பேஸ்புக் லைவில் விஷம் குடித்த பிரபல நடிகர்.. அதிர்ச்சியடைந்த ரசிகர்கள்.. பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம் – விவரம் உள்ளே..

பேசிக் கொண்டிருக்கும் போதே விஷம் குடித்த பிரபல நடிகர் விவரம் உள்ளே - Television celebrity consume poison at facebook like | Galatta

இந்தியில் பிரபல நிகழ்ச்சியான தி கபில் ஷர்மா ஷோ மற்றும் வாக்லே க் துனியா  போன்ற நிகழ்சிகள் மூலம் பிரபலமானவர் நடிகர் தீர்த்தானந்த் ராவ். ரசிகர்களை தன் நடிப்பினால் கவர்ந்து பல மேடைகளை அலங்கரித்துள்ளார் நடிகர் தீர்த்தானந்த். பிரபல நடிகர் காலா பட வில்லன் நானா படேகர் போல் கச்சிதமாக மிமிக்கிரி செய்வதால் இவரை ஜூனியர் நானா படேகர் என்று ரசிகர்கள் அழைப்பது குறிப்பிடத்தக்கது. பொதுவாகவே தீர்த்தானந்த் சமூக வலைதளங்களில் அதிகம் ஈடுபாட்டுடன் இருப்பவர்., அதன்படி சமீபத்தில் இவர் பேஸ்புக் லைவில் தனது ரசிகர்களுடன் பேசி கொண்டிருந்தார்.

சாதரணமாக பேசிக் கொண்டிருந்த தீர்த்தானந்த் திடீரென ஆவேசத்துடன் ஒரு பெண் பற்றி பேசி வந்தார். மேலும் தன் நிலைமைக்கு அந்த பெண் தான் காரணம் என்றும் பேசி வந்துள்ளார். தொடர்ந்து அவருக்கு எதவாது நேர்ந்தால் அந்த பெண் தான் பொறுப்பு என்றும் தன்னை ஏமாற்றி மிரட்டி ரூ 3 முதல் 4 லட்சம் வரை பணம் பரிதுள்ளதாகவும் கூறியுள்ளார். தற்போது மோசமான நிலையில் தன் வாழ்கை இருப்பதாகவும் அதற்கு அந்த பெண் தான் காரணம் என்றும் கூறியுள்ளார் நடிகர் தீர்த்தானந்த்.  

மேலும் அந்த பெண் அவரை பிளாக் மெயில் செய்வதாகவும் அவரை பற்றி மகளிர் காவல் நிலையத்தில் அந்த பெண் புகாரளித்துள்ளதாகவும் அதற்கு என்ன காரணம் என்பதே தெரியவில்லை என்றும் கூறியுள்ளார். ஆவேசமாக பேசிக் கொண்டிருந்த தீர்த்தானந்த் தனது அருகே இருந்த பாட்டிலில் உள்ள திரவத்தை கையில் வைத்திருந்த டம்பளரில் ஊற்றி குடித்துள்ளார்.

இதை பார்த்த ரசிகர்கள் அதிர்ந்து போக, பின் இந்த நிகழ்வு குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். பின் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து நினைவிழந்த நிலையில் தீர்த்தானந்தை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.  தற்போது தீர்த்தானந்த் உடல்நிலை முன்னேறி வருவதாகவும் அவர் நலமுடன் இருக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. மேலும் தீர்த்தானந்த் குறிப்பிட்ட பெண் குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. பேசிக் கொண்டிருக்கும் போதே ரசிகர்கள் முன்னிலையில் பொதுவெளியில் விஷம் அருந்திய சம்பவம் திரையுலக வட்டாரத்தில் பரபரப்பை எற்படுத்தியுள்ளது.

ஃபகத் பாசிலின் ‘தூமம்’ படப்பிடிப்பில் கார் கவிழ்ந்து விபத்து - படக்குழு வெளியிட்ட பரபரப்பான வீடியோ உள்ளே..
சினிமா

ஃபகத் பாசிலின் ‘தூமம்’ படப்பிடிப்பில் கார் கவிழ்ந்து விபத்து - படக்குழு வெளியிட்ட பரபரப்பான வீடியோ உள்ளே..

தளபதி விஜயின் ‘வாரிசு’ வெற்றியையடுத்து முன்னணி நடிகருடன் கூட்டணி அமைக்கும் தயாரிப்பாளர் தில் ராஜு.. – வைரலாகும் அப்டேட் இதோ..
சினிமா

தளபதி விஜயின் ‘வாரிசு’ வெற்றியையடுத்து முன்னணி நடிகருடன் கூட்டணி அமைக்கும் தயாரிப்பாளர் தில் ராஜு.. – வைரலாகும் அப்டேட் இதோ..

புற்றுநோயால் உயிரிழந்த படிக்காதவன் பட நடிகர்.. இறுதி சடங்கு செய்த இசையமைப்பாளர் டி இமான்..– விவரம் உள்ளே..
சினிமா

புற்றுநோயால் உயிரிழந்த படிக்காதவன் பட நடிகர்.. இறுதி சடங்கு செய்த இசையமைப்பாளர் டி இமான்..– விவரம் உள்ளே..