திரையரங்குகளில் பட்டையை கிளப்பும் ‘மாவீரன்’.. சர்ப்ரைஸாக வெளியான சிவகார்த்திகேயன் - யோகி பாபு வீடியோ..

சிவகார்த்திகேயனின் மாவீரன் படக்குழு வெளியிட்ட சிறப்பு வீடியோ.. விவரம் உள்ளே - Sivakarthikeyan blockbuster Maaveeran sneak peek out now | Galatta

தென்னிந்தியாவின் முன்னணி நடிகர்களின் ஒருவரான சிவகார்த்திகேயனின் மாறுபட்ட நடிப்பில் உருவாகி வெளியாகியிருக்கும் திரைப்படம் ‘மாவீரன்’. இயக்குனர் மடோன் அஷ்வின் இயக்கத்தில் பேண்டசி ஆக்ஷன் கதைகளத்தில் உருவான இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் நடிக்க மிரட்டலான வில்லன் கதாபாத்திரத்தில் இயக்குனர் மிஷ்கின் நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் , சரிதா, யோகி பாபு, தெலுங்கு நடிகர் சுனில், அருவி மதன், மோனிஷா உள்ளிட்டோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் படத்தில் கூடுதல் சிறப்பாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி சிறப்பு கதாபாத்திரத்திற்கு பின்னணி குரல் கொடுத்துள்ளார். ஷாந்தி டாக்கிஸ் சார்பில் அருண் விஷ்வா தயாரிப்பில் உருவான இப்படத்தில் ஒளிப்பதிவாளர் விது அய்யன்னா ஒளிப்பதிவு செய்ய பிலோமின் ராஜ் படத்தொகுப்பு செய்துள்ளார். மேலும் படத்திற்கு பரத் சங்கர் இசையமைத்துள்ளார். அழுத்தமான கதையுடன் பேண்டசி திரைப்படமான உருவான இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் தனி ஆவல் இருந்து வந்தது. எதிர்பார்ப்பின் மத்தியில் உலகளவில் கடந்த ஜூலை14 ம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் மாவீரன் திரைப்படம் வெளியானது. ரசிகர்களின் ஆரவார கொண்டாத்துடன் கடந்த ஒரு வாரமாக திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. மேலும் மாவீரன் வரவேற்பையடுத்து படக்குழுவினர் சமீபத்தில் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஏற்பாடு செய்து படக்குழுவினர்களுக்கும் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மாவீரன் திரைப்படம் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்து ரசிகர்களின் பேராதரவுடன் பாக்ஸ் ஆபிஸிலும் 50 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்து வெற்றி பெற்றுள்ளது. தற்போது மாவீரன் திரைப்படம் ரூ  100 கோடி வசூலை நோக்கி பயணித்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் படத்தில் இடம் பெற்றுள்ள முக்கிய காட்சியை படக்குழு வெளியிட்டுள்ளது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி குரலால் ஏற்படும் பிரச்சனைகளுக்கு இடையே யோகி பாபு சிவகார்த்திகேயன் காம்போவில் வரும் அதகள நகைசுவை காட்சி தற்போது ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.

மாவீரன் திரைப்படத்தையடுத்து சிவகார்த்திகேயன் ரங்கூன் பட இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் பக்காவான ஆக்ஷன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதற்கான படப்பிடிப்பு காஷ்மீர் பகுதிகளில் நடைபெற்று வருகிறது. அதை தொடர்ந்து இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் உடன் கூட்டணி அமைக்கவுள்ளார் சிவகார்த்திகேயன் என்பது குறிப்பிடதக்கது.

நோலன் படம் முதல் விஜய் ஆண்டனி படம் வரை..  இந்த வாரம் திரையரங்குகள், OTT- யில் வெளியாகும் திரைபடங்களின் பட்டியல் உள்ளே..
சினிமா ஸ்பெஷல்ஸ்

நோலன் படம் முதல் விஜய் ஆண்டனி படம் வரை.. இந்த வாரம் திரையரங்குகள், OTT- யில் வெளியாகும் திரைபடங்களின் பட்டியல் உள்ளே..

மீண்டும் களத்தில் இறங்கும் 'மின்னல் முரளி'.. ரசிகர்களுக்கு படக்குழு கொடுத்த சர்ப்ரைஸ்.. அட்டகாசமான அப்டேட் இதோ..
சினிமா

மீண்டும் களத்தில் இறங்கும் 'மின்னல் முரளி'.. ரசிகர்களுக்கு படக்குழு கொடுத்த சர்ப்ரைஸ்.. அட்டகாசமான அப்டேட் இதோ..

தளபதி விஜய் முதல் உதயநிதி ஸ்டாலின் வரை.. சந்தானத்தின் அலும்பல்களுடன் வெளியான ‘டிடி ரிட்டன்ஸ்’ பட பாடலின் வீடியோ..
சினிமா

தளபதி விஜய் முதல் உதயநிதி ஸ்டாலின் வரை.. சந்தானத்தின் அலும்பல்களுடன் வெளியான ‘டிடி ரிட்டன்ஸ்’ பட பாடலின் வீடியோ..