"ஏன்டா இந்த படத்துல நடிச்சேனு ஆயிடுச்சு" நடிகர் சந்தானம் பகிர்ந்து கொண்ட சுவாரஸ்யமான தகவல் – Exclusive Interview இதோ..

மோசமான அனுபவம் குறித்து நடிகர் சந்தானம் பகிர்ந்த தகவல் வீடியோ உள்ளே - Actor Santhanam shared about his worst experience in movie | Galatta

நடிகர் சந்தானம் நடிப்பில் ஹாரர் காமெடி கதைகளத்தில் உருவான திரைப்படம் டிடி ரிட்டன்ஸ். இயக்குனர் பிரேம் ஆனந்த் இயக்கத்தில் வித்யாசமான பேய் படமாக உருவாகியுள்ள டிடி ரிட்டன்ஸ் படத்தில் சந்தானம் ஹீரோவாக நடிக்க அவருக்கு ஜோடியாக சுரபி நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் முக்கிய கதாபாத்திரங்களில் ரெட்டின் கிங்ஸ்லி, மாறன், பிரதீப் ராவட், மசூம் ஷங்கர், பெப்சி விஜயன், மொட்டை ராஜேந்திரன், முனீஸ் காந்த், தீனா, விபின், தங்கதுரை, தீபா, சைதை சேது மற்றும் மானசி உள்ளிட்ட பல முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.  ஆர்கே என்டர்டைன்மென்ட் தயாரிப்பில் உருவான இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் தீபக் குமார் பதி ஒளிப்பதிவு செய்ய, ஸ்ரீகாந்த் படத்தொகுப்பு செய்துள்ளார். மேலும் படத்திற்கு OFRO இசை அமைத்திருக்கிறார்

முன்னதாக இப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே டிடி ரிட்டன்ஸ் படத்த்தின் மீதான ஆவலை அதிகரித்தது. அதன்படி இன்று தமிழகமெங்கும் டிடி ரிட்டன்ஸ் திரைப்படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருகிறது. தொடர்ந்து மக்களின் ஆதவுடன் சந்தானத்தின் டிடி ரிட்டன்ஸ் படத்திற்கு நேர்மறையான விமர்சனங்களும் பாராட்டுகளும் வந்த வண்ணம் உள்ளது.

இந்நிலையில் நடிகர் சந்தானம் நமது கலாட்டா தமிழ் சிறப்பு பேட்டியில் கலந்து கொண்டு தனது திரைப்பயணம் குறித்து பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார். அதில் தான் நடித்ததில் மோசமான அனுபவம் கொடுத்த திரைப்படம் குறித்து பேசுகையில்.  

"நான் ஒரு படம் நடிச்சேன். காமெடியனா இருக்கும் போது. அந்த படம் பேரு என் கண்ணில் ஏன் விழுந்தாய் னு என்னமோ வரும்.. அவங்க என்ன பண்ணுவாங்கறா வருஷத்துக்கு ஒரு‌முறை கூப்டுவாங்க நடிக்க வைப்பாங்க.. திரும்பவும் அடுத்த வருஷம் அடுத்த ஷெட்டியூல் னு சொல்லுவாங்க.. ஹீரோ ஹீரோயினுக்கு வயசாயிடுச்சு.. நானும் வளர்ந்துட்டேன். கிட்டத்தட்ட 4 வருஷம் எடுத்துருப்பாங்க.. ஏன் அப்படி பண்ணாங்க னு தெரில..

ஒரு நாள் கார்ல கூப்டு போனாங்க.. ஒரு நெடுஞ்சாலை அது. அங்க இறக்கிவிட்டு வாக்கி டாக்கி கொடுத்துட்டு போயிட்டாங்க. கார்ல பின்னாடி கேமரா இருந்தது. வாக்கி டாக்கில 'சார் எதனா காமெடி பண்ணுங்க' னு சொன்னாங்க. யோவ் என்னய்யா சொல்றனு கேட்டேன்.. காமெடி சீன் இது.. ரோட் அனுமதி இல்லை.. டக்கனு பண்ணுங்க னு சொன்னாங்க  அப்போதான் நான் யோசிச்சேன்.. இவனுங்க கண்ணுல நான் ஏன் விழுந்தேன்னு.. அது ஆரம்ப கால கட்டம் என்பதால் இது போன்ற படங்களும் வந்தது. அதன்பிறகு நான் சரியான படங்களை தேர்ந்தெடுத்து நடித்தேன்." என்றார் நடிகர் சந்தானம்.

மேலும் நடிகர் சந்தானம் நமது கலாட்டா தமிழ் சிறப்பு பேட்டியில் தனது திரைப்பயணம் குறித்து பகிர்ந்த பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்ட வீடியோ இதோ.. ..  

 

“ஆர்யா Racer போல கார் ஒட்டுவான்..” சந்தானம் பகிர்ந்த கலகலப்பான தகவல்.. – Exclusive Interview உள்ளே..
சினிமா

“ஆர்யா Racer போல கார் ஒட்டுவான்..” சந்தானம் பகிர்ந்த கலகலப்பான தகவல்.. – Exclusive Interview உள்ளே..

“இதோ கிளம்பிட்டேன்..” யுவன் ஷங்கர் ராஜாவின் தேடுதலுக்கு உடனே புறப்பட்ட சந்தோஷ் நாராயணன்.. - இணையத்தில் வைரலாகும் கலகலப்பான பதிவு உள்ளே..
சினிமா

“இதோ கிளம்பிட்டேன்..” யுவன் ஷங்கர் ராஜாவின் தேடுதலுக்கு உடனே புறப்பட்ட சந்தோஷ் நாராயணன்.. - இணையத்தில் வைரலாகும் கலகலப்பான பதிவு உள்ளே..

“அதை எதிர்க்கும் முதல் ஆளாக நான் இருப்பேன்” வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகர் நாசர்.. – விவரம் உள்ளே..
சினிமா

“அதை எதிர்க்கும் முதல் ஆளாக நான் இருப்பேன்” வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகர் நாசர்.. – விவரம் உள்ளே..