விக்ரம் பிரபு - வாணி போஜனின் பாயும் ஒளி நீ எனக்கு... ரொமான்டிக்கான "ஹே பாப்பா" பாடல் லிரிக் வீடியோ இதோ!

விக்ரம் பிரபு - வாணி போஜனின் பாயும் ஒளி நீ எனக்கு ஹே பாப்பா பாடல்,vikram prabhu in paayum oli nee yenakku movie hey papa song | Galatta

விக்ரம் பிரபு மற்றும் வாணி போஜன் இணைந்து நடித்திருக்கும் ஆக்சன் திரில்லர் படமான பாயும் ஒளி நீ எனக்கு படத்திலிருந்து ஹே பாப்பா எனும் பாடல் தற்போது வெளியானது. தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவரான நடிகர் விக்ரம் பிரபு கதாநாயகனாக நடிக்க, கடைசியாக வெளிவந்த திரைப்படம் டாணாக்காரன். இதுவரை பெரிதும் பேசப்படாத காவல்துறையின் மறுபக்கம் குறித்த அழுத்தமான படமாக இயக்குனர் தமிழ் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடித்து வெளிவந்த டாணாக்காரன் திரைப்படம் மிகப் பெரிய பாராட்டுகளை பெற்றது. தொடர்ந்து சமீபத்தில் இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்து பிளாக்பஸ்டர் ஹிட்டான பொன்னியின் செல்வன் 2 திரைப்படத்தில் பார்த்திபேந்திர பல்லவன் எனும் மிக முக்கிய வேடத்தில் விக்ரம் பிரபு மிகச் சிறப்பாக நடித்திருந்தார். 

முன்னதாக பக்கா அதிரடி ஆக்சன் திரைப்படமாக இயக்குனர் கார்த்தி இயக்கத்தில் ரெய்டு திரைப்படத்தில் விக்ரம் பிரபு கதாநாயகனாக நடித்திருக்கிறார். தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர்களில் ஒருவரான இயக்குனர் முத்தையா அவர்கள் வசனங்களை எழுதி இருக்கிறார். விக்ரம் பிரபுவின் ரெய்டு திரைப்படத்தை வருகிற அக்டோபர் மாதம் 31ம் தேதி வெளியிடப் படக் குழுவினர் திட்டமிட்டு இருக்கின்றனர். அடுத்ததாக தனது புதிய திரைப்படத்தை பூஜையுடன் நடிகர் விக்ரம் பிரபு சமீபத்தில் தொடங்கி இருக்கிறார். இயக்குனர் ரமேஷ் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விக்ரம் பிரபு கதாநாயகனாக நடிக்கும் இத்திரைப்படத்தில் பிரபல நடிகை ஈஷா ரெப்பா கதாநாயகியாக நடிக்கிறார். 

இதனிடையே விக்ரம் பிரபு நடிப்பில் அடுத்து வெளிவர இருக்கும் திரைப்படம் தான் பாயும் ஒளி நீ எனக்கு. இயக்குனர் கார்த்திக் அத்வைத் இயக்கத்தில் பாயும் ஒளி நீ எனக்கு படத்தில் விக்ரம் பிரபு கதாநாயகனாக நடிக்க, நடிகை வாணி போஜன் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் தனஞ்ஜெயா மற்றும் விவேக் பிரசன்னா உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் பாயும் ஒளி நீ எனக்கு படத்தில் நடித்துள்ளனர். இயக்குனர் கார்த்திக் அத்வைத் தயாரித்து இயக்கும் ஆக்சன் திரில்லர் படமாக தயாராகி இருக்கும் பாயும் ஒளி நீ எனக்கு திரைப்படத்திற்கு பரியேறும் பெருமாள் படத்தின் ஒளிப்பதிவாளர் ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்ய, C.S.பிரேம் குமார் படத்தொகுப்பு செய்துள்ளார்.

இசையமைப்பாளர் சாகர் பாடல்களுக்கு இசையமைக்க, இசையமைப்பாளர்கள் சன்னி மற்றும் சாகித் இணைந்து பின்னணி இசை சேர்த்துள்ளனர். SP சினிமாஸ் நிறுவனம் வெளியிடும் பாயும் ஒளி நீ எனக்கு திரைப்படத்தை வருகிற ஜூன் 23ஆம் தேதி வெளியிடப் படக் குழுவினர் திட்டமிட்டு இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பாயும் ஒளி நீ எனக்கு படத்தில் இருந்து ஹே பாப்பா எனும் பாடலின் லிரிக் வீடியோ தற்போது வெளிவந்துள்ளது. சாகர் இசையில் கு.கார்த்திக் அவர்களின் பாடல் வரிகளில், பாடகர் கபில் கபிலன் பாடி இருக்கும் இந்த ஹே பாப்பா பாடல் தற்போது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. பாயும் ஒளி நீ எனக்கு படத்தின் ரொமான்டிக்கான ஹே பாப்பா பாடலை கீழே உள்ள லிங்கில் காணலாம்.
 

பிச்சைக்காரன் 2க்கு பின், இறுதிக்கட்டத்தில் விஜய் ஆண்டனியின் அடுத்த முக்கிய படம்... தயாரிப்பாளரின் அசத்தலான அறிவிப்பு இதோ!
சினிமா

பிச்சைக்காரன் 2க்கு பின், இறுதிக்கட்டத்தில் விஜய் ஆண்டனியின் அடுத்த முக்கிய படம்... தயாரிப்பாளரின் அசத்தலான அறிவிப்பு இதோ!

'நமக்காக யாரும் முட்டு கொடுக்க மாட்டாங்க!'- கொச்சையான கமென்ட்களுக்கான பதிலடி பற்றி ப்ரியா பவானி சங்கரின் பளிச் பதில்! ட்ரெண்டிங் வீடியோ
சினிமா

'நமக்காக யாரும் முட்டு கொடுக்க மாட்டாங்க!'- கொச்சையான கமென்ட்களுக்கான பதிலடி பற்றி ப்ரியா பவானி சங்கரின் பளிச் பதில்! ட்ரெண்டிங் வீடியோ

வேகமெடுக்கும் ஜெயம் ரவியின் இறைவன் படம்... இயக்குனரின் லேட்டஸ்ட் அப்டேட்டால் உற்சாகத்தில் ரசிகர்கள்! வைரல் புகைப்படம் உள்ளே
சினிமா

வேகமெடுக்கும் ஜெயம் ரவியின் இறைவன் படம்... இயக்குனரின் லேட்டஸ்ட் அப்டேட்டால் உற்சாகத்தில் ரசிகர்கள்! வைரல் புகைப்படம் உள்ளே