"மாவீரன் பட இயக்குனர் மடோன் அஸ்வினுடன் கைகோர்த்த காரணம் இது தான்... உண்மையை உடைத்த சிவகார்த்திகேயன்! வைரல் வீடியோ

மாவீரன் மடோன் அஸ்வினுடன் கைகோர்த்தது பற்றி பேசிய சிவகார்த்திகேயன்,sivakarthikeyan reveals reason about working with maaveeran madonne ashwin | Galatta

மக்களின் மனம் கவர்ந்த நாயகனான சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளிவந்த மாவீரன் திரைப்படம் தற்போது மிகப்பெரிய வெற்றி பெற்றிருக்கிறது. மண்டேலா படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்திருக்கும் இந்த மாவீரன் திரைப்படம் 50 கோடி ரூபாய்க்கும் மேல் இதுவரை வசூலித்திருக்கிறது. இந்த நிலையில் இந்த வெற்றிக்காக ரசிகர்கள் மற்றும் ஊடகத்துறையினருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் மாவீரன் பட குழுவினர் ஒரு விழா ஒன்றை ஏற்பாடு செய்தனர். இந்த விழாவில் பேசிய சிவகார்த்திகேயன் அவர்கள் மடோன் அஸ்வின் அவர்களுடன் இணைந்து பணியாற்ற என்ன காரணம் என்பதை விளக்கி இருக்கிறார். அப்படி பேசும்போது,

“மண்டேலாவில் சொன்னது தான் இது. படம் பார்த்தவுடன் படம் பண்ண வேண்டும் என்பதுதான் இந்த படம் ஆரம்பிக்கும் போது அவருக்கு தேசிய விருது வரவில்லை. தேசிய விருது வருவதற்கு முன்பே நாங்கள் அவரை கட்டி அணைத்துக் கொண்டோம் என்பது தான் எங்களுக்கு பெருமை. எனக்கு இருக்கிற பெருமை சந்தோஷம் அதுதான். அவருடைய பாக்ஸ் ஆபீஸ் பார்த்தோ அல்லது அவருடைய தேசிய விருதை பார்த்தோ அவருடன் படம் பண்ண வேண்டும் என நினைக்கவில்லை. அவருடைய திறமை அவருடைய கிரியேட்டிவிட்டியை மட்டுமே பார்த்து அந்தக் குழுவை மட்டுமே வைத்து பெரிய படம் பண்ண வேண்டும் என்பதை யோசித்தோம். இது மிகவும் தைரியமான ஒரு நகர்வு தான். இப்போது யோசித்துப் பார்க்கும்போது எந்த நம்பிக்கையில் ஒரு இளம் அணியை வைத்துக் கொண்டு இவ்வளவு பெரிய படம்... இந்த படம் இன்று இவ்வளவு பெரிய வெற்றி… இதை நடுவில் யோசித்து இருக்கிறோம், இது சரியாக இல்லையென்றால் என்ன செய்வது... ஒன்றும் ஆகி இருக்காது. எனக்கு அதிகபட்சம் இந்த படத்தில் சம்பளம் இருந்திருக்காது அவ்வளவுதான். ஆனால் இந்த முயற்சி தொடர்ந்து கொண்டே தான் இருக்கும். இந்த நம்பிக்கை வேறு எங்கிருந்தோ எல்லாம் வரவில்லை. நீங்கள் டிவியில் இருந்த ஒருவனை கூட்டி வந்து இவ்வளவு பெரிய ஹீரோவாக மாற்றி வைத்திருக்கிறீர்கள். எல்லோரும் கைதட்டி கைத்தட்டி, அங்கிருந்து வந்த நம்பிக்கைதான் இது வேறு ஒன்றுமே கிடையாது. இது மாதிரியான முயற்சிகள் இன்னுமும் தொடரும் அடுத்தடுத்தும் அப்படியான இயக்குநர்கள் உடன் தான் இப்போது பணியாற்றிக் கொண்டிருக்கிறேன். இந்த படம் ஒரு நடிகராக என்னை பாராட்டும் பொழுது எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. நிறைய நாள் எதற்காக ஆசைப்பட்டு இருக்கிறேன். அது இன்று நடந்து விட்டது என்று சந்தோஷம்... ஒரு பாதி நன்கு சிரிக்க வைத்து ரசிக்க வைத்து அடுத்த பாதி எமோஷனலாக ஆக்ஷன் சேர்த்துக் கொடுப்பது என்பது எல்லோருக்குமான ஒரு கம்ப்ளீட் பேக்கேஜாக இருந்ததாக எல்லோரும் சொல்கிறார்கள். இதற்காக உழைத்த மொத்த அணி தனித்தனியாக இப்போது சொல்ல முடியாது இன்னொரு தருணத்தில் எல்லாரையும் ஏன் என்ன ஸ்பெஷல் என்பதை சொல்லி விடுகிறேன். கடைசி வரை மடோன் கூடவே நின்று ஒரு மாதம் முன்பே படத்தை ரிலீஸ் செய்து விட்டோம். எனவே நேரம் குறைவாக தான் இருந்தது அதற்குள் எல்லோரும் வேலை செய்தாக வேண்டும். மொத்த அணியும் பம்பரமாக சுழன்று தான் இந்த படத்தை திரைக்கு எடுத்து வந்திருக்கிறோம் போதும் எங்கள் அணியை கேட்டால் நாங்கள் செய்ததில் இதுதான் சிறந்த படம் என சொல்ல மாட்டோம். ஒரு சிறந்த படத்திற்கு என்ன உழைப்பை போட வேண்டுமோ அதை அத்தனையும் இந்த படத்தில் போட்டு இருக்கிறோம். ஒரு நல்ல படம் என்ற இடத்திற்கு இதை கொண்டு வந்திருக்கிறோம். ஆனால் இதே அணி மீண்டும் இணையும் பொழுது நிச்சயமாக ஒரு சிறந்த படத்தை கொடுப்போம் இந்த இடத்தில் நான் சொல்லிக் கொள்கிறேன்.”. மாவீரன் விழாவில் சிவகார்த்திகேயன் பேசிய அந்த முழு வீடியோ இதோ…
 

'சூப்பர் ஸ்டார் ரசிகர்களே ரெடியா?'- ரஜினிகாந்தின் அண்ணாத்தக்கு விட்டதை ஜெயிலருக்கு நடத்தும் சன் பிக்சர்ஸ்! வேற லெவல் அப்டேட் இதோ
சினிமா

'சூப்பர் ஸ்டார் ரசிகர்களே ரெடியா?'- ரஜினிகாந்தின் அண்ணாத்தக்கு விட்டதை ஜெயிலருக்கு நடத்தும் சன் பிக்சர்ஸ்! வேற லெவல் அப்டேட் இதோ

சிவகார்த்திகேயனின் நடிப்பிற்கு மாவீரன் பெற்றுக் கொடுத்த தரமான பாராட்டு... வைரலாகும் புது வீடியோ இதோ!
சினிமா

சிவகார்த்திகேயனின் நடிப்பிற்கு மாவீரன் பெற்றுக் கொடுத்த தரமான பாராட்டு... வைரலாகும் புது வீடியோ இதோ!

ஜெயிலர் படத்துடன் மோதும் சிரஞ்சீவியின் வேதாளம் ரீமேக் போலா ஷங்கர்… 'காவாலா' பாணியில் தமன்னாவின் மில்கி பியூட்டி பாடல் இதோ!
சினிமா

ஜெயிலர் படத்துடன் மோதும் சிரஞ்சீவியின் வேதாளம் ரீமேக் போலா ஷங்கர்… 'காவாலா' பாணியில் தமன்னாவின் மில்கி பியூட்டி பாடல் இதோ!