தமிழ் திரையுலகின் இளம் நடிகராய் வலம் வந்து ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் ஹரிஷ் கல்யாண். ‘ப்யார் பிரேமா காதல்’ தொடங்கி இன்று வரை ரசிகர்களை அவரது திரைப்படம் மூலம் மகிழ்வித்து கொண்டிருக்கிறார். ஒரு ஆண்டு இடைவெளிக்கு பின் ஹரிஷ் கல்யாண் மேலும் பல படங்களில் நடித்து வருகிறார். அதன்படி ஹரிஷ் கல்யான் தற்போது தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ‘லப்பர் பந்து’ என்ற படத்தில் நடித்து வருகிறார். பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் ஹரிஷ் கல்யாண் உடன் இணைந்து மற்றொரு ஹீரோவாக அட்டகத்தி தினேஷ் நடித்து வருகிறார். அதனையடுத்து ஹரிஷ் கல்யாண் இயக்குனர் சண்முகம் முத்துசாமி இயக்கத்தில் ‘டீசல்’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இதனிடயே தற்போது ஹரிஷ் கல்யாண் முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் எம் எஸ் தோனி சார்பில் தோனி எண்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் முதல் திரைப்படமாக தமிழில் உருவாகியுள்ள LGM (Let’s Get Married) என்ற படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார்.
அறிமுக இயக்குனர் ரமேஷ் தமிழ்மணி இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் ஹீரோவாக ஹரிஷ் கல்யாண் அவருக்கு ஜோடியாக ‘லவ் டுடே’ பட நாயகி இவானா நடித்துள்ளார். மேலும் படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் பிரபல நடிகை நதியா நடித்துள்ளார். இவர்களுடன் யோகி பாபு, தீபா, விடிவி கணேஷ், ஸ்ரீநாத், ஆர்ஜே விஜய், வினோதினி வைத்தியநாதன் ஆகியோர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவாளர் விஷ்வாஜித் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய, பிரதீப் படத்தொகுப்பு செய்துள்ளார். மேலும் இயக்குனர் ரமேஷ் தமிழ்மணி இசையமைத்துள்ளார். இவரது இசையில் வெளியான பாடல்கள் தற்போது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
காதல் மற்றும் காமெடி களத்தில் குடும்பங்களுக்கு ஏற்ற கதைகளத்தில் உருவான இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் தனி எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. அதன்படி எல் ஜி எம் திரைப்படம் இன்று நாடு முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகியுள்ளது.
இந்நிலை ரசிகர்களின் ஆரவாரத்துடன் திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் எல்ஜியம் திரைப்படத்தை முன்னிட்டு படத்தின் நாயகன் ஹரிஷ் கல்யாண் தற்போது எல் ஜி எம் படம் குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் அந்த வீடியோவில்,
“மூன்று வருடத்திற்கு பிறகு எனக்கு ஒரு திரையரங்க வெளியீடு இது.. அதுமட்டுமின்றி தோனி என்டர்டெயின்மண்டின் முதல் தயாரிப்பு. ரொம்ப சந்தோஷமா இருக்கு. அது மட்டுமல்லாமல் பதட்டமாகவும் இருக்கு.. இது ரொம்ப ஜாலியான படம். எல்லோரும் என்ஜாய் பண்ணுவீங்க னு நாங்க நம்புறோம். திரையயங்கிற்கு போய் உங்களுடைய நேர்மையா பின்னோட்டத்தை கொடுங்க.” என்று ஹரீஷ் கல்யாண் ரசிகர்களிடம் பகிர்ந்து வீடியோ வெளியிட்டுள்ளார்.
தற்போது ஹரிஷ் கல்யாண் வெளியிட்ட வீடியோ ரசிகர்களிடம் அதிகம் பகிரப்பட்டு இணையத்தில் வைரல் ஆகி வருகிறது
#LGM - The movie is all yours from today. Family friends’oda poi enjoy pannunga. Unga ellarukkum en #AnbuMattume#LGMFromToday pic.twitter.com/pZOpyZ0jgu
— Harish Kalyan (@iamharishkalyan) July 28, 2023