தமிழ் திரையுலகின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக தனக்கே உரித்தான ஸ்டைலில் அதிரடியான படங்களில் நடித்து வரும் நடிகர் அருண் விஜய் நடிப்பில் முன்னதாக இந்த ஆண்டு (2022) வெளிவந்த ஓ மை டாக் யானை மற்றும் சினம் ஆகிய திரைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றன. மேலும் முதல் முறை வெப் சீரிஸில் களமிறங்கிய அருண் விஜய் நடிப்பில் வெளிவந்த தமிழ் ராக்கர்ஸ் கவனத்தை ஈர்த்தது.

தொடர்ந்து அருண் விஜய் நடிப்பில் பார்டர் மற்றும் அக்னிச் சிறகுகள் ஆகிய திரைப்படங்கள் ரிறைவடைந்து விரைவில் ரிலீசாக காத்திருக்கின்றன. இதனிடையே அடுத்ததாக இயக்குனர் AL.விஜய் இயக்கத்தில் உருவாகும் அச்சம் என்பது இல்லையே படத்தில் அருண் விஜய் கதாநாயகனாக நடித்து வருகிறார். எமி ஜாக்சன் மற்றும் நிமிஷா சஜயன் கதாநாயகிகளாக அச்சம் என்பது இல்லையே திரைப்படத்தில் நடிக்கின்றனர்.

ஸ்ரீ சீரடி சாய் மூவிஸ் மற்றும் நியூ மார்ச் ஃபர்ஸ்ட் பிக்சர்ஸ் இணைந்து வழங்கும் அச்சம் என்பது இல்லையே படத்திற்கு ஜீவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.  அதிரடி ஆக்சன் பிளாக் திரைப்படமாக தயாராகும் அச்சம் என்பது இல்லையே திரைப்படத்திற்கு ஸ்டண்ட் சில்வா ஸ்டண்ட் இயக்குனராக பணியாற்றுகிறார். 

அச்சம் என்பது இல்லையே திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் லண்டனில் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், நடிகர் அருண் விஜயின் பிறந்த நாளான இன்று (நவம்பர் 19) அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கும் வகையில் அச்சம் என்பது இல்லையே படத்தின் அட்டகாசமான புதிய போஸ்டர்களை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அந்த போஸ்டர்கள் இதோ…
 

Thanks team #AchchamEnbadhuIllayae & Dir #Vijay Sir for surprising me on my b’day with this fantastic poster. More exciting updates soon!!@iamAmyJackson @NimishaSajayan@gvprakash

Prod by @SSSMOffl Rajashekar & Swathi @shiyamjack @DoneChannel1 pic.twitter.com/rSrmO5bJMZ

— ArunVijay (@arunvijayno1) November 19, 2022