பிறந்தநாள் ஸ்பெஷல்!- கேப்டன் மில்லர் படத்திற்கு பின் வரும் தனுஷின் 5 பெரிய படங்கள் & அறிவிக்கப்பட இருக்கும் படங்களின் முழு பட்டியல் இதோ!

கேப்டன் மில்லர் படத்திற்கு பின் வரும் தனுஷின் பெரிய படங்களின் பட்டியல்,full list of dhanush upcoming movies after captain miller | Galatta

கேப்டன் மில்லர் திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் தனுஷ் நடிப்பில் அடுத்தடுத்து வரவிருக்கும் அறிவிக்கப்பட்ட 5 பெரிய படங்கள் மற்றும் அறிவிக்கப்பட இருக்கும் இதர பெரிய படங்கள் பற்றி இந்தத் தொகுப்பில் பார்க்கலாம். இன்று ஜூலை 28ஆம் தேதி தனது 39 வது பிறந்தநாளை கொண்டாடும் நடிகர் தனுஷ் அவர்களுக்கு கலாட்டா குழுமம் சார்பில் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். இந்த 2023 ஆம் ஆண்டில் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருந்த திரைப்படங்களில் ஒன்றாக தனுஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் கேப்டன் மில்லர் திரைப்படத்தின் மிரட்டலான டீசர் இன்று தனுஷின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியானது. ஆரம்பம் முதல் இறுதி வரை நொடிக்கு நொடி வெறித்தனமான ஆக்சன் நிறைந்திருக்கும் இந்த டீசர் கேப்டன் மில்லர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை கூட்டி இருக்கிறது. வருகிற டிசம்பர் 15ஆம் தேதி கேப்டன் மில்லர் திரைப்படம் உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில், கேப்டன் மில்லர் திரைப்படத்திற்கு பிறகு தனுஷ் நடிப்பில் அடுத்த அடுத்த தயாராகும் அட்டகாசமான திரைப்படங்கள் குறித்த பட்டியல் பின்வருமாறு:

அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட படங்கள்

கேப்டன் மில்லர்

ரிலீஸ் தேதி: டிசம்பர் 15, 2023
நடிகர்கள்: தனுஷ், பிரியங்கா அருள் மோகன், சிவராஜ்குமார், சுந்தீப் கிஷன், ஜான் கொக்கன், ஆண்டனி, நிவேதிதா சதீஷ், இளங்கோ குமரவேல்
இயக்குனர்: அருண் மாதேஸ்வரன்
இசை: ஜி.வி.பிரகாஷ் குமார்
தயாரிப்பாளர்: செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜுன் தியாகராஜன் (சத்ய ஜோதி பிலிம்ஸ்)

vadivelu completed his dubbing for chandramukhi 2 movie raghava lawrence

D50

ரிலீஸ் தேதி: இன்னும் அறிவிக்கப்படவில்லை
நடிகர்கள்: தனுஷ்
இயக்குனர்: தனுஷ்
இசை: இன்னும் அறிவிக்கப்படவில்லை
தயாரிப்பாளர்: கலாநிதி மாறன் (சன் பிக்சர்ஸ்)

vadivelu completed his dubbing for chandramukhi 2 movie raghava lawrence
D51

ரிலீஸ் தேதி: இன்னும் அறிவிக்கப்படவில்லை
நடிகர்கள்: தனுஷ்
இயக்குனர்: சேகர் கம்முலா
இசை: இன்னும் அறிவிக்கப்படவில்லை
தயாரிப்பாளர்: சுனில் நரங் மற்றும் புஸ்குர் ராம் மோகன் (ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் LLP) & அமிகோஸ் கிரியேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன.

vadivelu completed his dubbing for chandramukhi 2 movie raghava lawrence

தேரே இஷ்க் மெய்ன்

ரிலீஸ் தேதி: 2024ல் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது
நடிகர்கள்: தனுஷ்
இயக்குனர்: ஆனந்த் எல். ராய்
இசை: ஏ.ஆர்.ரஹ்மான்
தயாரிப்பாளர்: ஆனந்த் எல் ராய் மற்றும் ஹிமான்ஷு ஷர்மா (Color Yellow Productions)

vadivelu completed his dubbing for chandramukhi 2 movie raghava lawrence

PRODUCTION 15

ரிலீஸ் தேதி: இன்னும் அறிவிக்கப்படவில்லை
நடிகர்கள்: தனுஷ்
இயக்குனர்: மாரி செல்வராஜ்
இசை: இன்னும் அறிவிக்கப்படவில்லை
தயாரிப்பாளர்: வுண்டர்பார் பிலிம்ஸ் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ்

vadivelu completed his dubbing for chandramukhi 2 movie raghava lawrence

ஆயிரத்தில் ஒருவன் 2

நடிகர்கள்: தனுஷ்
இயக்குனர்: செல்வராகவன்
இசை: இன்னும் அறிவிக்கப்படவில்லை
தயாரிப்பாளர்: இன்னும் அறிவிக்கப்படவில்லை

vadivelu completed his dubbing for chandramukhi 2 movie raghava lawrence

விரைவில் அறிவிக்கப்படும் / எதிர்பார்க்கப்படும் தனுஷ் திரைப்படங்கள்:

வடசென்னை 2

தனுஷ் வெற்றிமாறன் என்ற வெற்றி கூட்டணியில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளிவந்த வடசென்னை திரைப்படத்தை தொடர்ந்து அப்போதே அறிவிக்கப்பட்ட வடசென்னை - அன்புவின் எழுச்சி எனும் அதன் இரண்டாம் பாகத்திற்காக ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு காத்திருக்கின்றனர். விரைவில் இயக்குனர் வெற்றிமாறன் இந்த படத்தை தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

vadivelu completed his dubbing for chandramukhi 2 movie raghava lawrence

தனுஷ் - வெற்றிமாறன் கூட்டணியின் புதிய படம்

பொல்லாதவன் படத்தில் தொடங்கி ஆடுகளம், வடசென்னை & அசுரன் என தொடர்ந்து தரமான வெற்றி படங்களை கொடுத்து வரும் தனுஷ் - வெற்றிமாறன் கூட்டணியில் மற்றொரு புதிய படம் தயாராக இருப்பதாகவும் இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

vadivelu completed his dubbing for chandramukhi 2 movie raghava lawrence

இயக்குனர் H.வினோத் உடன் புதிய படம்

சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று, நேர்கொண்ட பார்வை, வலிமை மற்றும் துணிவு ஆகிய படங்களின் இயக்குனர் எச்.வினோத் முதல் முறையாக தனுஷ் உடன் புதிய படத்தில் இணைய இருப்பதாக தெரிகிறது. இந்த புதிய படத்தின் அறிவிப்புக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

vadivelu completed his dubbing for chandramukhi 2 movie raghava lawrence
D49

கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் மற்றும் ஜெயிலர் படங்களின் இயக்குனர் நெல்சன் திலீப் குமாருடன் முதல் முறை தனுஷ் இணைய இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த திரைப்படத்தை உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களின் ராஜ்கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் அனிருத் இசை அமைக்க இருப்பதாகவும் தெரிகிறது. இதற்கான அறிவிப்புகளும் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

vadivelu completed his dubbing for chandramukhi 2 movie raghava lawrence
 
தனுஷின் அடுத்த பிரம்மாண்டமான Pan-India படம்... பிறந்தநாள் வாழ்த்துக்களோடு அதிரடி அப்டேட் கொடுத்த D51 படக்குழு!
சினிமா

தனுஷின் அடுத்த பிரம்மாண்டமான Pan-India படம்... பிறந்தநாள் வாழ்த்துக்களோடு அதிரடி அப்டேட் கொடுத்த D51 படக்குழு!

சந்தானத்தின் DD ரிட்டன்ஸ், MSதோனி-ஹரிஷ் கல்யாணின் LGM, பரத்தின் LOVE & பீட்சா-3 என ஒரே நாளில் வெளியாகும் 9 படங்கள்! முழு பட்டியல் உள்ளே
சினிமா

சந்தானத்தின் DD ரிட்டன்ஸ், MSதோனி-ஹரிஷ் கல்யாணின் LGM, பரத்தின் LOVE & பீட்சா-3 என ஒரே நாளில் வெளியாகும் 9 படங்கள்! முழு பட்டியல் உள்ளே

ரிலீஸுக்கு ரெடியான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பக்கா மாஸ் ஜெயிலர்... அதிரடியாக வந்த சென்சார் அறிக்கை இதோ!
சினிமா

ரிலீஸுக்கு ரெடியான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பக்கா மாஸ் ஜெயிலர்... அதிரடியாக வந்த சென்சார் அறிக்கை இதோ!