"பொம்மை"க்கு நம்பிக்கை கொடுத்த தனுஷின் சூப்பர் ஹிட் படம்!- 'இருக்கு ஆனா வேற மாதிரி இருக்கு' என விவரித்த SJசூர்யா! வைரல் வீடியோ உள்ளே

SJசூர்யாவின் பொம்மை படத்திற்கு நம்பிக்கை கொடுத்த தனுஷ் படம்,sj suryah says dhanush in thiruchitrambalam gives confident for bommai | Galatta

நடிகர் தனுஷ் நடிப்பில் வெளிவந்த திருச்சிற்றம்பலம் திரைப்படம் தான், தன்னுடைய பொம்மை திரைப்படத்திற்கு நம்பிக்கையை கொடுத்ததாக எஸ்.ஜே.சூர்யா அவர்கள் தெரிவித்து இருக்கிறார். தமிழ் சினிமாவின் மிக முக்கிய இயக்குனராகவும் சிறந்த நடிகராகவும் திகழும் எஸ்.ஜே.சூர்யா தயாரித்து நடித்துள்ள பொம்மை திரைப்படத்தை மொழி மற்றும் அபியும் நானும் உட்பட பல தரமான படங்களை இயக்கிய இயக்குனர் ராதா மோகன் அவர்கள் எழுதி இயக்கியிருக்கிறார். ரிச்சர்ட்.M.நாதன் ஒளிப்பதிவில், அண்தோனி படத்தொகுப்பு செய்துள்ள பொம்மை திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருக்கிறார். மான்ஸ்டர் திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் எஸ்.ஜே.சூர்யா மற்றும் பிரியா பவானி சங்கர் இணைந்து நடித்திருக்கும் இந்த பொம்மை திரைப்படத்தின் ரிலீஸ் காக ரசிகர்கள் நீண்ட காலமாக காத்திருந்த நிலையில், நாளை ஜூன் 16ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் பொம்மை திரைப்படம் ரிலீஸ் ஆகிறது. இந்த நிலையில் நமது கலாட்டா பிளஸ் சேனலில் திரு. பரத்வாஜ் ரங்கன் அவர்களோடு சிறப்பு நேர்காணலில் பேசிய இயக்குனரும் நடிகருமான எஸ்.ஜே.சூர்யா அவர்கள் நம்மோடு பல சுவாரசியமான தகவல்களை பகிர்ந்து கொண்டார். அந்த வகையில்,

“நான் வந்து எப்போதுமே என்டர்டைனிங்கான கமர்ஷியல் படங்கள் மட்டும் தான் பண்ணுவேன், விரும்புவேன். ஆனால் இந்த பொம்மை படத்தில் அதே என்டர்டைன்ங்கான கமர்சியல் விஷயங்கள் வேறு விதமாக இருக்கிறது. "இருக்கு இருக்கிறதே வேற மாதிரி இருக்கு!" என தனக்கே உண்டான பாணியில் கூறினார். தொடர்ந்து பேசியபோது 96, திருச்சிற்றம்பலம், காந்தாரா இந்த படங்களில் எல்லாம் பார்த்தீர்கள் என்றால் ஐட்டம் பாடல்கள் இருக்காது. மிகவும் கவர்ச்சிகரமான விஷயங்கள் இருக்காது. மிகவும் கவனமாக அந்த கதைக்கு நேர்மையாக போகும். தனுஷ் சார் நினைத்திருந்தால் திருச்சிற்றம்பலம் படத்தில் ஒரு சண்டைக் காட்சி வைத்திருக்கலாம் ஒரு ஐட்டம் பாடல் வைத்திருக்கலாம். இது எதுவும் இருக்காது. ஒரு 96 இயக்குனர் நினைத்திருந்தால் இடையில் ஒரு உணவகத்தில் சாப்பிட்டார்கள் அங்கே ஒரு டான்ஸ் இருந்தது, அல்லது ஒரு பப்புக்கு சென்றார்கள் அங்கே ஒரு டான்ஸ் இருந்தது அல்லது அவர்கள் எங்கோ ஒரு கடற்கரைக்கு செல்கிறார்கள் அங்கே பக்கத்தில் நடந்தது என்பது போல ஒரு பாடலை வைத்திருக்கலாம். ஆனால் அவர்கள் அதை வைக்கவில்லை அவர்கள் கண்டன்ட்டில் மட்டுமே கவனமாக இருந்தார்கள். அப்படிப்பட்ட ஒரு கண்டன்ட்டை ஒரு பெரிய கமர்சியல் வெற்றியாக கொடுத்திருக்கிறார்கள். இந்த மூன்று படங்களும் நான் பார்த்த விதத்தில் ஒரு உதாரணம். அப்படி பொம்மை படத்தின் கதையை கேட்டு பணியாற்றிய சமயத்தில் வெளிவந்த திரைப்படம் தான் திருச்சிற்றம்பலம் படம், அப்போது இன்னும் நம்பிக்கை வந்தது. பரவாயில்லடா நமக்கு நல்லது நடந்துவிடும். ஏனென்றால் மக்கள் நல்ல கன்டென்ட் இருந்தால் அதைப் பிடித்து வருகிறார்கள் என ஒரு நம்பிக்கை வந்தது.”

என தெரிவித்திருக்கிறார். மேலும் பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்ட எஸ்.ஜே.சூர்யாவின் அந்த முழு பேட்டியை கீழே உள்ள லிங்கில் காணலாம்.
 

விக்ரம் பிரபு - வாணி போஜனின் பாயும் ஒளி நீ எனக்கு... ரொமான்டிக்கான
சினிமா

விக்ரம் பிரபு - வாணி போஜனின் பாயும் ஒளி நீ எனக்கு... ரொமான்டிக்கான "ஹே பாப்பா" பாடல் லிரிக் வீடியோ இதோ!

கதையே கேட்காமல் நடிப்பேன்!- பிரியா பவானி சங்கரின் ஃபேவரட் இயக்குனர்கள்... காரணம் என்ன? வைரல் வீடியோ இதோ
சினிமா

கதையே கேட்காமல் நடிப்பேன்!- பிரியா பவானி சங்கரின் ஃபேவரட் இயக்குனர்கள்... காரணம் என்ன? வைரல் வீடியோ இதோ

சினிமா

"இது என்ன பண்ணக்கூடாத காரியமா?"- காதலை வெளிப்படையாக தெரிவித்தது பற்றி பிரியா பவானி சங்கரின் செம்ம பதில்! வீடியோ இதோ