வேகமெடுக்கும் சந்திரமுகி 2 பட இறுதி கட்டப்பணிகள்... சூப்பரான அறிவிப்புடன் வந்த வடிவேலுவின் அட்டகாசமான வீடியோ இதோ!

சந்திரமுகி 2 பட டப்பிங் நிறைவு செய்த வடிவேலு,vadivelu completed his dubbing for chandramukhi 2 movie raghava lawrence | Galatta

ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருக்கும் சந்திரமுகி 2 திரைப்படத்தின் இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், படத்தின் டப்பிங் குறித்த முக்கிய அறிவிப்போடு வடிவேலுவின் அட்டகாசமான புதிய வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. முன்னதாக மலையாளத்தில் நடிகர் மோகன்லால் நடிப்பில் வெளிவந்த சூப்பர் ஹிட்டான மணிசித்திரதாழ் திரைப்படத்தின் ரீமேக்காக, இயக்குனர் பி வாசு இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கதாநாயகனாக நடித்து 2005ல் வெளிவந்த சந்திரமுகி திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் திரைப்படங்களில் முக்கிய படமாக பிளாக்பஸ்டர் ஹிட்டான சந்திரமுகி திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது சந்திரமுகி 2 திரைப்படம் தயாராகி வருகிறது. 

லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கும், சந்திரமுகி 2 திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ஹீரோ கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகர் ராகவா லாரன்ஸ் சந்திரமுகி 2 படப்பிடிப்பிற்கு முன்பாக சூப்பர் ஸ்டார் அவர்களை நேரில் சந்தித்து ஆசி பெற்று சந்திரமுகி 2 படத்தின் படப்பிடிப்பை தொடங்கினார். கதையின் நாயகன் நாயகியாக ராகவா லாரன்ஸ் மற்றும் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் இணைந்து நடித்துள்ளனர். வைகைப்புயல் வடிவேலு, ராதிகா சரத்குமார், ரவிமரியா, மஹிமா நம்பியார், லட்சுமி மேனன், ஷ்ருஷ்டி தாங்கே, சுரேஷ் மேனன், விக்னேஷ் மற்றும் சுபிக்ஷா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் சந்திரமுகி 2 திரைப்படத்தில் நடித்துள்ளனர். 

தோட்டா தரணி அவர்களின் கலை இயக்கத்தில் R.D.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்யும் சந்திரமுகி 2 திரைப்படத்திற்கு ஆஸ்கார் விருது வென்ற பாகுபலி மற்றும் RRR திரைப்படங்களின் இசையமைப்பாளர் MM.கீரவாணி இசையமைக்கிறார்.  விறுவிறுப்பாக நடைபெற்ற சந்திரமுகி 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில தினங்களுக்கு முன்பு முற்றிலுமாக நிறைவடைந்தது. அனைத்து தரப்பு ரசிகர்களும் கொண்டாடும் வகையிலான பக்கா ஹாரர் காமெடி ஃபேமிலி என்டர்டெயன்ராக ட்ரீட்டாக வருகிற செப்டம்பர் மாதம் 19ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி வெளியீடாக சந்திரமுகி 2 திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி & கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் பேன் இந்தியா படமாக உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது. எனவே அதற்காக சந்திரமுகி 2 திரைப்படத்தின் இறுதி கட்டப் பணிகள் அனைத்தும் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

முன்னதாக நடிகர் ராகவா லாரன்ஸ் சந்திரமுகி 2 திரைப்படத்திற்கான தனது டப்பிங் பணிகளை முடித்த நிலையில், படத்திற்கு பின்னணி இசை சேர்த்த இசை அமைப்பாளர் MM.கீரவாணி அவர்கள் சந்திரமுகி 2 படம் மிகவும் சிறப்பாக வந்திருப்பதாக தனது முதல் விமர்சனத்தை கொடுத்திருந்தார். இந்த நிலையில் தற்போது வைகைப்புயல் வடிவேலு அவர்கள் தன் பகுதி டப்பிங் நிறைவு செய்திருப்பதாக பட குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இதனை அறிவிக்கும் வகையில் டப்பிங் பணிகளில் வடிவேலு கலந்து கொண்ட அட்டகாசமான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் அனைவரும் “முருகேசா IS BACK” என இந்த வீடியோவை சோசியல் மீடியாவில் வைரலாக்கி வருகின்றனர். கலக்கலான அந்த வீடியோ இதோ…
 

It's guaranteed fun 😁 when our Murugesan is around us! We are as eager as you are, to listen him say Govaalu & Maappu once again! 😁🤩✨

Our "Vaigai Puyal" #Vadivelu 🤗 completes his dubbing for #Chandramukhi2 🗝️

Stay tuned for more updates from the house of Chandramukhi 👻… pic.twitter.com/CZ83FqYTvd

— Lyca Productions (@LycaProductions) July 28, 2023

சந்தானத்தின் DD ரிட்டன்ஸ், MSதோனி-ஹரிஷ் கல்யாணின் LGM, பரத்தின் LOVE & பீட்சா-3 என ஒரே நாளில் வெளியாகும் 9 படங்கள்! முழு பட்டியல் உள்ளே
சினிமா

சந்தானத்தின் DD ரிட்டன்ஸ், MSதோனி-ஹரிஷ் கல்யாணின் LGM, பரத்தின் LOVE & பீட்சா-3 என ஒரே நாளில் வெளியாகும் 9 படங்கள்! முழு பட்டியல் உள்ளே

ரிலீஸுக்கு ரெடியான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பக்கா மாஸ் ஜெயிலர்... அதிரடியாக வந்த சென்சார் அறிக்கை இதோ!
சினிமா

ரிலீஸுக்கு ரெடியான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பக்கா மாஸ் ஜெயிலர்... அதிரடியாக வந்த சென்சார் அறிக்கை இதோ!

சினிமா

"கொளுத்தி போடு டப்பாஸ!"- சிவகார்த்திகேயனின் சூப்பர் ஹிட் மாவீரன் பட கலக்கலான சீனா சீனா பாடலின் UNCUT வீடியோ இதோ!