"கலைத்துவமான சூதாட்டம்"- பொம்மை படத்தை தயாரித்து நடித்துள்ள SJசூர்யா படங்களை தயாரிப்பது பற்றி கருத்து! வீடியோ இதோ

படங்களை தயாரிப்பது குறித்து எஸ் ஜே சூர்யா கருத்து,sj suryah about producing movies in galatta plus interview | Galatta

பொம்மை திரைப்படத்தை தயாரித்து நடித்திருக்கும் எஸ்.ஜே.சூர்யா அவர்கள் இந்த காலகட்டத்தில் திரைப்படங்களை தயாரிப்பது என்பது கலைத்துவமான சூதாட்டம் எனக் குறிப்பிட்டு பேசியிருக்கிறார். இயக்குனராகவும் நடிகராகவும் தமிழ் சினிமா ரசிகர்களை தொடர்ந்து மகிழ்வித்து வரும் எஸ்.ஜே.சூர்யா அவர்கள் அடுத்ததாக விஷாலுடன் இணைந்து வித்தியாசமான டைம் டிராவல் கேங்ஸ்டர் படமாக தயாராகி இருக்கும் மார்க் ஆண்டனி, பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் ராம்சரண் கதாநாயகனாக நடிக்க உருவாகி வரும் கேம் சேஞ்சர் ஆகிய திரைப்படங்களில் மிரட்டலான வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். தொடர்ந்து மீண்டும் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் உடன் இணைந்த SJ.சூர்யா ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதில் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் இந்த தீபாவளி வெளியிட ரிலீஸாக இருக்கிறது. 

இதனிடையே மான்ஸ்டர் திரைப்படத்திற்கு பிறகு சூர்யா பிரியா பவானி சங்கர் இணைந்து நடித்திருக்கும் திரைப்படம் தான் பொம்மை. மொழி மற்றும் அபியும் நானும் உட்பட பல படங்களை இயக்கி தமிழ் சினிமாவின் மிக முக்கிய இயக்குனர்களில் ஒருவராக திகழும் இயக்குனர் ராதா மோகன் பொம்மை படத்தை எழுதி இயக்கியுள்ளார். மான்ஸ்டர் திரைப்படத்திற்கு பிறகு SJ.சூர்யா & பிரியா பவானி சங்கர் இருவரும்  மீண்டும் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் பொம்மை திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருக்கிறார். ரிச்சர்ட்.M.நாதன் ஒளிப்பதிவில், அண்தோனி படத்தொகுப்பு செய்துள்ள பொம்மை திரைப்படத்தின் பாடல்களை பாடலாசிரியர் கார்க்கி எழுதியுள்ளார். டாக்டர் V.மருது பாண்டியன், டாக்டர் ஜாஸ்மின் சந்தோஷ், மற்றும் டாக்டர் தீபா.T.துரை ஆகியோரது தயாரித்துள்ள பொம்மை திரைப்படத்தை ஏஞ்சல் ஸ்டுடியோ சார்பில் SJ.சூர்யா அவர்கள் வழங்குகிறார். SJ.சூர்யா நடிப்பில் நீண்ட காலமாக ரசிகர்கள் ஆவலோடு காத்திருந்த பொம்மை திரைப்படம் நாளை ஜூன் 16ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது.

இந்த நிலையில் நமது கலாட்டா பிளஸ் சேனலில் திரு பரத்வாஜ் அங்கன் அவர்களோடு சிறப்பு நேர்காணலில் பேசிய எஸ்.ஜே.சூர்யா அவர்களிடம், “இந்த காலகட்டத்தில் ஒரு படத்தை தயாரிப்பது என்பது ஈஸியான விஷயமா?” எனக் கேட்ட போது, “கஷ்டம்.. கஷ்டம்.. திரைப்படம் என்பது ஒரு இயக்குனருக்கு அது ஒரு கலை.. ஒரு நடிகருக்கு அது ஒரு கலை.. ஆனால் ஒரு தயாரிப்பாளருக்கு அது சூதாட்டம் தான். எப்போதுமே அப்படித்தான்… வேண்டுமானால் “கலைத்துவமான சூதாட்டம்” என சொல்லிக் கொள்ளலாம். ஆனால் சூதாட்டம் தான். இதில் போட்ட காசு வரலாம் வராமலும் போகலாம். அப்போதுதான் நான் நினைத்தேன் இந்த படம் மக்கள் ஹிட் கொடுத்தார்கள் என்றால் எனக்கு போட்ட காசு லாபமாக வரும். ஒருவேளை ஹிட் கொடுக்கவில்லை என்றால் மொத்தமும் போய்விடும். முன்பு மாதிரி கொஞ்சம் வரும் அப்படி எல்லாம் கிடையாது மொத்தமும் போய்விடும். அதனால் எல்லாவற்றுக்கும் தயாராக இருக்க வேண்டும் அவ்வளவு தான். ஆனால் ஒரு நல்ல விஷயத்தை செய்யும்போது எப்போதுமே மக்கள் அதை தவிர்த்ததில்லை. அதை மதிக்காமல் போனதில்லை என்பது தெரியும்.” என தெரிவித்திருக்கிறார். மேலும் பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்ட எஸ்.ஜே.சூர்யாவின் அந்த முழு பேட்டியை கீழே உள்ள லிங்கில் காணலாம்.
 

சினிமா

"நடிப்பதைத் தாண்டி பொம்மை படத்தை தயாரிக்க காரணம் என்ன?"- முதல் முறை உண்மையை உடைத்த SJசூர்யா! ட்ரெண்டிங் வீடியோ

கேஜிஎஃப் தயாரிப்பாளருடன் கைகோர்த்த ஃபகத் பாசிலின் தூமம்... கவனத்தை ஈர்க்கும்
சினிமா

கேஜிஎஃப் தயாரிப்பாளருடன் கைகோர்த்த ஃபகத் பாசிலின் தூமம்... கவனத்தை ஈர்க்கும் "தீயே தாகமோ" பாடல் இதோ!

விக்ரம் பிரபு - வாணி போஜனின் பாயும் ஒளி நீ எனக்கு... ரொமான்டிக்கான
சினிமா

விக்ரம் பிரபு - வாணி போஜனின் பாயும் ஒளி நீ எனக்கு... ரொமான்டிக்கான "ஹே பாப்பா" பாடல் லிரிக் வீடியோ இதோ!