“இதனால் தான் AK62 பண்ண முடியல”.. முதல் முறையாக அஜித் குமார் படம் குறித்து மனம் திறந்த விக்னேஷ் சிவன் – Exclusive Interview இதோ..

அஜித் குமார் கூட்டணி குறித்து விக்னேஷ் சிவன் விளக்கம் விவரம் இதோ - Director Vignesh Shivan about AK 62 Movie | Galatta

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்கள் வரிசையில் இளம் இயக்குனராக இருந்து வருபவர் இயக்குனர் விக்னேஷ் சிவன். போடா போடி மூலம் தமிழ் திரையுலகில் அடியெடுத்து வைத்த இயக்குனர் விக்னேஷ் சிவன் பின் அட்டகாசமான கதைகளத்தில் நானும் ரௌடி தான் படம் கொடுத்து பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்தார். பின் தொடர்ந்து தமிழ் சினிமாவில் தானா சேர்ந்த கூட்டம், காத்து வாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்களை இயக்கி குடும்பங்கள் ரசிகர்களையும், இளைஞர்பட்டாளத்தின் கவனத்தையும் ஈர்த்தார் இயக்குனர் விக்னேஷ் சிவன். அதே நேரத்தில் தென்னிந்தியாவின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா அவர்களை காதலித்து திருமணம் செய்து கொண்டார் இயக்குனர் விக்னேஷ் சிவன், இந்த தம்பதியினருக்கு தற்போது அழகான இரட்டை ஆண் குழந்தை சமீபத்தில் பிறந்தது குறிப்பிடத்தக்கது. தமிழ் சினிமாவில் துள்ளலான கதைகளத்தில் படங்கள் கொடுக்கும் இயக்குனர் விக்னேஷ் சிவன் அதிரடியான அப்டேட்டை கடந்த ஆண்டு ரசிகர்களுக்கு கொடுத்தார். அதன் படி தமிழில் உச்ச நடிகரான அஜித்குமார் அவர்களை லைகா தயாரிப்பின் கீழ் இயக்கவுள்ளதாக அதிகாரபூர்வ  அப்டேட் வெளியானது.   ஆனால் ஒரு வருடம் முடிந்தும் தயாரிப்பு நிறுவனம் சார்பிலும் விக்னேஷ் சிவன் சார்பிலும் அடுத்த கட்ட நடவடிக்கை தொடங்க படமால் இருந்தது. அதே நேரத்தில் அஜித் குமாரின் AK62 படத்தில் இயக்குனரை தயாரிப்பு நிறுவனம் மாற்றியுள்ளது என்ற தகவலும் வெளியானது. இது தொடர்பாக  நமது கலாட்டா தமிழ் ஏற்பாடு செய்திருந்த கேம்செஞ்சர்ஸ் வித் சுஹாசினி மணிரத்னம் என்ற சிறப்பு நிகழ்ச்சியில் இயக்குனர் விக்னேஷ் சிவன் கலந்து கொண்டு முதல் முறையாக நமது சிறப்பு பேட்டியில் மனம் திறந்தார் இயக்குனர் விக்னேஷ் சிவன். அதில்.

"எல்லா விஷயத்தையும் நம்ம கையாண்டு தான் ஆகனும். இது ஏமாற்றம் தான் இருந்தாலும் அந்த கதையின் இரண்டாம் பாகம் குறித்து எனது தயாரிப்பாளருக்கு அது திருப்தியளிக்கவில்லை. என்னோட கதை சாரம் இருந்து என்னால் வர முடியவில்லை. என்னால அதை மாற்ற முடியவில்லை.  ஒரு கதையா அஜித் சாருக்கு பிடித்தது. ஆனா ஒரு தயாரிப்பாளராக அவர்களுக்கு சில குறைகள் இருந்தது. எல்லாத்துக்கும் சரியான நேரம் இருக்கு‌...  நான் எப்பவும் ஒன்றுதான் நினைப்பேன் சில நேரம் சில விஷயங்கள் சீக்கிரமா கிடைக்குதா லேட்டா கிடைக்குதானு நமக்கே தெரியாது. எனக்கு ஒருவேளை இந்த வாய்ப்பு சீக்கிரமா கிடைத்திருக்கு என்று நான் நம்புகிறேன்.  யாராவது ஒருத்தருக்கு வாய்ப்பு இழந்தால் தான் ஒருத்தருக்கு வாய்ப்பு கிடைக்கும். எனக்கு இந்த வாய்ப்பு போய் ஒரு மகிழ் திருமேனி மாதிரி ஒருத்தர் அந்த படம் பன்றாருனா அதுவும் எனக்கு மகிழ்ச்சி தான். அவர் ரொம்ப அருமையான இயக்குனர்‌. அவரோட திரைப்பயணத்தில் மிக முக்கியமான படமாக அது இருக்கலாம். நான் ஒரு படம் பன்றேன்‌. அது எனது மனதிற்கு நெருக்கமான கதை தான். அதுல எனக்கு மகிழ்ச்சி தான். இந்த வாய்ப்பு மறுக்கப்படவில்லை. தாமதமாகிருக்கு.‌ சில நேரம் அது நடக்கலாம்.  என்ன காப்பாத்துறது என்னுடைய கதைதான். நான் எழுதுற கதைதான். நான் அந்த கதைகளை நம்புகிறேன். எனக்கு மீண்டும் அந்த வாய்ப்பு கிடைத்தால் நான் விரும்பிய கதையை தான் படமாக எடுப்பேன். அதை பிளாக் பஸ்டராக ஆக்க வேண்டும் என்பது எனது விருப்பம். நான் ஒர் அஜித் சார் ரசிகரா எனக்கும் ஆசை. எனது நோக்கம் தூய்மையாகவும் நேர்மையாகவும் இருக்கு.. அதை பிரபஞ்சம் எனக்கு கொண்டு வந்து கொடுக்கும். அது நடக்கும்.." என்றார் இயக்குனர் விக்னேஷ் சிவன்.

மேலும் இயக்குனரும் தாயாரிப்பாளருமான விக்னேஷ் சிவன் அவர்கள் பகிர்ந்து கொண்ட பல சுவாரஸ்யமான தகவல் கொண்ட முழு வீடியோ இதோ..

“நெல்சன் நிச்சயமா மிகப்பெரிய கமர்ஷியல் ஹிட் கொடுப்பார்..“ ஜெயிலர் படம் குறித்து தகவலை பகிர்ந்த தயாரிப்பாளர்.. -  அட்டகாசமான நேர்காணல் உள்ளே..
சினிமா

“நெல்சன் நிச்சயமா மிகப்பெரிய கமர்ஷியல் ஹிட் கொடுப்பார்..“ ஜெயிலர் படம் குறித்து தகவலை பகிர்ந்த தயாரிப்பாளர்.. - அட்டகாசமான நேர்காணல் உள்ளே..

சினிமா

"Red Giant என் படத்தை வாங்காதது காரணம் இதுதான்.." அருள்நிதி பகிர்ந்த சுவாரஸ்யமான தகவல்.. - முழு வீடியோ இதோ..

மிரட்டலான தோற்றத்தில் பிரித்விராஜ்... ஆஸ்கார் பிரபலங்கள் ஒன்றிணையும் ‘ஆடுஜீவிதம்’ – உலகதரத்தில் அட்டகாசமான டிரைலர் இதோ..
சினிமா

மிரட்டலான தோற்றத்தில் பிரித்விராஜ்... ஆஸ்கார் பிரபலங்கள் ஒன்றிணையும் ‘ஆடுஜீவிதம்’ – உலகதரத்தில் அட்டகாசமான டிரைலர் இதோ..