புகழ்மிக்க எழுத்தாளர் அமரர் கல்கியின் அற்புதப் படைப்பான பொன்னியின் செல்வன் நாவலை தனது அயராத உழைப்பாலும் விடாமுயற்சியாலும் இயக்குனர் மணிரத்னம் நிஜமாக்கியுள்ளார். எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின் வசனங்களில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்ய, ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்துள்ளார்.

சீயான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யாராய், த்ரிஷா, பிரகாஷ் ராஜ், சரத்குமார், பார்த்திபன், ஜெயராம், இளையதிலகம் பிரபு, விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா லெக்ஷ்மி, நிழல்கள் ரவி, ஷோபிதா, லால், அஷ்வின் காக்கமனு, ஜெயசித்ரா, கிஷோர், அர்ஜுன் சிதம்பரம், ரியாஸ்கான் உள்ளிட்ட பலர் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து பிரம்மாண்டமாக தயாரிக்க, தோட்டா தரணியின் பிரம்மிப்பான கலை இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு மேலும் தனது இசையால் மெருகேற்றி இருக்கிறார் இசையமைப்பாளர் "இசைப்புயல்" ஏ.ஆர்.ரஹ்மான். படத்தின் பாடல்களும் பின்னணி இசையும் படத்தை மாற்றொரு தளத்திற்கு எடுத்துச் சென்றது.

தொடர்ந்து பொன்னின் செல்வன் திரைப்படத்தின் 2வது பாகம் அடுத்த ஆண்டு(2023) ஏப்ரல் 28-ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில் பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் திரையறங்குகளில் 50 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டி, பாக்ஸ் ஆபிஸில் புதிய உச்சமாக 500 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளனர்.
 

Somebody pls pinch me.. & tell me this is not a dream. #PonniyinSelvan pic.twitter.com/zZ7BhAm1HF

— Vikram (@chiyaan) November 18, 2022