ரூ 100 கோடி வசூலை நெருங்கும் சிவகார்த்திகேயனின் 'மாவீரன்'.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.. விவரம் இதோ..

சிவகார்த்திகேயனின் மாவீரன் வசூல் நிலவரத்தை வெளியிட்ட படக்குழு விவரம் உள்ளே - Sivakarthikeyan Maaveeran Box office collection report out now | Galatta

சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த மாதம் உலகமெங்கும் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற திரைப்படம் ‘மாவீரன்’. மண்டேலா படம் மூலம் ரசிகர்களை கவர்ந்த இயக்குனர் மடோன் அஷ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் மாறுபட்ட கதாபாத்திரத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். மேலும் அவருக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் நடித்துள்ளார். பேண்டசி ஆக்ஷன் திரைப்படமாக உருவான இப்படத்தில்  இயக்குனர் மிஷ்கின், சரிதா, பிரபல தெலுங்கு நடிகர் சுனில், யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மாவீரன் படத்திற்கு மேலும்  சுவாரஸ்யம் கூட்டும் விதமாக படத்தில் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி முக்கியமான கதாபாத்திரதிற்கு குரல் கொடுத்துள்ளார். ஷாந்தி டாக்கீஸ் தயாரிப்பில் உருவான இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் விது அய்யனா ஒளிப்பதிவு செய்ய ஃபிலோமின் ராஜ் படத்தொகுப்பு செய்துள்ளார். மேலும் படத்திற்கு  பரத் ஷங்கர் இசையமைத்துள்ளார்.இவரது இசையில் வெளியான அனைத்து பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி டிரெண்டானது.

கடந்த மாதம் ரசிகர்களின் கொண்டாட்டங்களுடன் திரையரங்குகளில் தமிழில் மாவீரன் மற்றும் தெலுங்கில் ‘மகாவீரடு’ என்ற பெயரில் வெளியான மாவீரன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் வெகுவாக வரவேற்கப்பட்டு, விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் கொண்டாடப்பட்டது. இந்நிலையில் திரைப்படம் வெளியாகி ஒரு மாதம் நிறைவடைந்த நிலையில் மாவீரன் திரைப்படம் உலகளவில் ரூ 89 கோடியை வசூலித்துள்ளதாக படக்குழு தற்போது அறிவித்துள்ளது. கிட்டத்தட்ட ரூ 100 கோடியை நெருங்கும் மாவீரன் படத்தை ரசிகர்கள் இன்றும் கொண்டாடி வருகின்றனர். இதையடுத்து வெளியான பாக்ஸ் ஆபிஸ் தகவல் தற்போது ரசிகர்களால் இணையத்தில் வைரலாகி வருகிறது.

சிவகார்த்திகேயன் நடிப்பில் முன்னதாக வெளியான டாக்டர், டான் ஆகிய திரைப்படங்கள் ரசிகர்களின் மிகப்பெரிய வரவேற்பை பெற்று ரூ 100 கோடியை வசூலித்தது. அதன்பின் தற்போது மாவீரன் அந்த வசூலை நோக்கி பயணித்து கொண்டிருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

மாவீரன் படத்தையடுத்து தற்போது சிவகார்த்திகேயன் உலக நாயகன் கமல் ஹாசன் தயாரிபில் ராஜ் கமல் இன்டர்நேஷனல் தயாரிப்பில் இயக்குனர் ராஜ் குமார் பெரியசாமி இயக்கி வரும் ‘SK21’ படத்தில் நடித்து வருகிறார். தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் படமாக்கப் பட்டு வருகிறது. அதை தொடர்ந்து இயக்குனர் ரவிகுமார் இயக்கத்தில் ஏலியன் கதைகளத்தில் SCI FI திரைப்படமாக உருவாகியிருக்கும் ‘அயலான்’ திரைப்படம் வரும் தீபாவளி பண்டிகையில் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது. அதை தொடர்ந்து இந்தியாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் அவர்களோடு புதிய படத்தில் சிவகார்த்திகேயன் இணைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடதக்கது.

 

Thank you all for making our #Maaveeran/#Mahaveerudu a memorable film and a blockbuster one ❤️❤️❤️

🌟 @Siva_Kartikeyan
🎙️ @VijaySethuOffl / @RaviTeja_offl
🎬 @madonneashwin #VeerameJeyam #DhairiyameJeyam#BlockbusterMaaveeran#BlockbusterMahaveerudu@AditiShankaroflpic.twitter.com/vBB48qkkal

— Shanthi Talkies (@ShanthiTalkies) August 9, 2023