“நெல்சன் நிச்சயமா மிகப்பெரிய கமர்ஷியல் ஹிட் கொடுப்பார்..“ ஜெயிலர் படம் குறித்து தகவலை பகிர்ந்த தயாரிப்பாளர்.. - அட்டகாசமான நேர்காணல் உள்ளே..

ஜெயிலர் திரைப்படம் குறித்து தயாரிப்பாளர் பகிர்ந்த தகவல் விவரம் இதோ - Dhananjayan about Rajinikanth Nelson Jailer movie | Galatta

தமிழ் சினிமாவில் தற்போது திரையுலகம் அதிகம் பேசக்கூடிய இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் நெல்சன் திலீப் குமார். தமிழ் திரையுலகில் கோலமாவு கோகிலா திரைப்படம் மூலம் அறிமுகமாகி வித்யாசமான கதைகளத்தை ரசிகர்களுக்கு கொடுத்து கவனம் ஈர்த்தார். பின் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் டாக்டர் திரைப்படத்தை இயக்கினார். மிகப்பெரிய பிளாக் பஸ்டர் ஹிட் அடித்த டாக்டர் படத்தையடுத்து தமிழ் சினிமாவின் உச்ச நடிகர்களில் ஒருவரான தளபதி விஜய் அவருடன் இணைந்து ‘பீஸ்ட்’ திரைப்படத்தை இயக்கினார். ரசிகர்களை திருப்தி செய்தாலும் வெகுஜன மக்களின் வரவேற்பை பெற பீஸ்ட் திரைப்படம் தவறவிட்டது. இந்த படம் வெளியாவதற்கு முன்னரே இயக்குனர் நெல்சன் ஆச்சர்யம் அளிக்ககூடிய அப்டேட்டுடன் வந்தார். அது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை இயக்கவுள்ளார் என்ற அப்டேட் ரசிகர்களை திக்குமுக்காட வைத்தது. பின் பீஸ்ட் படம் கலவையான விமர்சனத்தை பெற்றதால் ரஜினிகாந்த் உடன் கூட்டணி உடைந்தது என்ற வதந்தி எழுந்தது. ஆனால் இதனை மறுத்து அட்டகாசமாக படப்பிடிப்பில் களமிறங்கினார்கள். அதன்படி படத்திற்கு ஜெயிலர் என்று பெயரிட்டு முதல் பார்வை மற்றும் அறிமுக டீசரை வெளியிட்டனர் படக்குழு. ரசிகர்களின் வரவேற்பினால் இந்திய அளவு டிரண்ட் ஆனது குறிப்பிடத்தக்கது.

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் ரஜினிகாந்த் உடன் இணைந்து மலையாள நடிகர் மோகன் லால், கன்னட நடிகர் சிவராஜ் குமார், பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷராப், தெலுங்கு நடிகர்சுனில் ஆகியோர் நடிக்கவுள்ளனர். மேலும் இந்த பிரம்மாண்ட கூட்டணியில் மேலும் தமன்னா, ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, விநாயகன், யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய  கதாபாத்திரங்களுக்காக இணைந்துள்ளனர்.

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஜெயிலர் படம் அடுத்த ஆண்டு பொங்கல் விழாவையொட்டி வெளியாகும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. இந்நிலையில் பிரபல தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் அவர்கள் நெல்சன் மற்றும் ஜெயிலர் திரைப்படம் குறித்து நமது கலாட்டா தமிழ் சிறப்பு பேட்டியில் பகிர்ந்து கொண்டவை,

"எனக்கு அந்த படம் மீது மிகப்பெரிய நம்பிக்கை இருக்கு.. 100 நாள் கடந்து படப்பிடிப்பிற்கு இருக்கின்றனர்.‌ நிறைய மெனகெடுறாங்க. ஏ ஆர் முருகதாஸ் கலாட்ட பிளஸ் பேட்டியில் சொல்லிருப்பார். 'தர்பார் படம் பண்ண நேரம் இல்ல.. சீக்கிரம் முடிக்க வேண்டிய கட்டாயம்' அந்த அழுத்தம் ஜெயிலர் படத்திற்கு இப்போது நெல்சன் மீது இல்லை.‌ ரஜினி சார் எவ்ளோ நாள் ஆனாலும் பரவாயில்லை. உனக்கு தோன்ற அற்புதமான படத்தை கொடு னு சொல்லியிருக்கார். அதை பயன்படுத்தி நெல்சன் மீண்டும் மிகப்பெரிய அளவில் திருப்பவும் வருவார்.  ஏப்ரல் 14 படம் வர வேண்டும் என்று ரஜினி சார் சொல்லியிருந்தால் அழுத்தம் ஏற்பட்டு படம் நினைத்த அளவு வந்திருக்காரு..  தீபாவளி குள்ள வேண்டும் என்று கேட்டால் அவர் ஜூலை ஆகஸ்ட்டில் படம் முடிப்பார். இது போன்ற எந்த அழுத்தமும் நெல்சன் மீது இல்லை. இந்த சுதந்திரம் தான் ஜெயிலர் கமர்ஷியல் படங்களில் ஒரு நல்ல படமாக கொண்டு வர வாய்ப்புகள் நிறைய இருக்கும்.. " என்றார்.

மேலும் தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் அவர்கள் நமது கலாட்டா தமிழ் மீடியா பேட்டியில் லியோ, தங்கலான், சூர்யா 42, பத்து தல மற்றும் விடுதலை திரைப்படம் குறித்து பகிர்ந்து கொண்ட சுவாரஸ்யமான தகவல் கொண்ட முழு வீடியோ இதோ..  

“வெற்றிமாறன் தமிழ் திரையுலகின் பெருமை” விடுதலை படம் பார்த்து வியந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.. – வைரலாகும் பதிவு இதோ..
சினிமா

“வெற்றிமாறன் தமிழ் திரையுலகின் பெருமை” விடுதலை படம் பார்த்து வியந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.. – வைரலாகும் பதிவு இதோ..

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் 75வது  படத்தில் இணைந்த பிரபல இசையமைப்பாளர்.. உற்சாகத்தில் ரசிகர்கள் – அட்டகாசமான அப்டேட் இதோ..
சினிமா

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் 75வது படத்தில் இணைந்த பிரபல இசையமைப்பாளர்.. உற்சாகத்தில் ரசிகர்கள் – அட்டகாசமான அப்டேட் இதோ..

“தங்கலான் விக்ரம் சாருக்கு மிக முக்கியமான படமா இருக்கும்” தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் பகிர்ந்த தகவல் – சுவாரஸ்யமான நேர்காணல் இதோ..
சினிமா

“தங்கலான் விக்ரம் சாருக்கு மிக முக்கியமான படமா இருக்கும்” தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் பகிர்ந்த தகவல் – சுவாரஸ்யமான நேர்காணல் இதோ..