“நான்தான் பாட போறேன்னே எனக்கு தெரியாது..” துருவ நட்சத்திரம் பாடல் குறித்து சுவாரஸ்யமான தகவலை பகிர்ந்த பால் டப்பா.. – Exclusive Interview இதோ..

சியான் விக்ரமின் துருவ நட்சத்திரம் பாடல் குறித்து பால் டப்பா பகிர்ந்த தகவல் – Paal dabba about dhruva natchathiram making | Galatta

நீண்ட கால ரசிகர்களின் எதிர்பார்ப்பின் மத்தியில் உருவாகி வரும் திரைப்படம் ‘துருவ நட்சத்திரம்’. சியான் விக்ரம் – இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் கூட்டணியில் ஸ்டைலிஷ் ஆக்ஷன் திரைப்படமாக கடந்த 2016 ல்  உருவான இப்படம் பல்வேறு காரணங்களினால் ரிலீஸ்க்கு தாமதமானது. அதன்பின் மீண்டும் திரைபடத்தை வெளியிட படக்குழு முடிவு செய்து பல்வேறு கட்டங்களாக படப்பிடிப்பு நடைபெற்றது.

அதன்படி கடந்த மார்ச் மாதம் துருவ நட்சத்திரம் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. படத்தின் அறிவிப்பிலிருந்தே படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து வந்தது. அதன்படி படத்தின் டீசர், மற்றும் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் இடம் பெற்ற முதல் பாடல் ஆகியவை படத்திற்கு கூடுதல் எதிர்பார்ப்பை கொடுத்தது. ஆறு ஆண்டுகளுக்கு பிறகு முழு வீச்சுடன் நடைபெறும் துருவ நட்சத்திரம் படம் தற்போது ரிலீஸ்க்கு தயாராகி வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் படத்தில் இடம் பெற்ற இரண்டாவது பாடலை படக்குழு சமீபத்தில் வெளியிட்டது.  “ஹிஸ் நேம் இஸ் ஜான்” எனும் பாடல்  தற்போது மத்தியில் அதிகம் கவனத்தை ஈர்த்து இணையத்தில் டிரெண்டிங்கில் இருந்து வருகிறது.

இந்நிலையில் நமது கலாட்டா தமிழ் சிறப்பு பேட்டியில் துருவ நட்சத்திரம் படத்தின் ‘ஹிஸ் நேம் இஸ் ஜான்’ என்ற பாடலை எழுதி பாடிய  சொல்லிசை கலைஞரும் பாடலாசிரியருமான பால் டப்பா அவர்கள் பாடல் குறித்து பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார். பேட்டியில் அவர் பேசியதாவது,  "துருவ நட்சத்திரம் படத்துக்கு பாட்டு எழுதனும் னு சொல்லி கௌதம் சார் மீட் பண்ண கூப்டார்.  எனக்கு அவரை பார்த்ததுமோ சந்தோஷமா ஆகிட்டேன். இந்த பாட்டு வேகமா எழுதிட்டேன். சார் என்ன வேண்டும்னு சொன்னார். நானும் சில விஷயங்கள் கேட்டு வாங்கிட்டேன். அன்னிக்கு நைட் எழுதுனேன்.‌அடுத்த நாள் காலையில எழுதி அனுப்பிட்டேன். டெஸ்ட் ரெக்காரிடிங்காக என் குரல் எடுத்தாங்க.. பார்த்தா அவங்க உண்மையாவே ரெக்கார்ட் பண்ணிட்டாங்க..  எனக்கு நான்தான் பாட போறேன்னே தெரியாது. அப்பறம் ஹாரிஸ் சார்கிட்ட கேட்டு தெரிஞ்சிக்கிட்டேன்.." என்றார் பால் டப்பா..

அதை தொடர்ந்து “His name is John பாட்டு ரெக்கார்ட் பண்ணிட்டு கௌதம் சாருக்கு அனுப்புனதும் அவருக்கு ரொம்ப பிடிச்சிடுச்சு.. அவர் பெருசா மாற்றம் எதுவும் சொல்ல.. நான் விக்ரம் சார் பக்கம் இருந்து பாட்டு எழுதுனேன்.‌ அவர் இயக்குனர் சொல்றா மாதிரி வேண்டும் னு கேட்டார். அதை தவிர வேற எதுவும் சொல்லல.. என்ன தோணுதோ அதை எழுத சொன்னாங்க.. அதனால் ரொம்ப அழுத்தமா இல்ல. இலகுவா போச்சு.." என்றார் பால் டப்பா..

ஒன்றாக என்டர்டைன்மென்ட், கொண்டாடுவோம் என்டர்டைன்மென்ட் & எஸ்கேப் ஆர்டிஸ்ட் மோஷன் பிக்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தில் சியான் விக்ரம் கதாநயாகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் ரிது வர்மா நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் இயக்குனர் பார்த்திபன், சிம்ரம், திவ்யதர்ஷினி DD, விநாயகன், அர்ஜுன் தாஸ், ராதிகா சரத்குமார், வம்சி கிருஷ்ணா, சதீஷ் கிருஷ்ணன், அபிராமி வெங்கடாசலம் மற்றும் முன்னா சைமன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். விரைவில் துருவ நட்சத்திரம் திரைப்படம் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சொல்லிசை கலைஞர் மற்றும் துருவ நட்சத்திரம் பாடலாசிரியர் பால் டப்பா அவர்கள் துருவ நட்சத்திரம் படம் குறித்து பகிர்ந்து கொண்ட தகவல் இதோ..

 

“எல்லா சண்டையும் 15 நாள் எடுத்துச்சு..” சிவகார்த்திகேயனின் மாவீரன் படம் குறித்து நடிகர் அருவி மதன்.. – சுவாரஸ்யமான தகவல் கொண்ட Exclusive interview இதோ..
சினிமா

“எல்லா சண்டையும் 15 நாள் எடுத்துச்சு..” சிவகார்த்திகேயனின் மாவீரன் படம் குறித்து நடிகர் அருவி மதன்.. – சுவாரஸ்யமான தகவல் கொண்ட Exclusive interview இதோ..

தளபதி விஜயின் ‘லியோ’ படத்திற்கு பின் மீண்டும் லோகேஷ் கனகராஜ், ரத்னகுமார் கூட்டணி.. இணையத்தை கலக்கும் அப்டேட் இதோ..
சினிமா

தளபதி விஜயின் ‘லியோ’ படத்திற்கு பின் மீண்டும் லோகேஷ் கனகராஜ், ரத்னகுமார் கூட்டணி.. இணையத்தை கலக்கும் அப்டேட் இதோ..

“வீரமே ஜெயம்.” சிவகார்த்திகேயனின் ‘மாவீரன்’ வென்றதா.? – ட்விட்டர் விமர்சனம் உள்ள..
சினிமா

“வீரமே ஜெயம்.” சிவகார்த்திகேயனின் ‘மாவீரன்’ வென்றதா.? – ட்விட்டர் விமர்சனம் உள்ள..