தளபதி விஜய் முதல் உதயநிதி ஸ்டாலின் வரை.. சந்தானத்தின் அலும்பல்களுடன் வெளியான ‘டிடி ரிட்டன்ஸ்’ பட பாடலின் வீடியோ..

சந்தானத்தின் டிடி ரிட்டன்ஸ் பட பாடலின் வீடியோ வெளியானது - Thalapathy Vijay refrence in Santhanam DD returns Video here | Galatta

நகைச்சுவை திறமையினால் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்து தமிழ் திரையிலகில் முன்னணி நகைசுவை நடிகராக வலம் வந்தவர் சந்தானம். விஜய், அஜீத். சூர்யா, கார்த்தி, சிம்பு உள்ளிட்ட முக்கிய நடிகர்களின் படங்களில் தன் நகைசுவையினால் கூடுதல் சிறப்பாக மாற்றி திரையுலகில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர் நடிகர் சந்தானம். பின்னர் ஹீரோவாகவும் தமிழ் சினிமாவில் களமிறங்கி பல ஹிட் படங்களை கொடுத்து வந்தார். அதன்படி கண்ணா லட்டு தின்ன ஆசையா,  வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், இனிமே இப்படித்தான், தில்லுக்கு துட்டு, A1, டக்கால்டி, பாரிஸ் ஜெயராஜ், டிக்கிலோனா, சபாபதி போன்ற திரைப்படங்கள் சந்தானத்தின் நடிப்பில் வெளியாகி ரசிகர்களை மகிழ்வித்தது. கடந்த ஆண்டு இவரது நடிப்பில் வெளியான குளுகுளு, எஜன்ட் கண்ணாயிரம் ஆகிய திரைப்படங்கள் பெரிதளவு வெற்றியை இவருக்கு கொடுக்கவில்லை என்றாலும் தொடர்ந்து தனித்துவமான நகைச்சுவை கதைகளை தேர்ந்தெடுத்து நடிகர் சந்தனம் நடித்து வருகிறார். அதன்படி தற்போது சந்தானம் நடிப்பில் ‘கிக்’ என்ற திரைப்படம் ரிலீஸுக்கு தயாராகவுள்ளது.

இதனிடையே சந்தானம் நடிப்பில் வெளியாகவிருக்கும் திரைப்படம் ‘DD ரிட்டர்ன்ஸ்’. அறிமுக இயக்குனர் பிரேம் ஆனந்த் இயக்கத்தில் ஹாரர் கதைகளத்தில் சந்தானத்திற்கு உரித்தான நகைச்சுவை பாணியில் உருவாகியுள்ள இப்படத்தில் சந்தானதிற்கு ஜோடியாக சுரபி நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் ரெட்டின் கிங்ஸ்லி, மாறன், பிரதீப் ராவட், மசூம் ஷங்கர், பெப்சி விஜயன், மொட்டை ராஜேந்திரன், முனீஸ் காந்த், தீனா, விபின், தங்கதுரை, தீபா, சைதை சேது மற்றும் மானசி உள்ளிட்ட பல முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஆர்கே என்டர்டைன்மென்ட் சார்பில் தயாரிப்பாளர் C.ரமேஷ் குமார் தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் தீபக் குமார் பதி ஒளிப்பதிவு செய்ய, ஸ்ரீகாந்த் படத்தொகுப்பு செய்கிறார். மேலும் பிரபல சுயாதீன ஆல்பம் இசையமைப்பாளர்  OFRO இசை அமைத்திருக்கிறார்.

முன்னதாக  DD ரிட்டன்ஸ் படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே  பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி நல்ல வரவேற்பை பெற்றது. வழக்கமான சந்தனாத்தின் கலாய் வசனங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. அதகள காமெடி  திரைப்படமாக உருவாகியுள்ள DD ரிட்டர்ன்ஸ் திரைப்படம் வரும் ஜூலை 28ம் தேதி வெளியாகவுள்ளது.

இந்நிலையில் படத்தில் இடம் பெற்றுள்ள ‘ஐம் சோ பிரபலம்’ என்ற பாடலின் வீடியோ வெளியாகியுள்ளது. இசையமைப்பாளர் ஆப்ரோ இசையில் துரை இப்பாடலுக்கு வரிகள் எழுதி உருவாகியுள்ள இப்பாடலுக்கு ஆப்ரோ, டிஎம்எஸ் செல்வகுமார், சுஷா, கானா முத்து ஆகியோர் பாடியுள்ளனர்.

பணக்காரனாய் சந்தானம் செய்யும் அலும்பல்களை பேசும் இப்பாடலின் வீடியோவில் வாரிசு பட இசை வெளியீட்டு விழாவில் தளபதி விஜய் சந்தானம் குறித்து பேசிய வீடியோவும் மற்றும் ‘என் பிரன்ட் ஓட டேட் இந்த ஸ்டேட் ஓட சிஎம்’ என்று வரிகள் வரும் இடத்தில் ஒரு கல் ஒரு கண்ணாடி உதயநிதி ஸ்டாலின் வீடியோவும் இடம் பெற்றுள்ளது. நய்யாண்டிதனத்துடன் வெளியாகியுள்ள இப்பாடலின் வீடியோ தற்போது ரசிகர்களால் அதிகளவு பகிரப்பட்டு வருகிறது.

“தயாரிப்பாளர்களுக்கு மிகப்பெரிய லாபத்தை தந்த படம் அது..” சிவகார்த்திகேயனின் ‘பிரின்ஸ்’ படம் குறித்து ‘மாவீரன்’ தயாரிப்பாளர் பகிர்ந்த தகவல்..
சினிமா

“தயாரிப்பாளர்களுக்கு மிகப்பெரிய லாபத்தை தந்த படம் அது..” சிவகார்த்திகேயனின் ‘பிரின்ஸ்’ படம் குறித்து ‘மாவீரன்’ தயாரிப்பாளர் பகிர்ந்த தகவல்..

“இது ஒட்டுமொத்த ஏழை, எளிய மக்களின் குரலாக இருந்தது..” சிவகார்த்திகேயனின் 'மாவீரன்' படக்குழுவினரை பாராட்டிய திருமாவளவன்..
சினிமா

“இது ஒட்டுமொத்த ஏழை, எளிய மக்களின் குரலாக இருந்தது..” சிவகார்த்திகேயனின் 'மாவீரன்' படக்குழுவினரை பாராட்டிய திருமாவளவன்..

'கடல் ராசா முதல் நெஞ்சே எழு வரை..'  மரியான் 10 ஆண்டு நிறைவை படக்குழுவினருடன் கொண்டாடிய தனுஷ், ஏ ஆர் ரஹ்மான்..!
சினிமா

'கடல் ராசா முதல் நெஞ்சே எழு வரை..' மரியான் 10 ஆண்டு நிறைவை படக்குழுவினருடன் கொண்டாடிய தனுஷ், ஏ ஆர் ரஹ்மான்..!