சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர்ஹிட் தொடர்களில் ஒன்று வானதைப்போல.அண்ணன் தங்கை பாசத்தை மையமாக வைத்து இந்த தொடர் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இந்த தொடர் சூப்பர்ஹிட் தொடராக உருவெடுத்துள்ளது.

தமன் குமார்,ஸ்வேதா கெல்ஜே அண்ணன் தங்கையாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளை அள்ளி வந்தனர்.சில மாதங்களுக்கு முன் இவர்கள் விலக இவர்களுக்கு பதிலாக ஸ்ரீகுமார் மற்றும் மான்யா ஆனந்த் தொடரின் முதன்மை வேடங்களில் நடித்து வருகின்றனர்.

தேபாஜினி இந்த தொடரின் ஹீரோயினாக நடித்து வருகிறார்.கார்த்தி,திலக்,ப்ரீத்தி குமார்,மௌனிகா,செந்தில் குமாரி,மகாநதி ஷங்கர் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.

300 எபிசோடுகளை கடந்து இந்த தொடர் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.இந்த தொடரில் சரவணன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்த ஷங்கரேஷ் சில காரணங்களால் விலக இவருக்கு பதிலாக பிரபல சீரியல் நடிகர் சந்தோஷ் இணைந்துள்ளார் என்ற தகவல் கிடைத்துள்ளது