தமிழ் சினிமா ரசிகர்களின் ஃபேவரிட் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வரும் நடிகை ஜோதிகா திருமணத்திற்கு பிறகு நடிப்பில் இருந்து சிறிய ப்ரேக் எடுத்துக் கொண்டார். பின்னர் கடந்த 2015 ஆம் ஆண்டு, மலையாளத்தில் நடிகை மஞ்சுவாரியர் நடித்து வெளிவந்து சூப்பர் ஹிட்டான ஹொவ் ஓல்ட் ஆர் யூ படத்தின் ரீமேக்காக 36 வயதினிலே படத்தில் நடித்தார் ஜோதிகா.

தொடர்ந்து கதாநாயகியை முன்னிறுத்தும் கதை களங்கள் கொண்ட திரைப்படங்களாக தேர்ந்தெடுத்து நடித்து வரும் நடிகை ஜோதிகா நடிப்பில் கடைசியாக வெளிவந்த காற்றின் மொழி, ராட்சசி, ஜாக்பாட், பொன்மகள் வந்தாள், உடன்பிறப்பே ஆகிய திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. இந்த வரிசையில் முதல் முறையாக மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டியுடன் இணைந்து தற்போது காதல் - தி கோர் படத்தில் ஜோதிகா நடித்து வருகிறார்.

முன்னதாக மலையாளத்தில் வெளிவந்து இந்திய அளவில் கவனத்தை ஈர்த்த தி கிரேட் இந்தியன் கிச்சன் திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் ஜோ பேபி இயக்கும் காதல் - தி கோர் திரைப்படத்தை Wayfarer Films மற்றும் Mammootty Kampany ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. ஆதர்ஷ் சுகுமாரன் மற்றும் பால்சன் சக்கரியா இருவரும் இணைந்து கதை திரைக்கதை மற்றும் வசனங்களை எழுதியுள்ளனர். 

காதல் - தி கோர் படத்திற்கு ஷாலு.K.தாமஸ் ஒளிப்பதிவில், பிரான்சிஸ் லூயிஸ் படத்தொகுப்பு செய்ய, மேத்யூஸ் புலிக்கண் இசையமைக்கிறார். காதல் - தி கோர் திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கப்பட்டு தற்போது முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நடிகர் மம்மூட்டி காதல் - தி கோர் திரைப்படத்தில் தன் பகுதி படப்பிடிப்பை நிறைவு செய்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
 

Completed my portions for @KaathalTheCore. Enjoyed working with a very vibrant team.#JeoBaby #Jyotika #KaathalTheCore @MKampanyOffl pic.twitter.com/UACUikhtii

— Mammootty (@mammukka) November 18, 2022