கோமாளி படத்தின் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் நடிகராக களமிறங்கி இயக்கி நடித்து சமீபத்தில் வெளிவந்த லவ் டுடே திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்ற சூப்பர் ஹிட் ஆகியுள்ளது. ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் ரெட் ஜெயன்ட் மூவிஸ் வெளியிட்ட லவ் டுடே திரைப்படத்தை ரசிகர்கள் திரையரங்குகளில் ரிப்பீட் மோடில் கண்டு ரசித்து கொண்டாடி வருகின்றனர்.

இதனை அடுத்து இயக்குனர் பிரதீப் ரங்கநாதனின் அடுத்தடுத்த திரைப்படங்களுக்காக ரசிகர்கள் பெரும் ஆவலோடு காத்திருக்கின்றனர். முன்னதாக சமீபத்தில் லவ் டுடே திரைப்படத்தை கண்டு ரசித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இயக்குனர் பிரதீப் ரங்கநாதனை நேரில் சந்தித்து பொன்னாடை போர்த்தி பாராட்டியுள்ளார். இதனிடையே நமது கலாட்டா சேனலில் லவ் டுடே படத்தின் கொண்டாட்ட விழாவில் கலந்து கொண்ட இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார்.

கடந்த சில தினங்களாகவே சமூக வலைதளங்களில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் புதிய படத்தில் இணைகிறார்கள் எனவும் அந்தப் படத்திற்கு JOINT ஜெகதீசன் என பெயரிடப்பட்டுள்ளதாகவும் சோசியல் மீடியாவில் பலவிதமான பதிவுகள் உலா வந்தன. இது குறித்தும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் இணைந்து பணியாற்றுவது குறித்தும் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் அவர்களிடம் கேட்கப்பட்டது.

இதற்கு பதில் அளித்த இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் முன்னதாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை சந்தித்த அந்த அரை மணி நேரத்தில் நடந்த நிகழ்வுகளை மிகுந்த மகிழ்ச்சியோடு பகிர்ந்து கொண்டார். மேலும் லவ் டுடே திரைப்படத்தை சூப்பர் ஸ்டார் எப்படி எல்லாம் ரசித்தார் என ரஜினிகாந்த் விவரத்தை பகிர்ந்து கொண்டார். 

இதனை அடுத்து “சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுடன் இணைந்து பணியாற்ற கட்டாயமாக விருப்பமாக உள்ளது… நல்லதே நடக்கும்” என தெரிவித்தார். மேலும் சோசியல் மீடியாக்களில் பரவும் இந்த “JOINT ஜெகதீசன் பதிவுகளை பார்த்தேன். ஆனால் அது உண்மை அல்ல பொய்” எனவும் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் தெரிவித்துள்ளார். மேலும் பல சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்து கொண்ட இயக்குனர் பிரதீப் ரங்கநாதனின் அந்த சிறப்பு வீடியோ இதோ…