கேஜிஎஃப் தயாரிப்பாளருடன் கைகோர்த்த ஃபகத் பாசிலின் தூமம்... கவனத்தை ஈர்க்கும் "தீயே தாகமோ" பாடல் இதோ!

ஃபகத் பாசிலின் தூமம் பட தீயே தாகமோ பாடல் வெளியீடு,Fahadh faasil in dhoomam movie theeye dhaagumo song out now | Galatta

கே ஜி எஃப் திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான HOMBALE FILMS நிறுவனத்தின் தயாரிப்பில் ஃபகத் பாசில் கதாநாயகனாக நடித்திருக்கும் தூமம் திரைப்படத்திலிருந்து தீயே தாகமோ எனும் பாடல் தற்போது வெளிவந்துள்ளது. மலையாள சினிமாவில் பல்வேறு விதமான கதாபாத்திரங்களில் நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களின் இதயங்களையும் கவர்ந்த நடிகர் ஃபகத் பாசில் சிவகார்த்திகேயனின் வேலைக்காரன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார். மலையாளத்தில் இவர் நடித்த மகேஷிண்டே பிரதிகாரம், டேக் ஆஃப், நியான் பிரகாசன், கும்பலங்கி நைட்ஸ், அதிரன், ட்ரான்ஸ், இருள், மாலிக் உள்ளிட்ட திரைப்படங்கள் மலையாள சினிமா ரசிகர்களை தாண்டி தமிழ் சினிமா ரசிகர்களாலும், ஏன் இந்திய அளவிலும் மிகப்பெரிய கவனத்தை ஈர்த்தன. முன்னதாக தமிழில் இயக்குனர் தியாகராஜன் குமாரராஜாவின் சூப்பர் டீலக்ஸ் படத்தில் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் ஃபகத் பாசில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடித்து வெளிவந்த விக்ரம் திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் மிரட்டி இருந்தார். அதேபோல் தெலுங்கிலும் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளிவந்த பிளாக்பஸ்டர் ஹிட்டான புஷ்பா - தி ரைஸ் படத்தில் வில்லனாக மாஸ் காட்டினார் ஃபகத் பாசில்.

கடைசியாக ஃபகத் பாசில் நடிப்பில் கடந்த ஏப்ரல் மாதத்தில் வெளிவந்த பாச்சுவும் அத்புத விளக்கும் படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. தொடர்ந்து இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் வைகைப்புயல் வடிவேலு கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடிப்பில் விரைவில் வெளிவர இருக்கும் மாமன்னன் திரைப்படத்தில் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள ஃபகத் பாசில், சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகும் ஹனுமான் கியர், பிரேமம் படத்தின் இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் பாட்டு, சமீபத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த ரோமஞ்சம் படத்தின் இயக்குனர் ஜிது மாதவன் இயக்கத்தில் புதிய படம் மற்றும் அல்லு அர்ஜுனின் புஷ்பா 2 - தி ரூல் என அடுத்தடுத்து வரிசையாக அட்டகாசமான படங்களில் நடிக்கிறார். இதனிடையே ஃபகத் பாசில் நடிப்பில் அடுத்த ரிலீஸ் க்கு தயாராக இருக்கும் திரைப்படம் தான் தூமம்.

லூசியா மற்றும் யூ-டர்ன் படங்களின் இயக்குனர் பவன் குமார் இயக்கத்தில் ஃபகத் பாசில் கதாநாயகனாக நடிக்கும் இந்த தூமம் திரைப்படத்தை HOMBALE FILMS நிறுவனம் தயாரித்துள்ளது. ஃபகத் பாசிலுடன் இணைந்து சூரரைப் போற்று படத்தின் நாயகி அபர்ணா பாலமுரளி கதாநாயகியாக நடித்திருக்கும் தூமம் திரைப்படத்தில் ரோஷன் மேத்யூ, அச்சுத் குமார், வினீத், ஜாய் மேத்யூ மற்றும் அனுமோகன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். பிரீத்தா ஜெயராமன் ஒளிப்பதிவில், சுரேஷ் ஆறுமுகம் படத்தொகுப்பு செய்யும் தூமம் படத்திற்கு பூர்ணசந்திர தேஜாஸ்வி இசையமைத்துள்ளார். வருகிற ஜூன் 23ஆம் தேதி மலையாளம் தமிழ் தெலுங்கு கன்னடம் உள்ளிட்ட நான்கு மொழிகளில் தூமம் திரைப்படம் உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. இந்நிலையில் தூமம் திரைப்படத்திலிருந்து தீயே தாகமோ எனும் புதிய பாடல் தற்போது வெளிவந்துள்ளது. அட்டகாசமான அந்த பாடலை கீழே உள்ள லிங்கில் காணலாம்.
 

சினிமா

"இது என்ன பண்ணக்கூடாத காரியமா?"- காதலை வெளிப்படையாக தெரிவித்தது பற்றி பிரியா பவானி சங்கரின் செம்ம பதில்! வீடியோ இதோ

பிச்சைக்காரன் 2க்கு பின், இறுதிக்கட்டத்தில் விஜய் ஆண்டனியின் அடுத்த முக்கிய படம்... தயாரிப்பாளரின் அசத்தலான அறிவிப்பு இதோ!
சினிமா

பிச்சைக்காரன் 2க்கு பின், இறுதிக்கட்டத்தில் விஜய் ஆண்டனியின் அடுத்த முக்கிய படம்... தயாரிப்பாளரின் அசத்தலான அறிவிப்பு இதோ!

'நமக்காக யாரும் முட்டு கொடுக்க மாட்டாங்க!'- கொச்சையான கமென்ட்களுக்கான பதிலடி பற்றி ப்ரியா பவானி சங்கரின் பளிச் பதில்! ட்ரெண்டிங் வீடியோ
சினிமா

'நமக்காக யாரும் முட்டு கொடுக்க மாட்டாங்க!'- கொச்சையான கமென்ட்களுக்கான பதிலடி பற்றி ப்ரியா பவானி சங்கரின் பளிச் பதில்! ட்ரெண்டிங் வீடியோ