தொகுப்பாளராக இருந்து தமிழ் சினிமாவின் முன்னணி நாயகனாக வளர்ந்து நிற்பவர் சிவகார்த்திகேயன்.இவர் நடிப்பில் கடைசியாக ப்ரின்ஸ் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடமும் விமர்சகர்களிடமும் சுமாரான வரவேற்பை பெற்று வருகிறது.

இவரது அயலான் படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.அடுத்ததாக மாவீரன் படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன்.இதனை தவிர SK 21 படத்தில் நடிக்கவுள்ளார் சிவகார்த்திகேயன்.ப்ரின்ஸ் படத்தினை ஸ்ரீ  வெங்கடேஸ்வரா சினிமாஸ்,சுரேஷ் புரொடக்ஷன்ஸ் மற்றும் சாந்தி டாக்கீஸ் இணைந்து தயாரித்துள்ளனர்.

இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கில் bilingual ஆக வெளியாகியுள்ளது.இந்த படத்தினை தெலுங்கில் சூப்பர்ஹிட் அடித்த Jathi Rathnalu பட இயக்குனர் அனுதீப் இயக்கியுள்ளார்.தமன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.சத்யராஜ்,பிரேம்ஜி உள்ளிட்டோர் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

இந்த படத்தில் Maria Ryaboshapka என்ற உக்ரைன் நடிகை சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.இந்த படம் தீபாவளியை முன்னிட்டு வெளியாகி சுமாரான வரவேற்பை பெற்று வருகிறது.இந்த படத்தின் புது ப்ரோமோ ஒன்றை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர்.இந்த ப்ரோமோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்