மடோன் அஸ்வினுடன் மீண்டும் இணைய விரும்பும் சிவகார்த்திகேயன்... மாவீரன் பட நன்றி கூறும் விழாவின் ட்ரெண்டிங் வீடியோ!

மடோன் அஸ்வினுடன் மீண்டும் இணைய விரும்பும் சிவகார்த்திகேயன்,sivakarthikeyan ready to work with maaveeran director madonne ashwin again | Galatta

மாவீரன் திரைப்படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின் உடன் மீண்டும் இணைய விரும்புவதாக நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்திருக்கிறார். தனது கடின உழைப்பால் உயர்ந்து தற்போது தமிழ் சினிமாவின் மிக முக்கிய கதாநாயகர்களில் ஒருவராக ரசிகர்களின் இதயங்களில் இடம் பிடித்திருக்கும் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் தொடர்ச்சியாக அசத்தலான படங்கள் தயாராகி வருகின்றன. அந்த வகையில் அடுத்ததாக இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் புதிய படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து இருப்பதாக தெரிகிறது. முன்னதாக இன்று நேற்று நாளை படத்தின் இயக்குனர் R.ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் ஏலியன் சயின்ஸ் பிக்சன் படமான அயலான் திரைப்படம் இந்த 2023 ஆம் ஆண்டில் தீபாவளி வெளியீடாக ரிலீஸாகிறது. அடுத்ததாக இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் அவர்களின் ராஜ்கமல்சரின் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் தற்சமயம் உருவாகி வரும் SK21 படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார்.

இதனிடையே சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ரிலீசான படம் தான் மாவீரன். மண்டேலா படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்திருக்கும் மாவீரன் திரைப்படத்தில் அதிதி ஷங்கர் கதாநாயகியாக நடித்திருக்கிறார். முதல் முறையாக முழு நீள வில்லனாக இயக்குனர் மிஷ்கின் நடித்திருக்கும் மாவீரன் திரைப்படத்தில் சரிதா, பிரபல தெலுங்கு நடிகர் சுனில், யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்க தமிழில் மாவீரன் , தெலுங்கில் மஹாவீருடு என தயாராகும் மாவீரன் திரைப்படத்திற்கு விது அய்யனா ஒளிப்பதிவில், ஃபிலோமின் ராஜ் படத்தொகுப்பு செய்ய, பரத் ஷங்கர் இசையமைத்துள்ளார். 

ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியிட கடந்த ஜூலை 14ம் தேதி மாவீரன் படம் உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸானது. சிவகார்த்திகேயனின் திரை பயணத்திலேயே இதுவரை இல்லாத வித்தியாசமான படமாக வெளிவந்திருக்கும் இந்த மாவீரன் திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. குறிப்பாக சிவகார்த்திகேயன் அவர்களின் நடிப்பு குறித்து பல தரப்பில் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன அதேபோல் வசூல் ரீதியிலும் பாக்ஸ் ஆபிஸில் 50 கோடிக்கு மேல் மாவீரன் திரைப்படம் வசூலித்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மாவீரன் படத்தின் படக்குழுவினர் ஒன்றிணைந்து மாவீரன் படத்தின் வெற்றிக்காக ரசிகர்கள் மற்றும் ஊடகத்தினர் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் விழா ஒன்றை நடத்தினர். இந்த விழாவில் பேசிய நடிகர் சிவகார்த்திகேயன் பல முக்கியமான விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அந்த வகையில்,

"ஒரு நல்ல நடிக்கும் என்டர்டெய்னராக இருக்க வேண்டும் என நினைக்கிறேன் நான். அது முடியும் என்பதை இந்த மாவீரன் படம் உணர்த்தி இருக்கிறது. இது மாதிரி இயக்குனர்களோடு இன்னும் நிறைய பணியாற்ற வேண்டும். மடோன் அஸ்வின் விருப்பப்பட்டார் என்றால் அவருடன் இணைந்து மீண்டும் படம் பண்ணுவதற்கு நான் எப்போதும் தயாராக இருக்கிறேன்." என தெரிவித்து இருக்கிறார். இன்னும் பல விஷயங்களை பகிர்ந்து கொண்ட சிவகார்த்திகேயன் பேசிய அந்த முழு வீடியோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்.
 

ஜெயிலர் படத்துடன் மோதும் சிரஞ்சீவியின் வேதாளம் ரீமேக் போலா ஷங்கர்… 'காவாலா' பாணியில் தமன்னாவின் மில்கி பியூட்டி பாடல் இதோ!
சினிமா

ஜெயிலர் படத்துடன் மோதும் சிரஞ்சீவியின் வேதாளம் ரீமேக் போலா ஷங்கர்… 'காவாலா' பாணியில் தமன்னாவின் மில்கி பியூட்டி பாடல் இதோ!

'டெலிவிஷன்ல மிமிக்ரி பண்ணி ஆரம்பிச்ச ஒருத்தன்'- மாவீரன் வெற்றிக்கு நன்றி கூறும் விழாவில் எமோஷனலான சிவகார்த்திகேயன்! வீடியோ இதோ
சினிமா

'டெலிவிஷன்ல மிமிக்ரி பண்ணி ஆரம்பிச்ச ஒருத்தன்'- மாவீரன் வெற்றிக்கு நன்றி கூறும் விழாவில் எமோஷனலான சிவகார்த்திகேயன்! வீடியோ இதோ

சினிமா

"நடிப்புக்கு வாழ்த்து வந்தது இதுதான் முதல் முறை!"- மாவீரன் பட விழாவில் மனம் திறந்த சிவகார்த்திகேயன்! முழு வீடியோ உள்ளே