சுந்தர்.Cயின் பக்கா ஆக்ஷனில் வரும் தலைநகரம் 2... ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்த ரிலீஸ் தேதி அறிவிப்பு இதோ!

சுந்தர்.Cயின் தலைநகரம் 2 படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு | Galatta

தமிழ் சினிமாவில் பல சூப்பர் ஹிட் படங்கள் கொடுத்த வெற்றிகரமான இயக்குனராகவும் நடிகராகவும் திகழும் சுந்தர்.C அவர்கள் நடிப்பில் தயாராகி இருக்கும் தலைநகரம் 2 திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு தற்போது வெளியானது. காலம் கடந்தும் ரசிகர்களால் ரசிக்கப்படும் பல அட்டகாசமான வெற்றி படங்களை கொடுத்த இயக்குனர் சுந்தர் சி தனது அரண்மனை சீரிஸின் அடுத்த பாகமாக வரும் அரண்மனை 4 திரைப்படத்தை அடுத்து தொடங்க இருக்கிறார். அதுபோக சில ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டு பின்னர் கைவிடப்பட்ட பிரம்மாண்ட படைப்பான சங்கமித்ரா படத்தையும் விரைவில் ஆரம்பிக்க இருப்பதாக தெரிகிறது.

மறுபுறம் நடிகராக, தொடர்ந்து ஒன் 2 ஒன், வள்ளான் ஆகிய படங்கள் சுந்தர்.C நடிப்பில் அடுத்தடுத்து வெளிவர இருக்கின்றன. மேலும் தனது அரண்மனை 4 படத்திலும் சுந்தர்.C முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். இதனிடையே சுந்தர் சி நடிப்பில் அதிரடி ஆக்சன் திரைப்படமாக தயாராகி அடுத்து வெளிவர இருக்கும் திரைப்படம் தான் தலைநகரம் 2. கடந்த 2006 ஆம் ஆண்டு வெளிவந்த தலைநகரம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக இயக்குனர் சுந்தர்.C களமிறங்கினார். இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் பக்கா ஆக்சன் படமாக வெளிவந்த தலைநகரம் திரைப்படம் ரசிகர்களிடையே வரவேற்ப்பை மாபெரும் வெற்றி பெற்றது. குறிப்பாக வைகைப்புயல் வடிவேலுவின் நகைச்சுவை காட்சிகள் அனைத்தும் தலைநகரம் திரைப்படத்திற்கு இன்னும் பலம் கூட்டியதுடன் இன்று வரை மக்களால் வெகுவாக ரசிக்கப்பட்டும் வருகின்றன.

தலைநகரம் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து கிட்டதட்ட 17 ஆண்டுகள் கழித்து தலைநகரம் 2 திரைப்படம் தற்போது தயாராகி உள்ளது. அஜித் குமாரின் முகவரி, சிலம்பரசன்.TRன் தொட்டி ஜெயா, பரத்தின் நேபாளி, ஷாமின் 6 மெழுகுவர்த்திகள் மற்றும் சுந்தர்.C-யின் இருட்டு உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் VZ.துரை இயக்கத்தில் உருவாகி இருக்கும் தலைநகரம் 2 திரைப்படத்தை ரைட் ஐ தியேட்டர்ஸ் நிறுவனம் சார்பில் SM.பிரபாகரன் மற்றும் இயக்குனர் VZ.துரை ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். சுந்தர்.C உடன் இணைந்து பல்லாக் லால்வாணி கதாநாயகியாக நடிக்க, தம்பி ராமையா பாகுபலி பிரபாகர் ஆயிரா ஜெய்சி ஜோஸ் விஷால் ராஜன் சேரன் ராஜ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள தலைநகரம் 2 திரைப்படத்திற்கு E.கிருஷ்ணசாமி ஒளிப்பதிவில், R.சுதர்சன் படத்தொகுப்பு செய்ய, ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

ஏற்கனவே முதல் பாகத்தில் ரசிகர்களை கவர்ந்த ரைட்டு கதாபாத்திரத்தில் இன்னும் மிரட்டலான லுக்கில் சுந்தர்.சி -யின் பக்கா அதிரடி ஆக்சன் படமாக வரும் தலைநகரம் 2 திரைப்படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருக்கிறது. முன்னதாக தலைநகரம் 2 படம் இந்த ஜூன் மாத இறுதிக்குள் வெளியாகும் என படக் குழுவினர் அறிவித்திருந்தனர். இந்த நிலையில், வருகிற ஜூன் 23ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என தற்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.
 

கேஜிஎஃப் தயாரிப்பாளருடன் கைகோர்த்த ஃபகத் பாசிலின் தூமம்... கவனத்தை ஈர்க்கும்
சினிமா

கேஜிஎஃப் தயாரிப்பாளருடன் கைகோர்த்த ஃபகத் பாசிலின் தூமம்... கவனத்தை ஈர்க்கும் "தீயே தாகமோ" பாடல் இதோ!

விக்ரம் பிரபு - வாணி போஜனின் பாயும் ஒளி நீ எனக்கு... ரொமான்டிக்கான
சினிமா

விக்ரம் பிரபு - வாணி போஜனின் பாயும் ஒளி நீ எனக்கு... ரொமான்டிக்கான "ஹே பாப்பா" பாடல் லிரிக் வீடியோ இதோ!

கதையே கேட்காமல் நடிப்பேன்!- பிரியா பவானி சங்கரின் ஃபேவரட் இயக்குனர்கள்... காரணம் என்ன? வைரல் வீடியோ இதோ
சினிமா

கதையே கேட்காமல் நடிப்பேன்!- பிரியா பவானி சங்கரின் ஃபேவரட் இயக்குனர்கள்... காரணம் என்ன? வைரல் வீடியோ இதோ