கேம் சேஞ்சர்ஸ்: முதல் முறை மனம் திறக்கும் விக்னேஷ் சிவன்... சுஹாசினி மணிரத்னம் உடன் அட்டகாசமான சிறப்பு நேர்காணல்! விவரம் இதோ

சுஹாசினி மணிரத்னம் உடன் கேம் சேஞ்சர்ஸ் நேர்காணலில் விக்னேஷ் சிவன்,vignesh shivan joined in game changers with suhasini maniratnam | Galatta

இந்தியாவின் முதன்மை டிஜிட்டல் மீடியா தளங்களில் ஒன்றாக திகழும் கலாட்டா தமிழின் அடுத்த ஸ்பெஷல் கேம் சேஞ்சர்ஸ். இதுவரை முன்னணி நட்சத்திரங்களை ஒன்றிணைத்து கலாட்டா நடத்திய, கலாட்டா நட்சத்திர விருதுகள் 2018, கலாட்டா DEBUT விருதுகள் 2019, கலாட்டா நட்சத்திர விருதுகள் 2019, கலாட்டா வொண்டர் வுமன் விருதுகள் 2019, கலாட்டா இந்தியன் சினிமா கான்கிலேவ் 2022, தி கலாட்டா கிரவுண் 2022 மற்றும் கலாட்டா டிஜிட்டல் ஸ்டார்ஸ் 2022 உள்ளிட்ட வெற்றிகரமான நிகழ்வுகளை தொடர்ந்து, அடுத்த பிரம்மாண்ட நிகழ்வாக வருகிறது இந்த கேம் சேஞ்சர்ஸ் வித் சுஹாசினி மணிரத்னம். இதுவரை இல்லாத அளவிற்கு சிறப்பு பிரத்யேக நேர்காணலாக நடைபெற இருக்கும் இந்த கேம் சேஞ்சர்ஸ் நிகழ்ச்சியில் முன்னணி சினிமா நட்சத்திரங்கள் பலரும், நமது தமிழ் சினிமாவின் தேசிய விருது பெற்ற நடிகையும் இயக்குனருமான சுஹாசினி மணிரத்னம் அவர்களுடன் மனம் திறந்து உரையாட உள்ளனர்.

அந்த வகையில் கேம் சேஞ்சர்ஸ் வித் சுஹாசினி மணிரத்னம் சிறப்பு நேர்காணலின் முதல் சிறப்பு விருந்தினராக தமிழ் சினிமாவின் மிக முக்கிய இயக்குனர்களில் ஒருவரான இயக்குனர் விக்னேஷ் சிவன் கலந்து கொண்டுள்ளார். இந்த அட்டகாசமான உரையாடலில் தனது திரையுலக அனுபவங்களையும் பல சுவாரசியமான நினைவுகளையும் இயக்குனர் விக்னேஷ் சிவன் பகிர்ந்து கொண்டார். தனது உயர்கல்வி பயின்ற பள்ளிக்கூட நாட்களில் சினிமா மீதான ஆர்வம் தொடங்கியது எப்படி?, இசை மீதான தனது வேட்கை ஆரம்பித்தது எப்படி?, தனது 12 வது வகுப்பிற்கு பிறகு தந்தையின் மரணத்திற்கு பின் தனது தாயார் எவ்வளவு தனக்கு பக்கபலமாக இருக்கிறார் என்பது குறித்தும், மனம் திறந்த இயக்குனர் விக்னேஷ் சிவன் அவர்கள், தான் பெரிய திரைப்படங்கள் இயக்குவேன் பாடல்கள் எழுதுவேன் என எப்படி தனது தாயாருக்கு நம்பிக்கை கொடுத்தார் என்பது குறித்தும் பகிர்ந்து கொண்டார்.

மேலும் சினிமாவில் தனது முதல் படமான போடா போடி திரைப்படத்தின் பயணம் எப்படி தொடங்கியது?, நானும் ரவுடிதான் திரைப்படத்திற்காக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மற்றும் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திர நாயகியும் தனது மனைவியுமான நயன்தாரா அவர்களை அனுகியது எப்படி? என பல விஷயங்களை மனம் திறந்து பேசிய இயக்குனர் விக்னேஷ் சிவன், அஜித் குமாருடனான AK62 திரைப்படத்திற்கான வாய்ப்பு குறித்தும், அதற்கான காரணங்கள் குறித்தும் பகிர்ந்து கொண்டார். அதேபோல் இயக்குனர் மகிழ் திருமேனி , அஜித் குமாருடன் இணைந்து லைகா ப்ரொடுக்ஷன்ஸ் தயாரிக்கும் படத்தில் பணியாற்றுவது குறித்து பேசிய இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது இயக்கத்தில் அடுத்து தயாராக இருக்கும் முக்கிய படைப்பு குறித்தும் பகிர்ந்து கொண்டார். இந்நிலையில் விக்னேஷ் சிவன் கலந்து கொண்ட கேம் சேஞ்சர்ஸ் வித் சுஹாசினி மணிரத்னம் சிறப்பு நேர்காணல் வீடியோ தற்போது நமது கலாட்டா தமிழ் யூட்யூப் சேனலில் வெளியாகி உள்ளது. சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த சிறப்பு நேர்காணல் வீடியோ இதோ…

 

“நான் மிகவும் அதிர்ஷ்டசாலி!”- தனது பெற்றோர்கள் கமல்ஹாசன் - சரிகா குறித்து மனம் திறந்த ஸ்ருதிஹாசனின் அட்டகாசமான வீடியோ உள்ளே!
சினிமா

“நான் மிகவும் அதிர்ஷ்டசாலி!”- தனது பெற்றோர்கள் கமல்ஹாசன் - சரிகா குறித்து மனம் திறந்த ஸ்ருதிஹாசனின் அட்டகாசமான வீடியோ உள்ளே!

'ஏன் இந்த இடைவெளி..? அடுத்த தமிழ் படம் எப்போது..?'- சுவாரஸ்யமாக பதிலளித்த ஸ்ருதி ஹாசனின் சிறப்பு பேட்டி இதோ
சினிமா

'ஏன் இந்த இடைவெளி..? அடுத்த தமிழ் படம் எப்போது..?'- சுவாரஸ்யமாக பதிலளித்த ஸ்ருதி ஹாசனின் சிறப்பு பேட்டி இதோ

AUDITION-க்கு போன ஆபீஸை விலைக்கு வாங்கிய சூரி... ட்ரெண்டாகும் அட்டகாசமான INSPIRATION வீடியோ இதோ!
சினிமா

AUDITION-க்கு போன ஆபீஸை விலைக்கு வாங்கிய சூரி... ட்ரெண்டாகும் அட்டகாசமான INSPIRATION வீடியோ இதோ!