ஈடு இணையற்ற உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் அடுத்ததாக லைகா ப்ரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் தனது மகளும் இயக்குனருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகும் லால் சலாம் திரைப்படத்தில் முக்கியமான கௌரவ வேடத்தில் நடிக்கிறார். முன்னதாக தற்போது இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் தற்போது ரஜினிகாந்த் நடித்து வருகிறார்.

தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் அவர்கள் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் ஜெயிலர் திரைப்படத்தில் படையப்பா திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் சூப்பர் ஸ்டாருடன் இணைந்து நடிகை ரம்யா கிருஷ்ணன் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க, பிரபல கன்னட நடிகர் சிவராஜ்குமார் அதிரடியான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

மேலும் தரமணி ராக்கி படங்களின் நடிகர் வசந்த் ரவி, யோகி பாபு, மலையாள நடிகர் விநாயகன் உட்பட பலர் நடிக்கும் ஜெயிலர் திரைப்படத்திற்கு ராக் ஸ்டார் இசை அமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். முன்னதாக நேற்று நவம்பர் 18ஆம் தேதி ரசிகர்களுக்கு சர்ப்ரைசாக வெளிவந்த சூப்பர் ஸ்டாரின் மாஸான ஜெயிலர் பட மேக்கிங் வீடியோ அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

தற்போது ஜெயிலர் திரைப்படத்தின் படப்பிடிப்பு முழு பேச்சில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஜெயிலர் திரைப்படத்தின் படப்பிடிப்பிற்கு நடிகர் சிவகார்த்திகேயன் வருகை தந்துள்ளார். மாவீரன் படத்தின் லுக்கில் வந்த சிவகார்த்திகேயன் நடிகர் சிவ ராஜ்குமார் அவர்களை படப்பிடிப்பு தளத்தில் சந்தித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. அந்த புகைப்படங்கள் இதோ…
sivakarthikeyan visited jailer shooting spot rajinikanth shiva rajkumar sivakarthikeyan visited jailer shooting spot rajinikanth shiva rajkumar sivakarthikeyan visited jailer shooting spot rajinikanth shiva rajkumar