தொலைக்காட்சி தொகுப்பாளராக இருந்து தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக உயர்ந்து நிற்பவர் சிவகார்த்திகேயன்.நடிப்பு மட்டுமின்றி தயாரிப்பு,பாடலாசிரியர்,பாடகர் என பன்முக திறமை கொண்டவராக அசத்தி வருகிறார் சிவகார்த்திகேயன்.

நடிப்பு,நடனம்,காமெடி,எமோஷன் என ஆல் இன் ஒன் Entertainer ஆக சிவகார்த்திகேயன் அவதரித்துள்ளார்.இவர் நடித்துள்ள ப்ரின்ஸ் படம் தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 21ஆம் தேதி வெளியாகவுள்ளது. சிவகார்த்திகேயன் நமது கலாட்டாவிற்கு பிரத்யேகமாக பேட்டி அளித்துள்ளார்.அந்த பேட்டியில் அவர் நடித்து வரும்,நடித்துள்ள, நடிக்க போகும் படங்கள் குறித்த சுவாரசிய தகவல்களை பகிர்ந்துள்ளார்,

அவர் நடித்துள்ள அயலான் படம் குறித்து சில சுவாரசிய தகவல்களை அவர் பகிர்ந்துள்ளார்.இன்று நேற்று நாளை இயக்குனர் ரவிக்குமார் இயக்கியுள்ள இந்த படம் ஏலியன் Sci-Fic படமாக உருவாகி வருகிறது.4 வருடங்களுக்கு மேலாக இந்த படத்தின் வேலைகள் நடைபெற்று வருகிறது.

இந்த படம் நிறைய கம்பியூட்டர் கிராபிக்ஸ் காட்சிகள் நிறைந்ததாக இருக்கும் , எந்த மொழியில் யார் பார்த்தாலும் ரசிக்கும்படியான படமாக இந்த படம் அமையும்.ஒரு புது முயற்சியாக இந்த படம் உருவாக்கபட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.இந்த வீடீயோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்