இன்றைய காலகட்டத்தில் OTT தளங்களின் மீது ரசிகர்களுக்கு ஆர்வம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் தற்போது ரசிகர்களின் தேவைக்கேற்ப அட்டகாசமான பல அம்சங்கள் நிறைந்த OTT தளமாக YOUR BACKERS நிறுவனர் கிருஷ்ண ராஜு வழங்கும் புதிய OTT தளம் “நம்ம OTT”.

வளர்ந்து வரும் இளம் தலைமுறையினரின் திறமைகளுக்கு மதிப்பளிக்கும் விதமாகவும், தமிழகமெங்கும் பரவியிருக்கும் திறமைசாலிகளின் படைப்புகளையும் வெளிக்கொண்டுவரும் வகையிலும் சிறந்த நோக்கத்தோடு வருகிறது நம்ம OTT. மேலும் இதில் வெளியாகும் ஒவ்வொரு திரைப்படத்தின் மொத்த லாபத்தில் படத்தின் முதலீடு போக அடுத்து உள்ள அனைத்து தொகையும் படத்தில் திரைக்குப்பின்னால் பணியாற்றிய அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் சரிசமமாக பகிர்ந்து அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

வழக்கமாக OTT தளத்தை பயன்படுத்தும் SUBSCRIBER-கள் மாதாந்திரமாகவோ, மூன்று மாதம் ஒரு முறையோ, அல்லது வருடத்திற்கு ஒரு முறையோ அந்தத் OTT தளத்திற்கான தொகையை செலுத்தி SUBSCRIBE செய்ய வேண்டும். ஆனால் நம்ம OTT-ல் நாம் காண விரும்பும் திரைப்படத்திற்கும் மட்டும் தனியாக பணம் செலுத்தினால் போதும். அந்தப் படத்தை வாழ்நாள் முழுக்க எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாம்.

மேலும் நம்ம OTT SUBSCRIBER-கள் மற்றவர்களுக்கும் பரிந்துரைக்கும் பட்சத்தில் அவர்களுக்கு 30% கமிஷனாக கிடைக்கும். அது மட்டுமல்லாமல் படத்தில் கிடைக்கும் லாபத்தில் நம்ம OTT-ன் 100 SUBSCRIBER-களை தேர்ந்தெடுத்து ஜாக்பாட் பரிசாகவும் வழங்கவுள்ளது. இவை அனைத்தும் வெளிப்படையாக நடைபெற உள்ளது. இத்தனை அம்சங்கள் கொண்ட இந்த புதிய “நம்ம OTT” விரைவில் நம் விரல் நுனியில் வர தயாராகி வருகிறது.
 

YourBakers @KrishYourbacker launched Namma OTT Galatta Digital Stars 2022 on 15th Oct 2022 #krishnaraju #galattaasks #GalattaDigitalstar2022 @galattadotcom #yourbackers #NammaOTT pic.twitter.com/bwKgw8eRIF

— Your Backers Foundation (@yourbackers) October 17, 2022