“வயசாயிடுச்சு.. அதனால லவ் படமெல்லாம் வேண்டாம்..” தனுஷ் பகிர்ந்த தகவல்.. வைரல் வீடியோ உள்ளே..

காதல் படங்களில் நடிப்பது குறித்து நடிகர் தனுஷ் அளித்த பதில் - Dhanush about acting in love films | Galatta

தென்னிந்தியாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் தனுஷ். எந்த கதாபாத்திரம் கொடுத்ததாலும் நேர்த்தியான நடிப்பை கொடுத்து ரசிகர்களின் மனதை கவர்ந்து பல ஆண்டுகளாக தமிழ் சினிமாவின் முன்னணி நாயகர்களில் ஒருவராக இருந்து வருகிறார்.  வசூல் குவிக்குமளவு காமர்ஷியல் திரைப்படங்கள் ஒருபுறமும் விருதுகள் குவிக்கும் திரைப்படங்கள் ஒரு புறம் என ரசிகர்களுக்கும் திரையுலகிற்கும் சமமான திரைப்படங்களை கொடுத்து வருகிறார். நடிகர் தனுஷ் தமிழ் மட்டுமல்லாமல் தற்போது தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளிலும் பிரபலமாகி அதிகம் பேசப்பட்டு வருகிறார். கடந்த ஆண்டு தனுஷ் நடிப்பில் தமிழில் மாறன், திருச்சிற்றம்பலம், நானே வருவேன் ஆகிய திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை மகிழ்வித்தது. மேலும் ஹாலிவுட்டில் பிரபல அவேஞ்சர்ஸ் பட இயக்குனர்கள் கூட்டணியில் தனுஷ் நடித்து வெளியான ‘கிரே மேன்’ திரைப்படமும் உலகளவில் கவனம் ஈர்த்தது.  தொடர் ஹிட்டுகளை தொடர்ந்து தனுஷ் நடிப்பில் இந்த ஆண்டு வெளியான திரைப்படம் ‘வாத்தி’. தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகி வெளியான வாத்தி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது மட்டுமல்லாமல் வசூலிலும் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் அடித்தது.

தற்போது நடிகர் தனுஷ் ராக்கி, சாணி காகிதம் போன்ற திரைப்படங்களை இயக்கி கவனம் பெற்ற இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ‘கேப்டன் மில்லர்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். அட்டகாசமான ஆக்ஷன் திரைப்படமாக உருவாகி வரும் கேப்டன் மில்லர் திரைப்படம் இந்த ஆண்டு இறுதிக்குள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. இந்த படத்தையடுத்து தனுஷ் அவர்கள் அவரது 50 வது படமான ‘D50’ யை அவரே இயக்கி நடிக்கவுள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.

தொடர்ந்து பல படங்களில் பிஸியாக நடித்து வரும் நடிகர் தனுஷ் ஏ ஆர் ரஹ்மான் உடன் இணைந்து மரியான் திரைப்படம் 10 ஆண்டு நிறைவு செய்ததை கொண்டாடு விதத்தில் நேரலையில் வந்திருந்தனர். தனுஷ் , ஏ ஆர் ரஹ்மான் நேரலையில் மரியான் பட நாயகி பார்வதி, இயக்குனர் பரத் பாலா மற்றும் பாடகர் விஜய் பிரகாஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நேரலையில் மரியான் திரைப்படத்தின் அனுபவம் மற்றும் உருவான விதம் குறித்து பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் இயக்குனர் பரத் பாலா தனுஷிடம் “நீங்கள் மீண்டும் முழு நீள காதல் படத்தில் நடிக்க வேண்டும்." என்று கேட்க அதற்க்கு தனுஷ், “காதல் படங்களெல்லாம் வரும் தலைமுறை நடிகர்கள் பண்ணலாம் சார். இப்போது எனக்கு 4 வயசு ஆகிடுச்சி..” என்றார். அதை அதை தொடர்ந்து இயக்குனர் பரத் பாலா, "காதல் படம் லாம் வேண்டும் அது எல்லாம் ஆக்சிஜன் போன்றது .. " என்று சொல்ல அதற்கு நடிகர் தனுஷ், “அப்போ குழந்தைகள் காதல், அம்மா காதல்” னு போய்டலாம் சார்" என்று சிரித்தபடி பதிலளித்தார். தற்போது தனுஷ் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

 

View this post on Instagram

A post shared by ARR (@arrahman)

“வீரமே ஜெயம்.” சிவகார்த்திகேயனின் ‘மாவீரன்’ வென்றதா.? – ட்விட்டர் விமர்சனம் உள்ள..
சினிமா

“வீரமே ஜெயம்.” சிவகார்த்திகேயனின் ‘மாவீரன்’ வென்றதா.? – ட்விட்டர் விமர்சனம் உள்ள..

“அதிரனும் டா..” ஜிவி பிரகாஷ் இசையில் அதிரடியான பாடலை பாடிய டி ராஜேந்தர்..  - ‘மார்க் ஆண்டனி’ படக்குழு கொடுத்த அட்டகாசமான சர்ப்ரைஸ்..
சினிமா

“அதிரனும் டா..” ஜிவி பிரகாஷ் இசையில் அதிரடியான பாடலை பாடிய டி ராஜேந்தர்.. - ‘மார்க் ஆண்டனி’ படக்குழு கொடுத்த அட்டகாசமான சர்ப்ரைஸ்..

பிரபல திரைப்பட தயாரிப்பாளர் எஸ் ஏ ராஜ்கண்ணு காலமானார்.. பாரதிராஜா, ராதிகா உள்ளிட்ட பிரபலங்கள் உருக்கம்..
சினிமா

பிரபல திரைப்பட தயாரிப்பாளர் எஸ் ஏ ராஜ்கண்ணு காலமானார்.. பாரதிராஜா, ராதிகா உள்ளிட்ட பிரபலங்கள் உருக்கம்..