கைதி & மாஸ்டர் அர்ஜுன் தாஸ் - இயக்குனர் வசந்த பாலனின் "அநீதி"... ரசிகர்களை கவர்ந்த SNEAK PEEK வீடியோ இதோ!

வசந்த பாலன் - அர்ஜுன் தாசின் அநீதி பட SNEAK PEEK வீடியோவெளியீடு,vasanthabalan arjun das in aneethi movie sneak peek video out now | Galatta

இயக்குனர் வசந்தபாலன் இயக்கத்தில் முதல்முறையாக நடிகர் அர்ஜுன் தாஸ் இணைந்து நடித்திருக்கும் அனைத்து திரைப்படத்திலிருந்து முக்கியமான ஸ்னீக் பீக் வீடியோ ஒன்று தற்போது வெளியானது. தமிழ் சினிமாவின் மிக முக்கிய இயக்குனர்களில் ஒருவராக தரமான படைப்புகளை வழங்கி ரசிகர்களின் மனதில் தனக்கென தனி இடம் பிடித்தவர் இயக்குனர் வசந்தபாலன் பிரம்மாண்ட இயக்குனர் சங்கரின் உதவி இயக்குனரான வசந்த பாலன் கடந்த 22 ஆம் ஆண்டு வெளிவந்த ஆல்பம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானவர். இதனை அடுத்து கடந்த 26 ஆம் ஆண்டு இயக்குனர் வசந்தபாலன் இயக்கத்தில் பரத் மற்றும் பசுபதி நடித்து வெளிவந்த வெயில் திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றதோடு தேசிய விருது உட்பட பல விருதுகளும் வென்றது. அடுத்ததாக இதுவரை யாரும் பெரிதும் பேசிடாத ஒரு கதைக்களமாக வசந்தபாலன் கையில் எடுத்த அங்காடி தெரு மக்களின் மனதோடு உரையாடி மிகப்பெரிய வெற்றி பெற்றதோடு விமர்சன ரீதியாக பலர் இது பாராட்டுகளையும் குவித்தது.

தொடர்ந்து காவல் கோட்டம் நாவலை தழுவி பக்கா பீரியட் படமாக இயக்குனர் வசந்தபாலன் இயக்கிய அரவான் திரைப்படமும் கவனத்தை ஈர்க்க, அடுத்ததாக தனது அடுத்த பீரியட் படமாக இயக்கிய திரைப்படமான காவியத் தலைவன் திரைப்படமும் நல்ல வரவேற்ப்பை பெற்றது. குறிப்பாக காவியத்தலைவன் திரைப்படத்திற்கு இசையமைத்த ஏ.ஆர்.ரஹ்மான் தனது இசையால் ரதிகர்களுக்கு மிகப்பெரிய விருந்து வைத்தார். இந்த வரிசையில் கடைசியாக இயக்குனர் வசந்தபாலன் இயக்கிய ஜெயில் திரைப்படம் கடந்த 2021 ஆம் ஆண்டு ரிலீஸானது. இதனிடையே இயக்குனர் வசந்த பாலனின் அடுத்த முக்கியமான படமாக வெளிவர இருக்கும் திரைப்படம் தான் அநீதி. இயக்குனர் லோகேஷ் கனகராஜின் கைதி மற்றும் மாஸ்டர் திரைப்படங்களில் கவனம் ஈர்த்த நடிகர் அர்ஜுன் தாஸ் கதையின் நாயகனாக நடித்திருக்கும் அநீதி திரைப்படத்தில், இயக்குனர் பா.ரஞ்சித்தின் சார்பட்டா பரம்பரை மற்றும் நட்சத்திரம் நகர்கிறது படங்களின் நாயகி துஷாரா விஜயன் கதாநாயகியாக நடித்துள்ளார். 

மேலும் அர்ஜுன் சிதம்பரம், வனிதா விஜயகுமார், பிக் பாஸ் பரணி, ஷா ரா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கும் அநீதி திரைப்படத்தை அர்பன் பாய்ஸ் ஸ்டுடியோஸ் சார்பில் M.கிருஷ்ண குமார், முருகன் ஞானவேல், வரதராஜன் மாணிக்கம், G.வசந்தபாலன் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். A.M.எட்வின் சாகே ஒளிப்பதிவில், ரவிக்குமார்.M படத்தொகுப்பு செய்திருக்கும் அநீதி திரைப்படத்தின் வசனங்களை S.K.ஜீவா எழுதியுள்ளார். ஜீவி பிரகாஷ் குமார் அவர்கள் இசையமைத்திருக்கும் அநீதி திரைப்படத்தில் மறைந்த பாடலாசிரியர் நா.முத்துக்குமார் அவர்களின் கவிதைகளை பாடல்களில் பயன்படுத்தியுள்ளனர். மேலும் கார்த்திக் நேத்தா மற்றும் ஏகாதேசி பாடல்களை எழுதியுள்ளனர். பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் அவர்கள் தனது S பிக்சர்ஸ் சார்பில் வழங்கும் அநீதி திரைப்படம் நாளை ஜூலை 21 ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. இந்த நிலையில் அநீதி திரைப்படத்தின் புதிய ஸ்னீக் பீக் வீடியோவை பட குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர். சமூக வலைத்தளங்களில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த அநீதி திரைப்படத்தின் மிரட்டலான அந்த ஸ்னீக் பீக் வீடியோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்.
 

'விஜய் அண்ணா உழைப்பை சொல்ல வார்த்தைகளே இல்லை!'- லியோ பற்றி லோகேஷ் கனகராஜின் அதிரடி Exclusive பேட்டி! ட்ரெண்டிங் வீடியோ இதோ
சினிமா

'விஜய் அண்ணா உழைப்பை சொல்ல வார்த்தைகளே இல்லை!'- லியோ பற்றி லோகேஷ் கனகராஜின் அதிரடி Exclusive பேட்டி! ட்ரெண்டிங் வீடியோ இதோ

விஜய் ஆண்டனியின் சஸ்பென்ஸ் த்ரில்லர் கொலை படம் உருவானது எப்படி?- படக்குழு வெளியிட்ட சுவாரஸ்யமான மேக்கிங் வீடியோ இதோ!
சினிமா

விஜய் ஆண்டனியின் சஸ்பென்ஸ் த்ரில்லர் கொலை படம் உருவானது எப்படி?- படக்குழு வெளியிட்ட சுவாரஸ்யமான மேக்கிங் வீடியோ இதோ!

தளபதி விஜயின் லியோ படத்துடன் கைகோர்த்த தனுஷின் சூப்பர் ஹிட் பட தயாரிப்பு நிறுவனம்... ரிலீஸ் பற்றிய அட்டகாசமான புது அறிவிப்பு!
சினிமா

தளபதி விஜயின் லியோ படத்துடன் கைகோர்த்த தனுஷின் சூப்பர் ஹிட் பட தயாரிப்பு நிறுவனம்... ரிலீஸ் பற்றிய அட்டகாசமான புது அறிவிப்பு!