நோலன் படம் முதல் விஜய் ஆண்டனி படம் வரை.. இந்த வாரம் திரையரங்குகள், OTT- யில் வெளியாகும் திரைபடங்களின் பட்டியல் உள்ளே..

திரையரங்குகள், OTT- யில் வெளியாகும் திரைபடங்கள் பட்டியல் உள்ளே  -	Here is the complete list of This week ott and theatre releases | Galatta

கடந்த வாரம் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான மாவீரன் திரைப்படம் மற்றும் பிளாக் ஷீப் குழுவினரின் பாபா பிளாக் ஷீப் மற்றும் சில திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களை மகிழ்வித்தது. இதில் சிவகார்த்திகேயனின் மாவீரன் திரைப்படம் உலகளவில் நல்ல வரவேற்பை பெற்று பாக்ஸ் ஆபிஸ் திரைப்படமாக மாறியது. இந்நிலையில் இந்த வாரம் ரசிகர்களின் எதிர்பார்ப்பில் வெளியாகவிருக்கும் திரைப்படங்கள் குறித்த சிறப்பு கட்டுரை பின்வருமாறு..

கொலை

பிச்சைக்காரன்  2 பாடத்தின் பாக்ஸ் ஆபிஸ் ஹிட்டிற்கு பிறகு விஜய் ஆண்டனி நடிப்பில் உலகத்தரத்தில் கிரைம் திரில்லர் திரைப்படமாக உருவான படம் ‘கொலை’. இயக்குனர் பாலாஜி குமார் இயக்கத்தில் உருவான இப்படத்தில் விஜய் ஆண்டனி உடன் ரித்திகா சிங், ராதிகா சரத் குமார், மீனாட்சி சுந்தர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.  

tovino thomas minnal murali movie to appear in the comics book update here

அநீதி

தமிழ் சினிமாவின் முக்கிய திரைப்படங்களான வெயில், அங்காடித் தெரு, காவியத் தலைவன் ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் வசந்த பாலன் இயக்கத்தில் வித்யாசமான திரில்லர் திரைப்படமாக உருவான படம் ‘அநீதி’. கைதி பட புகழ் அர்ஜுன் தாஸ் நாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக துஷாரா விஜயன் நடித்துள்ளார். ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் தனி எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. =

tovino thomas minnal murali movie to appear in the comics book update here

சத்திய சோதனை

விமர்சனங்களால் கொண்டாடப்பட்ட ஒரு கிடாயின் கருணை மனு பட இயக்குனர் சுரேஷ் சங்கையா இயக்கத்தில் வெளியான ‘சத்திய சோதனை’ படத்தில் நாயகனாக பிரேம்ஜி நடிக்க காமெடி கதையம்சத்துடன் கூடிய கிராமத்து உருவாகியுள்ளது.

tovino thomas minnal murali movie to appear in the comics book update here

இராக்கதன்

மாடலிங் துறையை கதைக்களமாக உருவாகியுள்ள இப்படத்தினை தினேஷ் கலைச்செல்வன் இயக்கியுள்ளார். ரியாஸ் கான், வம்சி கிருஷ்ணா, நிழல்கள் ரவி, விக்னேஷ் ஆகியோர் நடித்துள்ள இப்படத்தின் முன்னோட்டம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பெற்றது குரிப்பிடதக்கது.

tovino thomas minnal murali movie to appear in the comics book update here

ஒப்பன்ஹெய்மர்

உலகளவில் ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் உருவான திரைப்படம் ஒப்பன்ஹெய்மர். இரண்டாம் உலகப்போர் அணுகுண்டு தயாரிக்க உதவிய ஜேராபர்ட் ஒப்பன்ஹெய்மர் என்ற இயற்பியலாலரின் வாழ்கையை தழுவி உருவான இப்படத்திற்கு உலகளவில் தனி எதிர்பார்ப்பும் ஆவலும் இருந்து வருகிறது. இந்நிலையில் உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

tovino thomas minnal murali movie to appear in the comics book update here

பார்பி

உலகளவில் ரசிகர்களை கொண்டு வெவ்வேறு அனிமேஷன் படங்களாக  வரவேற்பை பெற்று கொண்டாடப் பட்ட பார்பி தற்போது நடிகர்களின் நடிப்பில் உருவாகி பார்பியின் உலகிற்கு கொண்டு போகும் படமாக வெளியாகியுள்ளது. ‘பார்பி’. மார்கெட் ராபி, ரியான் கொஸ்லிங் நடிப்பில் உருவாகியுள்ள இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் தனி எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

tovino thomas minnal murali movie to appear in the comics book update here

ஒடிடியில் வெளியான திரைப்படங்கள் :

அஸ்வின்ஸ்

கடந்த ஜூன் மாதம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் அஸ்வின்ஸ். வசந்த் ரவி நடிப்பில் வித்யாசமான ஹாரர் திரில்லர் திரைப்படமாக உருவான இப்படம் நெட்பிளிக்ஸ் தளத்தில் நேற்று வெளியாகியுள்ளது.   

tovino thomas minnal murali movie to appear in the comics book update here

சிங்க்

இயக்குனர் விகாஸ் ஆனந்த் இயக்கத்தில் ஹாரர் திரில்லர் திரைப்படமாக உருவான திரைப்படம் ‘சிங்க்’. கிஷன் தாஸ் நாயகனாக நடித்து உருவாகியிருக்கும் இப்படம் நேரடியாக இன்று ஜூலை 21 ஆஹா ஒடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

tovino thomas minnal murali movie to appear in the comics book update here

பாயும் ஒளி நீ எனக்கு

விக்ரம் பிரபு, வாணி போஜன் ஆகியோர் நடிப்பில் அட்டகாசமான ஆக்ஷன் திரைப்படமாக திரையரங்குகளில் வெளியான திரைப்படம் ‘பாயும் ஒளி நீ எனக்கு’ தற்போது இப்படம் சிம்பிளி சவுத் ஒடிடியில் ஒளிப்பரப்பாகி வருகிறது.

  tovino thomas minnal murali movie to appear in the comics book update here

பிரபாஸ், கமல் ஹாசன் நடிப்பில் உருவாகும் பிரம்மாண்ட ‘புரோஜெக்ட் கே’ டைட்டிலை வெளியிட்ட படக்குழு.. – வியப்பில் ஆழ்த்தும் அட்டகாசமான Glimpse இதோ..
சினிமா

பிரபாஸ், கமல் ஹாசன் நடிப்பில் உருவாகும் பிரம்மாண்ட ‘புரோஜெக்ட் கே’ டைட்டிலை வெளியிட்ட படக்குழு.. – வியப்பில் ஆழ்த்தும் அட்டகாசமான Glimpse இதோ..

விஜய் ஆண்டனியின் மாறுபட்ட நடிப்பில் கவனத்தை ஈர்க்கும் ‘கொலை’ திரைப்படம் –  சுவாரஸ்யத்தை தூண்டும் Sneak peek  இதோ..
சினிமா

விஜய் ஆண்டனியின் மாறுபட்ட நடிப்பில் கவனத்தை ஈர்க்கும் ‘கொலை’ திரைப்படம் – சுவாரஸ்யத்தை தூண்டும் Sneak peek இதோ..

“தயாரிப்பாளர்களுக்கு மிகப்பெரிய லாபத்தை தந்த படம் அது..” சிவகார்த்திகேயனின் ‘பிரின்ஸ்’ படம் குறித்து ‘மாவீரன்’ தயாரிப்பாளர் பகிர்ந்த தகவல்..
சினிமா

“தயாரிப்பாளர்களுக்கு மிகப்பெரிய லாபத்தை தந்த படம் அது..” சிவகார்த்திகேயனின் ‘பிரின்ஸ்’ படம் குறித்து ‘மாவீரன்’ தயாரிப்பாளர் பகிர்ந்த தகவல்..