‘இறவாக்காலம்’ ரிலீஸ் தேதி எப்போது? முதல் முறையாக எஸ் ஜே சூர்யா பகிர்ந்த சுவாரஸ்யமான தகவல் – Exclusive interview உள்ளே..

இறவாக்காலாம் ரிலீஸ் தேதி குறித்து எஸ் ஜே சூர்யா பகிர்ந்த தகவல் முழு வீடியோ உள்ளே - SJ Suryah about iravaakaalam release announcement | Galatta

தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகி பல ஹிட் திரைப்படங்களை கொடுத்து பின் நடிகராக களம் இறங்கி நுணுக்கமான முறையில் கதாபாத்திரத்தை உள்வாங்கி கச்சிதமாக நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் நடிகர் எஸ் ஜே சூர்யா. தற்போது தமிழ், தெலுங்கு என பிஸியாக நடித்து கொண்டிருப்பவர் எஸ் ஜே சூர்யா, அதன்படி தற்போது எஸ் ஜே சூர்யா உலகநாயகன் கமல் ஹாசன் நடித்து வரும் ‘இந்தியன் 2’ திரைப்படத்திலும் இயக்குனர் ஷங்கர் இயக்கி வரும் ‘கேம் சென்ஞர்’ படத்திலும் நடித்து வருகிறார். இதனிடையே எஸ் ஜே சூர்யா அவர்கள் அபியும் நானும், மொழி போன்ற பல வெற்றி படங்களை இயக்கிய ராதாமோகன் இயக்கத்தில் நடித்து வெளியாகவிருக்கும் திரைப்படம் பொம்மை. நீண்ட காலமாக ரசிகர்கள் ஆவலோடு காத்திருந்த பொம்மை திரைப்படம் நாளை ஜூன் 16ம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் முன்னோட்டம் முன்னதாக வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நமது கலாட்டா பிளஸ் சிறப்பு பேட்டியில் நடிகரும் இயக்குனருமான எஸ் ஜே சூர்யா கலந்து கொண்டு அவரது திரைப்பயணம் குறித்து பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார். அதில் எஸ் ஜே சூர்யா நடிப்பில் உருவாகி பல ஆண்டுகள் கடந்து வெளியாகாமல் இருக்கும் இறவாக்காலம்  திரைப்படம் ரிலீஸ்  குறித்து கேட்கையில் அவர்,

“அந்த படம் வெளிவரமால் இருப்பது வலியா தான் இருக்கு..  அந்த படம் ஒரு சரியான நேரத்திற்காக காத்திருக்கின்றது என்று நான் நினைக்கிறேன்.  சில படங்களுக்கு காரணத்தோடு தான் வெளியாகும்.  உதாரணமா எந்திரன் திரைப்படம்  முன்னதாகவே உருவாக வேண்டிய மிகப்பெரிய திரைப்படம் நிறைய காரணங்களால் தள்ளி போய் 2010 ல் வெளியாகிறது. அப்போ வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடிக்கின்றது.  அப்படி தள்ளி போக காரணம் அந்த திரைப்படம் சிறப்பாக வெளியாக தயார்படுத்தி கொண்டுள்ளது. இறவாக்காலம் திரைப்படம் ஒரு டைம் டிராவல் சம்மந்தப்பட்ட கதை. மாநாடு ரிலீஸ் ஆச்சு.. அடுத்து மார்க் ஆண்டனி டைம் டிராவல் சம்மந்தப்பட்ட கதை.. ரசிகர்கள் இந்த மாதிரி கதைகளுக்கு ரெடி ஆயிட்டாங்க..  உணர்வுபூர்வமான கதைகளை டைம் டிராவல் படத்தோடு இணைத்தால் ரசிகர்களுக்கு புரிந்து போகின்றது. பின் மக்கள் ரசனை மாறிவிட்டது. அதனால்தான் மாநாடு படம் புரிஞ்சிது. அதுபோல மக்களுக்கு புரிய படம் தயாராகின்றது.” என்றார் எஸ் ஜே சூர்யா.

தேனாண்டாள் ஸ்டுடியோ தயாரிப்பில் மாயா திரைப்படத்தின் இயக்குனர் அஷ்வின் சரவணன் இயக்கத்தில் உருவான இரவாக்காலம் திரைப்படத்தின் எஸ் ஜே சூர்யா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க இவருடன் இணைந்து சிவதா, வாமிகா உள்ளிட்டோர் நடிப்பில் காதல் கதை களத்தில் உருவான இப்படத்தின் முன்னோட்டம் 5 ஆண்டுகளுக்கு முன்னதாக வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. படகுழுவில் ஏற்பட்ட சிக்கல்களினால் திரையரங்கில் ரிலீஸ் ஆகாமல் இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இயக்குனரும் நடிகருமான எஸ் ஜே சூர்யா அவர்கள் பகிர்ந்து கொண்ட சுவாரஸ்யமான தகவல் கொண்ட முழு வீடியோவை காண..

 

தளபதி விஜயின் ‘வாரிசு’ வெற்றியையடுத்து முன்னணி நடிகருடன் கூட்டணி அமைக்கும் தயாரிப்பாளர் தில் ராஜு.. – வைரலாகும் அப்டேட் இதோ..
சினிமா

தளபதி விஜயின் ‘வாரிசு’ வெற்றியையடுத்து முன்னணி நடிகருடன் கூட்டணி அமைக்கும் தயாரிப்பாளர் தில் ராஜு.. – வைரலாகும் அப்டேட் இதோ..

புற்றுநோயால் உயிரிழந்த படிக்காதவன் பட நடிகர்.. இறுதி சடங்கு செய்த இசையமைப்பாளர் டி இமான்..– விவரம் உள்ளே..
சினிமா

புற்றுநோயால் உயிரிழந்த படிக்காதவன் பட நடிகர்.. இறுதி சடங்கு செய்த இசையமைப்பாளர் டி இமான்..– விவரம் உள்ளே..

“ஓடாதுனு சொன்னாலும் அந்த படத்தை எடுப்பேன்” ஜில் ஜங் ஜக் படம் குறித்து சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்த சித்தார்த்.. – Exclusive interview உள்ளே..
சினிமா

“ஓடாதுனு சொன்னாலும் அந்த படத்தை எடுப்பேன்” ஜில் ஜங் ஜக் படம் குறித்து சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்த சித்தார்த்.. – Exclusive interview உள்ளே..