ஏ ஆர் ரகுமான் இசையில் வெளியானது பொன்னியின் செல்வன் ‘வீரா ராஜ வீர’.. உற்சாகத்தில் ரசிகர்கள்.. – வைரலாகும் அட்டகாசமான Glimpse உள்ளே..

பொன்னியின் செல்வன் 2 பாடலின் வீடியோ வெளியானது அட்டகாசமான காட்சிகளுடன் வைரல் - Ponniyin Selvan 2 veera raja lyrical video is out now | Galatta

தமிழ் மொழியின் ஆகசிறந்த நாவலாக பல தசாப்தங்களாக இருந்து வரும் கல்கியின் பொன்னியின் செல்வன் கதையை படமாக எடுக்க பல முயற்சிகள் தமிழ் சினிமாவில் நடைபெற்றது முயற்சிகளை விடா முயற்சியாக்கி செய்து காட்டியவர் இயக்குனர் மணிரத்னம். எழுத்தாளர் ஜெயமோகன், இளங்கோ குமரவேல் மற்றும் இயக்குனர் மணிரத்னம் ஆகியோர் இணைந்து திரைக்கதை வசனம் எழுதியுள்ளனர். லைகா தயாரிப்பில் இரண்டு பாகங்களாக பொன்னியின் செல்வன் திரைப்படம் மிகப்பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகி கடந்த ஆண்டு படத்த்தின் முதல் பாகம் வெளியானது. இப்படத்தில் சியான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஐஸ்வர்யா லக்ஷ்மி. சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், விக்ரம் பிரபு, இளைய திலகம் பிரபு, ஷோபிதா, ரஹ்மான், அஸ்வின் கக்கமன்னு, கிஷோர், லால், ஜெயராம் ஜெயசித்ரா, மோகன் ராமன், நாசர் ஆகியோர் நடித்துள்ளனர்.

உலகமெங்கும் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வசூல் ரீதியாகவும் புதிய சாதனையும் படைத்த பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் வரும் ஏப்ரல் மாதம் 28ம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளது. ஏ ஆர் ரஹ்மான் இசையில் உருவான இப்படத்தின் பாடல் சமீபத்தில் மிகப்பெரிய அளவு பிரம்மாண்ட இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவாக சென்னையில் நடத்தப்பட்டது, இதில் இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் இசையில் வெளியான அனைத்து பாடல்களும் மிகப்பெரிய அளவு வரவேற்பை ரசிகர்கள் பெற்று வருகிறது. குறிப்பாக படத்தில் இடம் பெற்றுள்ள வீரா ராஜ வீர பாடல் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்நிலையில் வீரா ராஜ வீர பாடலின் லிரிக்கல் வீடியோ மற்றும் சில சிறப்பு காட்சிகளை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. இளங்கோ கிருஷ்ணன் வரிகளில் உருவான இப்பாலை  பாடகர்கள் சங்கர் மகாதேவன், ‘சின்னகுயில்’ சித்ரா மற்றும் ஹரிணி ஆகியோருடன் இணைந்து பல பாடகர்கள் இந்த பாடலை பாட பாடலின் இசை உலகத்தரத்தில் பிரமாண்டமாக உருவாகியுள்ளது. ஏ ஆர் ரகுமான் அவர்களின் அட்டகாசமான இசையில் ரசிகர்கள் நனைந்து கொண்டிருக்கும் வேலையில் இந்த சிறப்பு வீடியோ தற்போது ரசிகர்களை மேலும் உற்சாகமடைய செய்துள்ளது.

 

 

மிரட்டலான தோற்றத்தில் பிரித்விராஜ்... ஆஸ்கார் பிரபலங்கள் ஒன்றிணையும் ‘ஆடுஜீவிதம்’ – உலகதரத்தில் அட்டகாசமான டிரைலர் இதோ..
சினிமா

மிரட்டலான தோற்றத்தில் பிரித்விராஜ்... ஆஸ்கார் பிரபலங்கள் ஒன்றிணையும் ‘ஆடுஜீவிதம்’ – உலகதரத்தில் அட்டகாசமான டிரைலர் இதோ..

“வெற்றிமாறன் தமிழ் திரையுலகின் பெருமை” விடுதலை படம் பார்த்து வியந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.. – வைரலாகும் பதிவு இதோ..
சினிமா

“வெற்றிமாறன் தமிழ் திரையுலகின் பெருமை” விடுதலை படம் பார்த்து வியந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.. – வைரலாகும் பதிவு இதோ..

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் 75வது  படத்தில் இணைந்த பிரபல இசையமைப்பாளர்.. உற்சாகத்தில் ரசிகர்கள் – அட்டகாசமான அப்டேட் இதோ..
சினிமா

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் 75வது படத்தில் இணைந்த பிரபல இசையமைப்பாளர்.. உற்சாகத்தில் ரசிகர்கள் – அட்டகாசமான அப்டேட் இதோ..