'சூப்பர் ஸ்டார் ரசிகர்களே ரெடியா?'- ரஜினிகாந்தின் அண்ணாத்தக்கு விட்டதை ஜெயிலருக்கு நடத்தும் சன் பிக்சர்ஸ்! வேற லெவல் அப்டேட் இதோ

ரஜினிகாந்தின் ஜெயிலர் பட இசை வெளியீடு குறித்த அறிவிப்பு,super star rajinikanth in jailer movie audio launch update sun pictures | Galatta

இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ஜெயிலர் திரைப்படத்தின் அட்டகாசமான முக்கிய அறிவிப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்திய சினிமாவை கொண்டாடும் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் படங்கள் வெளியாகும் சமயங்களில் திரையரங்குகளில் திருவிழா தான். அப்படியாக தற்போது இந்திய சினிமாவின் மோஸ்ட் வான்டட் இயக்குனராக உயர்ந்திருக்கும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தற்போது பணியாற்றி வரும் தளபதி விஜயின் லியோ படத்தை தொடர்ந்து அடுத்ததாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கதாநாயகனாக நடிக்கும் புதிய தலைவர் 171 அதிரடி திரைப்படத்தை இயக்க இருப்பதாக தெரிகிறது. சமீபத்திய பத்திரிக்கையாளர் சந்திப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இடம் இது குறித்து கேட்டபோது தயாரிப்பு தரப்பிலிருந்து தான் அதிகாரப்பூர்வமாக சொல்ல வேண்டும் என அவர் தெரிவித்திருப்பதால் கிட்டத்தட்ட இந்த கூட்டணி இணைவது உறுதி என ரசிகர்கள் உற்சாகமடைந்து இருக்கின்றனர்.

முன்னதாக தனது மகளும் இயக்குனருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் லால் சலாம் திரைப்படத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ளார். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் லால் சலாம் திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ஒரு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கிரிக்கெட்டை மையப்படுத்திய திரைப்படமாக உருவாகும் இப்படத்தில் மொய்தின் பாய் எனும் மிக முக்கிய கௌரவ வேடத்தில் நடித்து வந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன் பகுதி படபிடிப்பை நிறைவு செய்து இருக்கிறார்.அடுத்ததாக மீண்டும் லைகா ப்ரோடக்ஷன் தயாரிப்பில் தலைவர் 170 படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கிறார். ஜெய் பீம் படத்தின் இயக்குனர் TJ.ஞானவேல் அவர்கள் தலைவர் 170 திரைப்படத்தை இயக்க இருக்கிறார். 

இதனிடையே முதல்முறையாக கோலமாவு கோகிலா, டாக்டர் மற்றும் பீஸ்ட் படங்களின் இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் தான் ஜெயிலர். சூப்பர் ஸ்டாருடன் இணைந்து ரம்யா கிருஷ்ணன் முன்னணி வேடத்தில் நடிக்கும்,ஜெயிலர் படத்தில் நடிகை தமன்னாவும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். மேலும் தரமணி & ராக்கி படங்களின் நடிகர் வசந்த் ரவி, யோகி பாபு, மலையாள விநாயகன் உட்பட பலர் நடிக்கின்றனர். இதுபோக மலையாள நடிகர் மோகன் லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார், தெலுங்கு நடிகர் சுனில், ஹிந்தி நடிகர் ஜாக்கி ஷெராஃப் ஆகியோரும் இணைந்து நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் ஜெயிலர் திரைப்படத்திற்கு விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவில், நிர்மல் படத்தொகுப்பு செய்ய, அனிருத் இசையமைக்கிறார். ஜெயிலர் திரைப்படத்தின் மொத்த படப்பிடிப்பும் கடந்த சில வாரங்களுக்கு முன்பு நிறைவடைந்ததது. வருகிற ஆகஸ்ட் 10ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ஜெயிலர் படம்  ரிலீஸாகவுள்ளது. 

இந்த நிலையில் ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்த ஜெயிலர் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்து சன் பிக்சர்ஸ் நிறுவனம் தற்போது புதிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. முன்னதாக கடைசியாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த அண்ணாத்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறாதது ரசிகர்களுக்கு கொஞ்சம் ஏமாற்றத்தை கொடுத்திருந்தது. இருப்பினும் அதே தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் தற்போது ஜெயிலர் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா விரைவில் நடக்க இருப்பதாக புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளனர். அட்டகாசமான அந்த வீடியோ இதோ…
 

Get ready…🔥💥🥳@rajinikanth @Nelsondilpkumar @anirudhofficial @Mohanlal @NimmaShivanna @bindasbhidu @tamannaahspeaks @meramyakrishnan @suneeltollywood @iYogiBabu @iamvasanthravi @kvijaykartik @Nirmalcuts @KiranDrk @AlwaysJani @StunShiva8 @RIAZtheboss #Jailer pic.twitter.com/uRkjbMsTSI

— Sun Pictures (@sunpictures) July 21, 2023

'டெலிவிஷன்ல மிமிக்ரி பண்ணி ஆரம்பிச்ச ஒருத்தன்'- மாவீரன் வெற்றிக்கு நன்றி கூறும் விழாவில் எமோஷனலான சிவகார்த்திகேயன்! வீடியோ இதோ
சினிமா

'டெலிவிஷன்ல மிமிக்ரி பண்ணி ஆரம்பிச்ச ஒருத்தன்'- மாவீரன் வெற்றிக்கு நன்றி கூறும் விழாவில் எமோஷனலான சிவகார்த்திகேயன்! வீடியோ இதோ

சினிமா

"நடிப்புக்கு வாழ்த்து வந்தது இதுதான் முதல் முறை!"- மாவீரன் பட விழாவில் மனம் திறந்த சிவகார்த்திகேயன்! முழு வீடியோ உள்ளே

சினிமா

"தளபதி விஜயின் லியோ படம் 1000 கோடியை தொடுமா?"- இயக்குனர் லோகேஷ் கனகராஜின் சரியான பதில்! ட்ரெண்டிங் வீடியோ