அதர்வா - கௌதம் மேனன் - 'குட் நைட்' மணிகண்டன் காம்போவின் அதிரடியான புது வெப் சீரிஸ்... விறுவிறுப்பான மத்தகம் டீசர் இதோ!

அதர்வா - கௌதம் மேனன் - மணிகண்டன் காம்போவின் மத்தகம் டீசர்,atharvaa gautham vasudev menon manikandan in mathagam web series teaser | Galatta

நடிகர் அதர்வா, இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன், “குட் நைட்” மணிகண்டன் மூவரும் இணைந்து நடித்திருக்கும் மத்தகம் எனும் புதிய வெப்சீரிஸின் டீசர் வெளியானது. தமிழ் சினிமாவின் பிரபல கதாநாயகர்களில் ஒருவரான நடிகர் அதர்வா நடிப்பில் கடைசியாக கடந்த 2022ம் ஆண்டு குருதி ஆட்டம், ட்ரிக்கர் மற்றும் பட்டத்து அரசன் ஆகிய படங்கள் வெளிவந்த நிலையில் தொடர்ந்து இந்த 2023 ஆம் ஆண்டில் அட்ரஸ், தனல் மற்றும் நிறங்கள் மூன்று ஆகிய திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளிவர தயாராகி வருகின்றன. இதனிடையே நவரசாவிற்கு பிறகு மத்தகம் எனும் புதிய வெப்சீரிஸில் அதர்வா நடித்திருக்கிறார்.

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராகவும் தற்போது குறிப்பிடப்படும் நடிகராகவும் வலம் வரும் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் சீயான் விக்ரம் நடித்த நீண்ட காலமாக ரிலீசுக்கு காத்திருக்கும் துருவ நட்சத்திரம் திரைப்படம் விரைவில் ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே நடிகராக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் தயாராகி வரும் லியோ திரைப்படத்தில் மிக முக்கிய வேடத்தில் கௌதம் வாசுதேவன் நடித்திருக்கிறார். அந்த வரிசையில் முன்னதாக பாவக்கதைகள் மற்றும் நவரசா ஆகிய ஆந்தாலஜி வெப் சீரிஸ்களை தொடர்ந்து, தற்போது இந்த புதிய மத்தகம் முன்னணி கதாபாத்திரத்தில் கௌதம் வாசுதேவ் மேனன் நடித்திருக்கிறார்.

காதலும் கடந்து போகும், விக்ரம் வேதா, காலா, சில்லு கருப்பட்டி, ஏலே, நெற்றிக்கண், ஜெய்பீம், சில நேரங்களில் சில மனிதர்கள் உள்ளிட்ட படங்களில்  வசனகர்த்தாவாகவும் மிக முக்கிய நடிகராகவும் தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த மணிகண்டன் நடிப்பில் கடைசியாக சமீபத்தில் வெளிவந்த குட் நைட் திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இதனை அடுத்து தற்போது டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் தளத்தில் விரைவில் வெளிவர இருக்கும் மத்தகம் வெப்சீரிஸில் முன்னணி கதாபாத்திரத்தில் மணிகண்டன் நடித்துள்ளார்.

சசிகுமாரின் கிடாரி மற்றும் மறைந்த முன்னாள் முதல்வர் செல்வி.J.ஜெயலலிதா அவர்களின் பயோபிக் வெப் சீரிஸான குயின் வெப் சீரிஸை இயக்கிய பிரசாத் முருகேசன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் மத்தகம் வெப் சீரிஸில் அதர்வா, கௌதம் வாசுதேவ் மேனன், மணிகண்டன் ஆகியோருடன் இணைந்து நிகிலா விமல், திவ்யதர்ஷினி, இளவரசு, வடிவுக்கரசி, மூணார் ரமேஷ் உள்ளிட்டோர் முக்கிய இடங்களில் நடித்துள்ளனர். AM.எட்வின் சாகே ஒளிப்பதிவில், பிரவீன் ஆண்டனி படத்தொகுப்பு செய்திருக்கும் மத்தகம் வெப்சீரிசுக்கு தர்பூக்கா சிவா இசையமைத்திருக்கிறார். வெகு விரைவில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் இந்த மொட்டகம் வெப் சீரிஸ் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மத்தகம் வெப் சீரிஸின் விறுவிறுப்பான டீசர் தற்போது வெளிவந்துள்ளது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த அந்த டீசர் இதோ…
 

சிவகார்த்திகேயனின் நடிப்பிற்கு மாவீரன் பெற்றுக் கொடுத்த தரமான பாராட்டு... வைரலாகும் புது வீடியோ இதோ!
சினிமா

சிவகார்த்திகேயனின் நடிப்பிற்கு மாவீரன் பெற்றுக் கொடுத்த தரமான பாராட்டு... வைரலாகும் புது வீடியோ இதோ!

ஜெயிலர் படத்துடன் மோதும் சிரஞ்சீவியின் வேதாளம் ரீமேக் போலா ஷங்கர்… 'காவாலா' பாணியில் தமன்னாவின் மில்கி பியூட்டி பாடல் இதோ!
சினிமா

ஜெயிலர் படத்துடன் மோதும் சிரஞ்சீவியின் வேதாளம் ரீமேக் போலா ஷங்கர்… 'காவாலா' பாணியில் தமன்னாவின் மில்கி பியூட்டி பாடல் இதோ!

'டெலிவிஷன்ல மிமிக்ரி பண்ணி ஆரம்பிச்ச ஒருத்தன்'- மாவீரன் வெற்றிக்கு நன்றி கூறும் விழாவில் எமோஷனலான சிவகார்த்திகேயன்! வீடியோ இதோ
சினிமா

'டெலிவிஷன்ல மிமிக்ரி பண்ணி ஆரம்பிச்ச ஒருத்தன்'- மாவீரன் வெற்றிக்கு நன்றி கூறும் விழாவில் எமோஷனலான சிவகார்த்திகேயன்! வீடியோ இதோ