மாடல் ஆக தனது கலைப்பயணத்தை தொடங்கி தற்போது சின்னத்திரையில் நடிகையாக அசத்தி வருபவர் ஆஷா கௌடா.ராம்ப்வாக்,விளம்பர படங்கள் என அசத்திய இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர்ஹிட் தொடர்களில் ஒன்றான கோகுலத்தில் சீதை தொடரில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.

இதன் மூலம் சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்த இவர் முதல் தொடரிலேயே ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெற்றார்.கோகுலத்தில் சீதை தொடரில் வசுந்தரா எந்த கதாபாத்திரத்தில் இவர் நடித்து அசத்த இவருக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளமே உருவானது குறிப்பிடத்தக்கது.

இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருவார் ஆஷா கௌடா.நடனத்திலும் பெரிய ஆர்வம் கொண்ட இவர் தனது நடன வீடியோக்களையும் பகிர்ந்து வருவார்.தற்போது இவர் ஹீரோயினாக நடிக்கும் படம் குறித்த தகவல் கிடைத்துள்ளது

நந்திவர்மன் என்ற படத்தில் ஆஷா கௌடா ஹீரோயினாக நடிக்கிறார்.ஹீரோவாக சன் மியூசிக்கில் பிரபல VJவாக இருந்த சுரேஷ் ரவி நடிக்கிறார்.பெருமாள் வரதன் இந்த படத்தினை இயக்கியுள்ளார்.தற்போது இந்த படத்தின் விறுவிறுப்பான டீஸர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.