"நெல்சன் படத்துல நடிக்கறது ரொம்ப கஷ்டம்." ஜெயிலர் படம் குறித்து நடிகை ரம்யா கிருஷ்ணன் - சுவாரஸ்யமான தகவல் கொண்ட Exclusive Interview இதோ..

ஜெயிலர் படத்தில்  நடித்தது குறித்து நடிகை ரம்யா கிருஷ்ணன் பகிர்ந்த தகவல் - Actress ramya Krishnan about director nelson in jailer | Galatta

கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து நாளை உலகமெங்கும் பிரம்மாண்டமாக வெளியாகவிருக்கும் திரைப்படம் ‘ஜெயிலர்’. அதிரடி ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த இப்படத்தில் ரஜினிகாந்த் உடன் இணைந்து மலையாள நடிகர் மோகன் லால், தெலுங்கு நடிகர் சுனில், இந்தி நடிகர் ஜாக்கி ஷராப் மற்றும் கன்னட நடிகர் சிவராஜ் குமார் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மேலும்  இவர்களுடன் நடிகர்கள் தமன்னா, ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, மிர்னா, யோகி பாபு, விநாயகன், ரெடின் கிங்க்ஸ்லி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் கலாநிதி மாறன் தயாரிக்கும் இப்படத்திற்கு ராக்ஸ்டார் அனிருத் இசையமைத்துள்ளார். இவரது இசையில் முன்னதாக வெளியான பாடல்கள் அனைத்தும் தற்போது பட்டி தொட்டி எங்கிலும் ஒலித்துக் கொண்டிருக்கிறது. குறிப்பாக ‘காவலா’, ‘ஹுக்கும்’ பாடல்கள் தனி டிரெண்டில் இருந்து வருகிறது. இந்நிலையில் நாளை (ஆகஸ்ட் 10) உலகமெங்கும் ரசிகர்களின் எதிர்பார்ப்பின் மத்தியில் வெளியாகவுள்ள ஜெயிலர் படத்தின் முன்பதிவு ஏற்கனவே மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில் ஜெயிலர் பட வெளியீட்டிற்கு ரசிகர்கள் ஆவலுடன் இருந்து வருகின்றனர்..

இந்நிலையில் நமது கலாட்டா பிளஸ் சிறப்பு பேட்டியில் பிரபல நடிகை ரம்யா கிருஷ்ணன் கலந்து கொண்டு சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளியாகவிருக்கும் ‘ஜெயிலர்’ படம் குறித்தும் தன் திரைப்பயணம் குறித்தும் பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார். அதில் இயக்குனர் நெல்சன் உடன் பணியாற்றிய அனுபவம் குறித்து பேசிய இவர்,

"விக்னேஷ் சிவன் பிறந்தநாள் விழாவில் தான் நான் நெல்சனை பார்த்தேன்‌.‌ அப்போ கோலமாவு கோகிலா நல்லா இருந்தது னு சொன்னேன். அதன்பின் கலாட்டா விருது விழாவில் பார்த்தேன்‌.  அப்போ அவர் சொன்னார் 'உங்களை கூடிய சீக்கிரம் சந்திப்பேன் ' என்று.. அதன்பின் கொஞ்சம் நாள் கழிச்சு வந்தார். ஜெயிலர் கதை சொன்னார்.

நெல்சன் காமெடி நடிகர்களிடம் இருந்து சில விஷயங்களை நுணுக்கமாக வாங்கி விடுவார். அற்புதமான நகைச்சுவைகளை எளிமையாக கொண்டு வந்துவிடுவார். நடிகர்கள் சீரியஸா நடிச்சுட்டு இருப்பாங்க. இங்க ரசிகர்கள் சிரிப்பாங்க.. அது அவருக்கே உரித்தான ஸ்டைல்.! டிரேட் மார்க்.. சில காட்சிகளெல்லாம் நான் சிரிச்சிட்டே இருந்தேன். அதனால் தான் ரொம்ப கஷ்டபட்டேன் நடிக்கறதுக்கு.. ரஜினி சாரும் இந்த மாதிரி காமெடி பண்ணும் போது சிரிப்பாகவும் அழகாவும் இருந்தது.." என்றார் நடிகை ரம்யா கிருஷ்ணன்.

மேலும் தொடர்ந்து, "புது புது இயக்குனர்கள் இது போன்ற விஷயங்களை கொண்டு வருவது நல்லாருக்கு.‌ புதிய சிந்தனைகளில் நாம் ஒரு பங்காக இருப்பதும் அருமையான விஷயம். " என்றார் நடிகை ரம்யா கிருஷ்ணன்.

மேலும் தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் படம் குறித்து நடிகை ரம்யா கிருஷ்ணன் பகிர்ந்து கொண்ட சுவாரஸ்யமான தகவல் அடங்கிய முழு வீடியோ இதோ..