அரசியல் - சினிமா என இரண்டிலும் மிகவும் கவனத்தோடும் நேர்த்தியாகவும் பயணம் செய்து வரும் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் கதாநாயகனாக நடித்த கலகத் தலைவன் திரைப்படம் இன்று நவம்பர் 18ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பையும் பெற்றுள்ளது. தொடர்ந்து இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்த மாமன்னன் திரைப்படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.

இதனிடையே நடிகராக தனது திரை பயணத்தில் 10 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கும் உதயநிதி ஸ்டாலின் அவர்களை கொண்டாடும் வகையில் 10 YEARS OF UDHAYANIDHI STALIN  WITH GALATTA நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றது. இதில் தனது திரைப்பயணத்தின் சுவாரசியமான அனுபவங்களை பகிர்ந்து கொண்ட உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இந்த ஆண்டில் (2022)தனது ரெட் ஜெயன்ட் மூவிஸ் சார்பில் வெளியிடும் திரைப்படங்களின் பாக்ஸ் ஆபிஸ் வெற்றி-தோல்வி குறித்தும் நேர்மையாக பகிர்ந்து கொண்டார்.

சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் - BLOCKBUSTER!! “வசூல் ரீதியாக இது வெற்றி படம்”,  தளபதி விஜயின் பீஸ்ட் - BLOCKBUSTER!! “கண்டிப்பா இது வசூல் ரீதியா BLOCKBUSTER படம் இன்னும் நன்றாக இருந்திருக்கலாம். ஆனால் வசூல் ரீதியாக இது மிகப்பெரிய வெற்றி படம்!”. சிவகார்த்திகேயனின் டான் - BLOCKBUSTER!! “சிவகார்த்திகேயனின் திரைப்பயணத்திலேயே அதிக வசூல் செய்த படம் இந்த படம் தான். கிட்டத்தட்ட தமிழ்நாட்டில் மட்டுமே 38 கோடி ரூபாய் வசூலித்தது.”

சீயான் விக்ரமின் கோப்ரா - AVERAGE!!,  உலகநாயகன் கமல்ஹாசனின் விக்ரம் -  “இது ஊருக்கே தெரியும்” BLOCKBUSTER!!, பிரதீப் ரங்கநாதனின் லவ் டுடே - BLOCKBUSTER!! “இந்தப் படம் பட்ஜெட் வெறும் 5.5கோடி OTT மட்டுமே 5.5கோடிக்கு விற்று விட்டார்கள் தமிழ்நாடு திரையரங்குகளில் மட்டும் 18 ல் இருந்து 20 கோடி ரூபாய் வசூல் ஆனது. இந்த வருடத்திலேயே மிகப்பெரிய ஹிட்டுகளில் இந்த படமும் இருக்கும். ஏனென்றால் இந்த இயக்குனர் இப்போது இருக்கும் ரசிகர்களோடு ரொம்பவே கனெக்ட் ஆகிவிட்டார். இன்னும் சொல்லப்போனால் ஒவ்வொரு நாளுக்கும் வசூலும் திரையரங்குகளும் அதிகமாகிக் கொண்டே இருக்கின்றன.” 

சிலம்பரசன்.TRன் வெந்து தணிந்தது காடு - BLOCKBUSTER!!, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அண்ணாத்த - AVERAGE!  “வசூல் ரீதியாக இன்னும் கொஞ்சம் நன்றாக வந்திருக்க வேண்டிய படம். இன்னும் கொஞ்சம் நன்றாக எடுத்து இருக்கலாம். நான் இன்னும் படம் பார்க்கவில்லை” . அஜித் குமாரின் துணிவு - “ரிலீஸானால் தான் தெரியும்! ரிலீசுக்கு பிறகு சொல்கிறேன்.” என உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பதில் அளித்துள்ளார். சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகும் இந்த வீடியோ இதோ…