‘AK62’ படத்திற்கு முன் அஜித் குமார் அவர்களுடன் பயணித்த அனுபவம்.. – விக்னேஷ் சிவன் பகிர்ந்து கொண்ட சுவாரஸ்யமான தகவல்கள் இதோ..

அஜித் குமார் குறித்து இயக்குனர் விக்னேஷ் சிவன் பகிர்ந்து கொண்ட தகவல் இதோ - Director vignesh shivan about ajith kumar | Galatta

தென்னிந்தியாவின் மிக முக்கியமான நடிகரில் ஒருவர் அஜித் குமார். காதல் மன்னனாக 90 களில் வலம் வந்தவர் பின் அதிரடி மன்னாக பல படங்களில் நடித்து தனக்கென தனி சாம்ராஜ்யத்தையே உருவாக்கி இன்று இந்தியாவின் மிக முக்கியமான நடிகர்களில் ஒருவராகவும் பாக்ஸ் ஆபிஸ் சாம்ராட்டாகவும் அஜித் குமார் இருந்து வருகிறார். திரையரங்கம் அதிர ஆர்பாட்டத்துடன் அஜித்குமார் திரைப்படங்கள் திருவிழா காலம் போல் காட்சியளிக்கும் நிலைக்கு இன்று அஜித் குமார் படங்கள் வளர்ந்து வந்துள்ளது. அதன்படி இந்த ஆண்டு அஜித் குமார் நடிப்பில் வெளியான துணிவு திரைப்படம் மிகப்பெரிய ஹிட் அடித்து உலகமெங்கும் வசூல் வேட்டையாடியது. அதன்படி அவரது 62    படமான AK62 படத்திற்கான அறிவிப்பு கடந்த ஆண்டு வெளியானது அந்த அறிவிப்பின் படி லைகா தயாரிப்பில் அஜித் குமார் நடிக்கவுள்ள திரைப்படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்குவதாக அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியானது. ஆனால் ஒரு ஆண்டு நிறைவடைந்த போதும் AK62 குறித்த தகவல் தயாரிப்பு நிறுவனம் சார்பிலும் விக்னேஷ் சிவன் சார்பிலும் வெளிவராமல் இருந்தது. இதையடுத்து ரசிகர்கள் கேள்வி எழுப்ப அந்த படம் விக்னேஷ் சிவன் இயக்காமல் இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கவுள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் இது உருதியளிக்காமல் இருந்த நேரத்தில் அஜித்குகுமாரின் AK62 படம் குறித்தும் அவருடன் பயணித்த தருணங்கள் குறித்தும் இயக்குனர் விக்னேஷ் சிவன் அவர்கள் நமது கலாட்டா தமிழ் ஏற்பாடு செய்திருந்த கேம்செஞ்சர்ஸ் வித் சுஹாசினி மணிரத்னம் என்ற சிறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பகிர்ந்து கொண்டார். அதில் அஜித் குமார் உடன் பயணித்த அனுபவம் குறித்து அவர்,

"அஜித் சார் ரொம்ப ரொம்ப தன்மையானவர். வீட்டுக்கு போனால் அவரே தண்ணீரோ காபியோ அவரே கொடுப்பார். பொதுவாகவே நம்மை அவர் வசதியா பார்த்து கொள்வார். எனக்கு சார்ர பார்த்த ரொம்ப உற்சாகமடைந்துவிடுவேன். அவர் போன் எனக்கு வந்தாலே எனக்கு ஆச்சரியமாகவும் அற்புதமாகவும் இருக்கும்.  அவர் எவ்ளோ பெரிய இடத்துல இருந்தாலும் எதிர் இருப்பவரை தன்மையாகவும் அன்பாகவும்  நடத்துவார். அதனால் தான் அவர் அந்த இடத்தில் இருக்கிறார்." என்றார்.

மேலும் இயக்குனரும் தாயாரிப்பாளருமான விக்னேஷ் சிவன் அவர்கள் AK62 படம் குறித்தும் தனது திரைப்பயணம் குறித்தும் பகிர்ந்து கொண்ட பல சுவாரஸ்யமான தகவல் கொண்ட முழு வீடியோ இதோ..

ஏ ஆர் ரகுமான் இசையில் வெளியானது பொன்னியின் செல்வன் ‘வீரா ராஜ வீர’.. உற்சாகத்தில் ரசிகர்கள்..  – வைரலாகும் அட்டகாசமான Glimpse உள்ளே..
சினிமா

ஏ ஆர் ரகுமான் இசையில் வெளியானது பொன்னியின் செல்வன் ‘வீரா ராஜ வீர’.. உற்சாகத்தில் ரசிகர்கள்.. – வைரலாகும் அட்டகாசமான Glimpse உள்ளே..

“நெல்சன் நிச்சயமா மிகப்பெரிய கமர்ஷியல் ஹிட் கொடுப்பார்..“ ஜெயிலர் படம் குறித்து தகவலை பகிர்ந்த தயாரிப்பாளர்.. -  அட்டகாசமான நேர்காணல் உள்ளே..
சினிமா

“நெல்சன் நிச்சயமா மிகப்பெரிய கமர்ஷியல் ஹிட் கொடுப்பார்..“ ஜெயிலர் படம் குறித்து தகவலை பகிர்ந்த தயாரிப்பாளர்.. - அட்டகாசமான நேர்காணல் உள்ளே..

சினிமா

"Red Giant என் படத்தை வாங்காதது காரணம் இதுதான்.." அருள்நிதி பகிர்ந்த சுவாரஸ்யமான தகவல்.. - முழு வீடியோ இதோ..