பள்ளி - கல்லூரியிலிருந்து சினிமாவில் வர பெரிய திருப்புமுனை இதுதான்... முதல் முறை ரகசியம் பகிர்ந்த விக்னேஷ் சிவன்! ட்ரெண்டிங் வீடிய

சினிமாவில் வர பெரிய திருப்புமுனை குறித்து பகிர்ந்த விக்னேஷ் சிவன்,vignesh shivan shared about his turning point to enter cinema | Galatta

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக திகழும் இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது ஆரம்ப கட்டத்தில் பள்ளி - கல்லூரிகளின் காலத்தில் சினிமாவில் வருவதற்கு திருப்புமுனையாக அமைந்த விஷயங்கள் குறித்து நமது கலாட்டாவின் அடுத்த ஸ்பெஷலாக தற்போது தொடங்கப்பட்டிருக்கும், கேம் சேன்ஜர்ஸ் வித் சுஹாசினி மணிரத்னம் சிறப்பு பேட்டியில் பகிர்ந்து கொண்டார்.அப்படி பேசும் போது,

“11-12ம் வகுப்பு சமயங்களிலேயே நான் ஓரளவுக்கு படிப்பேன் பத்தாம் வகுப்பில் நான் நல்ல மதிப்பெண்கள் பெற்றேன். அப்போது எனது அப்பா நான் மிகவும் பயங்கரமாக படிக்கிறேன் என்று நினைத்து என்னை IIT-க்கு உள்ளே வனவாணி என்ற ஒரு பள்ளியில் சேர்த்துவிட்டார். ஆனால் அந்த 11-12ம் சமயத்தில் இருந்து கலை நிகழ்ச்சிகள் மீதும் ட்ரம்ஸ் வாசிப்பது மீதும் கவனம் சென்றது. எனக்கென ஒரு இசை குழு இருந்தது. பள்ளியில் இருந்து கல்லூரியிலும் இசை குழுவில் ட்ரம்ஸ் வாசித்துக் கொண்டிருந்தேன். இசையில் எனக்கு மிகவும் ஆர்வம் இருந்தது. இப்போது இருக்கும்  எல்லாமே இதில் இருந்து ஆரம்பம் ஆனது தான்.” என தெரிவித்த விக்னேஷ் சிவன் அவர்களிடம், “அப்படி என்றால் திருப்புமுனை என எதை சொல்வீர்கள்…? உங்கள் அப்பா நீங்கள் IITல் சேர வேண்டும் என நினைத்தார் என்றெல்லாம் சொல்கிறீர்களே அப்படி இருக்கும் போது சினிமாவில் எப்படி?” எனக் கேட்டபோது, 

“எனக்கு படிப்பில் அவ்வளவு ஆர்வம் என்றெல்லாம் சொல்லிவிட முடியாது. படிப்பேன் அவ்வளவு தான். நிறைய திருப்புமுனைகள் இருக்கின்றன. 12ம் வகுப்பு படிக்கும் போது என் தந்தை தவறிவிட்டார். அது ஒரு மிகப்பெரிய திருப்புமுனை தான். இந்த இடத்திற்கு நான் வராமல் போவதற்கு கூட அது ஒரு திருப்புமுனையாக இருந்திருக்கலாம். சரியாக 12ம் வகுப்பு படிக்கும் போது என் அப்பாவை இழந்து விட்டேன். அப்போது என் தாயார் சினிமா இந்த மாதிரி எல்லாம் போகாமல் தொடர்ச்சியாக சம்பளம் கிடைக்கும் வகையில் ஒரு வேலையில் சேர என்ன செய்ய வேண்டுமோ அதை செய்ய வேண்டும் அப்போதுதான் குடும்பத்தை வழி நடத்த முடியும் என சொல்லி இருந்தால் நான் அதை தான் செய்திருப்பேன். ஆனால் அப்போது எனக்கும் என் அம்மாவுக்கும் ஒரு உரையாடல் இருந்தது. அப்போது நான் அவரிடம் கேட்டேன் இன்ஜினியரிங் என்றால் ஒரு 4 ஆண்டுகள் படிக்க வேண்டும் இவ்வளவு செலவாகும் ஆனால் நான் எலக்ட்ரானிக் மீடியா மாதிரி படித்தால் 4 ஆண்டுகள் தான் இவ்வளவுதான் செலவாகும். இவ்வளவு செலவு செய்து இன்ஜினியரிங் படித்தால் அது எப்படி போகும் என்று எனக்கு தெரியாது. ஆனால் இது படித்தால் ஒரு இயக்குனராகவோ ஒரு படத்தொகுப்பாளராகவோ ஏதாவது என்னால் செய்ய முடியும் நான் இதை செய்யவா என கேட்டேன். உனக்கு என்ன செய்ய வேண்டுமோ அதை செய் நான் பார்த்துக் கொள்கிறேன் என்று அம்மா சொன்னார்." என விக்னேஷ் சிவன் தெரிவித்தார். மேலும் பல சுவாரசியங்கள் பகிர்ந்து கொண்ட இயக்குனர் விக்னேஷ் சிவனின் அந்த ஸ்பெஷல் கேம் சேஞ்சர்ஸ் வித் சுஹாசினி மணிரத்னம் சிறப்பு பேட்டி இதோ…
 

'வெங்கட் பிரபு - நாக சைதன்யாவின் அதிரடி ஆக்ஷனில் வரும் கஸ்டடி!'- ஸ்பெஷல் ட்ரீட்டாக வந்த முதல் பாடல்! அசத்தலான வீடியோ இதோ
சினிமா

'வெங்கட் பிரபு - நாக சைதன்யாவின் அதிரடி ஆக்ஷனில் வரும் கஸ்டடி!'- ஸ்பெஷல் ட்ரீட்டாக வந்த முதல் பாடல்! அசத்தலான வீடியோ இதோ

பரபரக்கும் இந்தியன் 2 படப்பிடிப்பிற்கிடையே ரிலாக்ஸ் மோடில் உலகநாயகன்... ஸ்பெஷல் இசைக்கருவி வாசிக்கும் வைரல் வீடியோ இதோ!
சினிமா

பரபரக்கும் இந்தியன் 2 படப்பிடிப்பிற்கிடையே ரிலாக்ஸ் மோடில் உலகநாயகன்... ஸ்பெஷல் இசைக்கருவி வாசிக்கும் வைரல் வீடியோ இதோ!

“நான் மிகவும் அதிர்ஷ்டசாலி!”- தனது பெற்றோர்கள் கமல்ஹாசன் - சரிகா குறித்து மனம் திறந்த ஸ்ருதிஹாசனின் அட்டகாசமான வீடியோ உள்ளே!
சினிமா

“நான் மிகவும் அதிர்ஷ்டசாலி!”- தனது பெற்றோர்கள் கமல்ஹாசன் - சரிகா குறித்து மனம் திறந்த ஸ்ருதிஹாசனின் அட்டகாசமான வீடியோ உள்ளே!