7 ம் தேதி பிரபல ஓடிடி தளமான ஜீ 5 ல் வெளியானது. ஓடிடி தளத்த்திலும் நல்ல வரவேற்பை பெற்ற அயோத்தி திரைப்படத்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் சமீபத்தில் பார்த்துள்ளார். பின் படம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பாரட்டுகளை தெரிவித்துள்ளார். அதில். “அயோத்தி… நண்பர் சசிகுமாருக்கு ரொம்ப நாட்களுக்குப் பிறகு அருமையான கருத்துள்ள ஒரு வெற்றிப் படம். முதல் படத்திலேயே தான் ஒரு தலை சிறந்த இயக்குநர் என்று நிரூபித்திருக்கிறார் ஆர். மந்திரமூர்த்தி. தயாரிப்பாளருக்கு என்னுடைய பாராட்டுகளும், வாழ்த்துகளும்! என்று குறிப்பிட்டுள்ளார்.. இதனையடுத்து ரஜினிகாந்த் அவரது பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. ரஜினிகாந்த் புதுமுக திரைப்படங்கள் அல்லது நல்ல திரைப்படங்களை பாராட்டுவதும் அந்த கலைஞர்களை அழைத்து பாராட்டுகளை தெரிவிப்பதும் வழக்கமாக வைத்திருப்பவர். சமீபத்தில் விடுதலை திரைப்படத்தை பாராட்டி அக்குழுவினரையும் பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

நடிகர் எனக் குறிப்பிடாமல், நண்பர் என்று சொன்னதிலேயே மிகுந்த மகிழ்ச்சியடைந்தேன் சார். எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல், மிக எளிய படைப்பாக வந்திருக்கும் #அயோத்தி படத்தை பார்த்துப் பாராட்டியது நல்ல படைப்புகளுக்கான பெரிய நம்பிக்கை கொடுக்கிறது மிக்க நன்றி சார் 🙏
#SuperStar #PettaMalik https://t.co/GKSlupIKLQ

— M.Sasikumar (@SasikumarDir) April 11, 2023

ரஜினிகாந்த் அவர்களின் அயோத்தி திரைப்பட பதிவை அப்பட நடிகர் சசிகுமார் அவர்கள் பகிர்ந்து அதனுடன், நடிகர் எனக் குறிப்பிடாமல், நண்பர் என்று சொன்னதிலேயே மிகுந்த மகிழ்ச்சியடைந்தேன் சார். எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல், மிக எளிய படைப்பாக வந்திருக்கும் அயோத்தி படத்தை பார்த்துப் பாராட்டியது நல்ல படைப்புகளுக்கான பெரிய நம்பிக்கை கொடுக்கிறது மிக்க நன்றி சார் என்று தனது நன்றியினை தெரிவித்துள்ளார் நடிகர் ரஜினிகாந்த். ரஜினி அவர்களுடன் கடந்த 2019 இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியாகி மெகா ஹிட் அடித்த பேட்ட திரைப்படத்தில் நடிகர் சசிகுமார் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

“சீரியஸான காட்சியில் சமந்தா பாடலுக்கு vibe பண்ணிட்டு இருந்தார்” படப்பிடிப்பில் பாரதிராஜா செய்த சேட்டைகள் குறித்து படக்குழுவினர் – கலகலப்பான நேர்காணல் இதோ..
சினிமா

“சீரியஸான காட்சியில் சமந்தா பாடலுக்கு vibe பண்ணிட்டு இருந்தார்” படப்பிடிப்பில் பாரதிராஜா செய்த சேட்டைகள் குறித்து படக்குழுவினர் – கலகலப்பான நேர்காணல் இதோ..

ஏ ஆர் ரகுமான் இசையில் வெளியானது பொன்னியின் செல்வன் ‘வீரா ராஜ வீர’.. உற்சாகத்தில் ரசிகர்கள்..  – வைரலாகும் அட்டகாசமான Glimpse உள்ளே..
சினிமா

ஏ ஆர் ரகுமான் இசையில் வெளியானது பொன்னியின் செல்வன் ‘வீரா ராஜ வீர’.. உற்சாகத்தில் ரசிகர்கள்.. – வைரலாகும் அட்டகாசமான Glimpse உள்ளே..

“நெல்சன் நிச்சயமா மிகப்பெரிய கமர்ஷியல் ஹிட் கொடுப்பார்..“ ஜெயிலர் படம் குறித்து தகவலை பகிர்ந்த தயாரிப்பாளர்.. -  அட்டகாசமான நேர்காணல் உள்ளே..
சினிமா

“நெல்சன் நிச்சயமா மிகப்பெரிய கமர்ஷியல் ஹிட் கொடுப்பார்..“ ஜெயிலர் படம் குறித்து தகவலை பகிர்ந்த தயாரிப்பாளர்.. - அட்டகாசமான நேர்காணல் உள்ளே..